S.Ve.Shekar: படிப்பு ரொம்ப முக்கியம்.. டிராமாவை தொழிலாக நினைத்தால் ஒன்றும் கிடைக்காது.. எஸ்.வி.சேகர் பேட்டி
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  S.ve.shekar: படிப்பு ரொம்ப முக்கியம்.. டிராமாவை தொழிலாக நினைத்தால் ஒன்றும் கிடைக்காது.. எஸ்.வி.சேகர் பேட்டி

S.Ve.Shekar: படிப்பு ரொம்ப முக்கியம்.. டிராமாவை தொழிலாக நினைத்தால் ஒன்றும் கிடைக்காது.. எஸ்.வி.சேகர் பேட்டி

Jan 24, 2025 04:22 PM IST Marimuthu M
Jan 24, 2025 04:22 PM , IST

  • S.Ve.Shekher - படிப்பு ரொம்ப முக்கியம் என்றும்; டிராமாவை தொழிலாக நினைத்தால் ஒன்றும் கிடைக்காது எனவும் வசந்த் டிவியின் காட் ஃபாதர் நிகழ்ச்சியில் எஸ்.வி.சேகர் பேட்டி அளித்திருக்கிறார்.

S.Ve.Shekher - நகைச்சுவை நடிகர் எஸ்.வி.சேகர் தனது தந்தை குறித்து, வசந்த் டிவியின் காட் ஃபாதர் நிகழ்ச்சியில் பேட்டியளித்திருக்கிறார்.அதில் எஸ்.வி.சேகர் அளித்த பேட்டியில், ‘’அப்பா எப்போதுமே என் அம்மாகிட்ட சொல்றவிஷயம், அவனுக்கு விருப்பம் என்றால் அவனை அதை செய்யவிட்டுடுவோம். நேர்மையாகத்தானே சம்பாதிக்குறான். அவன் யாரையும் ஏமாத்தலையே அப்படின்பார்.என்னுடைய வாழ்க்கையின் பெரிய பிளஸ் என்று நான் நினைக்கிறதும் ஒரு பைசாவும் கடன் இல்லாத வாழ்க்கையை வாழ்ந்திட்டு இருக்கேன். கடனோடு வாழ்றது ரொம்பக் கஷ்டம். நான் போனில் நம்பர் எல்லாம் பார்க்கமாட்டேன். போன் அடித்தால் எடுத்துவிடுவேன். கடன்காரன் போன் அடித்தால் குளிக்கச்சொல்லு அப்படின்னு சொல்வார்கள் சிலர். அது எனக்கு கிடையாது''

(1 / 6)

S.Ve.Shekher - நகைச்சுவை நடிகர் எஸ்.வி.சேகர் தனது தந்தை குறித்து, வசந்த் டிவியின் காட் ஃபாதர் நிகழ்ச்சியில் பேட்டியளித்திருக்கிறார்.

அதில் எஸ்.வி.சேகர் அளித்த பேட்டியில், ‘’அப்பா எப்போதுமே என் அம்மாகிட்ட சொல்றவிஷயம், அவனுக்கு விருப்பம் என்றால் அவனை அதை செய்யவிட்டுடுவோம். நேர்மையாகத்தானே சம்பாதிக்குறான். அவன் யாரையும் ஏமாத்தலையே அப்படின்பார்.

என்னுடைய வாழ்க்கையின் பெரிய பிளஸ் என்று நான் நினைக்கிறதும் ஒரு பைசாவும் கடன் இல்லாத வாழ்க்கையை வாழ்ந்திட்டு இருக்கேன். கடனோடு வாழ்றது ரொம்பக் கஷ்டம். நான் போனில் நம்பர் எல்லாம் பார்க்கமாட்டேன். போன் அடித்தால் எடுத்துவிடுவேன். 

கடன்காரன் போன் அடித்தால் குளிக்கச்சொல்லு அப்படின்னு சொல்வார்கள் சிலர். அது எனக்கு கிடையாது''

‘’இப்படிதான் ஒருத்தருக்கு ஒரு லட்சம் ரூபாய் கடன் கொடுத்திட்டு, அவருக்கு போன் பண்ணும்போது எல்லாம் அவரது மனைவி தூங்குறார்னு சொல்வாங்க. அப்போது நான் கேட்டேன், எழுப்பிப் பாருங்க கோமாவில் இருந்திறாப்போறானு. ஒருவர் எப்படி அவ்வளவு நேரம் தூங்க முடியும். எங்கப்பா காலையில் எழுந்ததும் பல் துலக்கிட்டு, சாமி ரூமில் போய் விபூதி போட்டுட்டுப் போவார். அடுத்து குளிச்சிட்டு பூஜை முடிச்சிட்டு வீட்டைவிட்டு வெளியில் போகணும்.இப்படி சாயங்காலமும் நைட்டும் இறைவழிபாடு செய்யணும். இதை நான் எங்கப்பாகிட்ட இருந்து கத்துக்கிட்டேன். நாம் விபூதி இட்டுக்கணும். அதற்காகப் பார்க்கிறவங்க எல்லோரையும் விபூதி இடணும்னு அவசியம் கிடையாது''.

(2 / 6)

‘’இப்படிதான் ஒருத்தருக்கு ஒரு லட்சம் ரூபாய் கடன் கொடுத்திட்டு, அவருக்கு போன் பண்ணும்போது எல்லாம் அவரது மனைவி தூங்குறார்னு சொல்வாங்க. அப்போது நான் கேட்டேன், எழுப்பிப் பாருங்க கோமாவில் இருந்திறாப்போறானு. ஒருவர் எப்படி அவ்வளவு நேரம் தூங்க முடியும். எங்கப்பா காலையில் எழுந்ததும் பல் துலக்கிட்டு, சாமி ரூமில் போய் விபூதி போட்டுட்டுப் போவார். அடுத்து குளிச்சிட்டு பூஜை முடிச்சிட்டு வீட்டைவிட்டு வெளியில் போகணும்.

