ஸ்ரீகாந்திற்கு வந்த சோதனை! கலாய்க்கும் நெட்டிசன்கள்! நம்ம லெஜண்ட்டோட லேடி வெர்ஷன் பா!
- கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான தினசரி படத்தின் பாடலால் நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் அப்படத்தின் கதாநாயகி சில்வியா ஆகியோரை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
- கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான தினசரி படத்தின் பாடலால் நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் அப்படத்தின் கதாநாயகி சில்வியா ஆகியோரை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
(1 / 6)
தமிழில் 2002 ஆம் ஆண்டு ரோஜாக்கூட்டம் திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் ஸ்ரீகாந்த், இதனைத் தொடர்ந்து ஏப்ரல் மாதத்தில், மனசெல்லாம் என பல படங்களில் நடித்து சாக்லேட் பாய் ஹீரோவாக வலம் வந்தார். அன்றைய தமிழ் சினிமாவில் ஹேண்ட்ஸம் ஹீரோக்களின் வரிசையில் ஸ்ரீகாந்திற்கும் ஒரு இடம் இருந்தது.
(2 / 6)
கடந்த சில நாட்களுக்கு முன் ஸ்ரீகாந்த் மற்றும் இந்த புகைப்படத்தில் இருக்கும் சில்வியா என்பவர் இணைந்து நடித்த தினசரி படத்தின் பாடல் வெளியானது. இப்படத்திற்கு இசைஞானி இளையாராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் தயாரிப்பாளர் சில்வியா தான் ஹீரோயினாகவும் நடித்துள்ளார். (Instagram)
(3 / 6)
இந்த நிலையில் இந்த பாடலை பார்த்த இணைய வாசிகள் பலர் இந்த ஹீரோயினை கலாய்த்து வருகின்றனர். இந்த பாடல் கேட்க கேட்க மிகவும் சிறப்பாக உள்ளதாகவும் ஆனால் இந்த ஹீரோயினிற்கு நடனம் ஆடத் தெரியவவில்லை எனவும் தெரிவித்து வருகின்றனர்.
(4 / 6)
தினசரி படத்தை இயக்குனர் ஜி. சங்கர் இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரேம்ஜி, எம். எஸ். பாஸ்கர், ராதாரவி உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படம் குறித்தான ஷூட்டிங் புகைப்படங்களை படத்தின் கதாநாயகியும், தயாரிப்பாளருமான சில்வியா அவ்வப்போது அவரது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். (Instagram)
(5 / 6)
இப்படத்தின் கதாநாயகி தயாரிப்பாளர் என்ற காரணத்தினால் மட்டுமே நடிக்க முடிந்ததாகவும் இணைய வாசிகள் தெரிவிக்கின்றனர். மேலும் இப்பட பாடலின் யூடியூப் வீடியோவிலும் நக்கல் கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர். (Instagram)
மற்ற கேலரிக்கள்