இப்படி சாயங்காலமும் நைட்டும் இறைவழிபாடு செய்யணும். இதை நான் எங்கப்பாகிட்ட இருந்து கத்துக்கிட்டேன். நாம் விபூதி இட்டுக்கணும். அதற்காகப் பார்க்கிறவங்க எல்லோரையும் விபூதி இடணும்னு அவசியம் கிடையாது''.

நீங்கள் 24 மேடை நாடகங்கள், 7ஆயிரம் ஷோக்கள் உலகம் முழுதும் பண்ணியிருக்கீங்க. அதில் நிறைய அவார்டு வாங்கியிருக்கீங்க. அதில் மறக்கமுடியாதது பற்றி?என்னுடைய 3ஆயிரமாவது நாடக மேடையில் எஸ்.வி.சேகரின் அப்பா வெங்கட்ராமன் என்பதுவே எனக்குப் பெருமைன்னு என் அப்பா சொன்னார். இது போதும் எனக்கு. அப்பா இறந்தபோது, அவரது டைரியைப் பார்க்கிறோம். ஒரு தந்தையாக, சகோதரனாக, கணவனாக, தாத்தாவாக, எல்லோருக்கும் பிடித்த சமூக சேவையாற்றும் நபராக நிறைவான வாழ்க்கை வாழ்ந்துவிட்டு போனவர், எஸ்.வெங்கட் ராமன் என தான் இறந்தால் இதைக்கொடுங்கன்னு சொல்லியிருக்கிறார். 

(3 / 6)

நீங்கள் 24 மேடை நாடகங்கள், 7ஆயிரம் ஷோக்கள் உலகம் முழுதும் பண்ணியிருக்கீங்க. அதில் நிறைய அவார்டு வாங்கியிருக்கீங்க. அதில் மறக்கமுடியாதது பற்றி?

என்னுடைய 3ஆயிரமாவது நாடக மேடையில் எஸ்.வி.சேகரின் அப்பா வெங்கட்ராமன் என்பதுவே எனக்குப் பெருமைன்னு என் அப்பா சொன்னார். இது போதும் எனக்கு. அப்பா இறந்தபோது, அவரது டைரியைப் பார்க்கிறோம். ஒரு தந்தையாக, சகோதரனாக, கணவனாக, தாத்தாவாக, எல்லோருக்கும் பிடித்த சமூக சேவையாற்றும் நபராக நிறைவான வாழ்க்கை வாழ்ந்துவிட்டு போனவர், எஸ்.வெங்கட் ராமன் என தான் இறந்தால் இதைக்கொடுங்கன்னு சொல்லியிருக்கிறார். 

‘’அப்படி குறைவில்லாமல் வாழ்ந்திட்டுப் போனவர், அப்பா. அப்பா கடன் கொடுத்து திரும்பி வாங்காததுதான் ஜாஸ்தி. எஸ்.வெங்கட்ராமன் அப்படின்னா, ரோஜா படத்தில் வெள்ளைப் பனியாரம் கொடுத்தாங்களே அவரான்னு கேட்பாங்க. அதே மாதிரி டிவி புரொடியூசர் சங்கம் ஆரம்பித்து, அதில் அப்பா தான் தலைவராக இருந்தார். சித்ரதர்ஷன் அப்படிங்கிற ஃபிலிம் அசோசியேசன் ஆரம்பிச்சார். என்னை உலகப்படங்கள் எல்லாம் பார்க்க அனுமதிச்சார்''.

(4 / 6)

அதேபோல் என் மகனை ஊக்குவிக்கவும் கத்துக்கிட்டேன். படிக்கிற வரை அவனை நடிக்கவே விடலை. என் பையன் படிச்சு முடிச்சபிறகு தான் நடிச்சான். படிப்பு ரொம்ப முக்கியம். அதனால் தான், என்னுடைய நாடகக் குழுவில் படிக்கும் பசங்கள சேர்க்கமாட்டேன். தொழில் முக்கியம். இதையே தொழிலாக நினைச்சுட்டு வந்தால் டிராமாவில் என்ன கிடைக்கும். ஒன்னுமே கிடைக்காது. நேர்மையான வாழ்க்கை வாழ ஆசைப்பட்டார் என் அப்பா. வாழ்க்கையில் அப்பா என்பது ஒரு விசிட்டிங் கார்டு. என் பையன் மூன்று படங்கள் நடிச்சிருக்கான். கொஞ்சம் கேப். நாலாவது படம் வர ஆரம்பிச்சிருச்சு. 

(5 / 6)

‘’அந்தப் பொறுமை இருக்கணும். படம் இல்லையா, உடனே, தண்ணி அடிக்கிறதுன்னு போனால், முகம் இன்னும் வீங்கி போயிடும். என் பையன் அஸ்வின் கிட்ட சொன்னது படமிருந்தால் சூட்டிங் போ, படம் இல்லைன்னா, சினிமா பார்க்கப்போ. சினிமா துறைக்குள்ளேயே இருக்கணும். எனக்கு அப்படியில்லை. விட்டால் டிராமா போயிடுவேன். இல்லைன்னா, டிவி. முதல் சீரியல் புரொடக்‌ஷன் வண்ணக்கோலங்கள் எங்கப்பா தான் புரொடியூசர். 11 தடவை மறு ஒளிபரப்பு ஆன ஒரு சீரியல், வண்ணக்கோலங்கள்'' எனப் பேசிமுடித்தார், எஸ்.வி.சேகர்.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்