Cine Special: கொட்டுக்காளி மட்டுமல்ல.. பின்னணி இசை இல்லாமல் உருவாகி இருக்கும் இந்த படங்களையும் மிஸ் செய்யாம பாருங்க
- சினிமாக்களில் புதுமையான முயற்சிகள் என்பது வழக்கமான விஷயம் தான் என்றாலும், சில புதுமைகள் காலத்தால் அழியாத விஷயமாகவே இருக்கும். அந்த வகையில் சினிமாவில் இயக்குநருக்கு அடுத்த அடிநாதமாக இருந்து வரும் இசையமைப்பாளர் இல்லாமல் உருவாகி வெளியான படங்கள் எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்
- சினிமாக்களில் புதுமையான முயற்சிகள் என்பது வழக்கமான விஷயம் தான் என்றாலும், சில புதுமைகள் காலத்தால் அழியாத விஷயமாகவே இருக்கும். அந்த வகையில் சினிமாவில் இயக்குநருக்கு அடுத்த அடிநாதமாக இருந்து வரும் இசையமைப்பாளர் இல்லாமல் உருவாகி வெளியான படங்கள் எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்
(1 / 8)
தமிழ் சினிமாவின் நீண்ட நெடிய வரலாற்றில் வித்தியாசமான முயற்சியாக இசையமைப்பாளர் இல்லாமல், இயற்கையான ஒலிகளையே பின்னணி இசை போல் அமைத்து எடுக்கப்பட்ட படம் கொட்டுக்காளி. இந்த படத்தை போல் வேறு எந்தெந்த படங்கள் இசையமைப்பாளர், பின்னணி இசை இல்லாமல் வெளியாகி இருக்கிறது என்பதை பார்க்கலாம்
(2 / 8)
சூரி கதையின் நாயகனாகவும், மலையாள நடிகை அன்னா பென் கதையின் நாயகியாகவும் நடித்து சிவகார்த்திகேயன் தயாரிப்பில் பி.எஸ். வினோத்குமார் இயக்கியிருக்கும் படம் கொட்டுக்காளி. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியான இந்த படம் விமர்சக ரீதியாக பாராட்டை பெற்றதுடன், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு புதுவித அனுபவத்தை தந்தது
(3 / 8)
ஆணாதிக்கம், குடும்பப் பெருமிதம், சாதியம் ஆகிய சமூகத்தின் தேவையற்ற காரணிகளை நாசுக்காக கேள்விக்கேட்டும் கதையமச்சத்தில் இந்த படம் உருவாகியிருந்தது
(4 / 8)
தி விண்ட் வில் கேரி அஸ்: ஈரான் மொழி படமான இது 1999இல் வெளியானது. அப்பாஸ் கியாரோஸ்டாமி இயக்கியிருக்கும் இந்த படம், ஈரான் நாட்டில் உள்ள குர்திஸ்தான் அருகே அமைந்திருக்கும் கிராமத்துக்கு தெஹ்ரானில் இருந்து ஒரு பொறியாளர் மற்றும் அவரது சகாக்கள் வந்ததை ஆவணப்படுத்தும் படமாக உள்ளது. இந்த படத்துக்கு பின்னணி இசை இல்லை என்றாலும் திரைக்கு வெளியே உள்ள கூறுகளைக் குறிக்கும் அடர்த்தியான, இசையமைக்கப்பட்ட இசையை கொண்டதாக அமைந்துள்ளது
(5 / 8)
டாக் டே ஆஃப்டர்னூன்: பயோகிராபி க்ரைம் ட்ராமா பாணியில் உருவாகியிருக்கும் இந்த 1975இல் வெளியான அமெரிக்க படமாகும். அமெரிக்காவின் தேசிய திரைப்படப் பதிவேட்டில் பாதுகாக்கப்பட்டிருக்கும் இந்த படத்தை சிட்னி லுமெட் இயக்கியுள்ளார். ஹாலிவுட் நடிகர் அல் பேசினோ நடித்த இந்த படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து, வங்கி கொள்ளை போன்ற த்ரில்லான காட்சிகள் இடம்பிடித்திருக்கும் இந்த படத்துக்கு தனியாக பின்னணி இசை கிடையாது
(6 / 8)
நோ கண்ட்ரி ஃபார் தி ஓல்டு மென்: 2007இல் வெளியான அமெரிக்க நியோ நாயர் க்ரைம் த்ரில்லர் படமான இதனை ஜோயல் கோயன், ஈதன் கோயன் ஆகியோர் இயக்கியிருப்பார்கள். இந்த படமும் அமெரிக்க தேசிய திரைப்படப் பதிவேட்டில் இடம்பிடித்திருப்பதோடு, ஆழமான காட்சிகளிலும் மெளனமே இசையாக இடம்பிடித்திருக்கும் படமாக அமைந்திருக்கும்
(7 / 8)
நெட்வொர்க்: அமெரிக்க பிளாக் காமெடி படமான இது 1976இல் சிட்னி லுமெட் இயக்கத்தில் வெளியான படமாகும். டிஆர்பி ரேட்டிங்கை பெறுவதற்கு பொழுதுபோக்கு உலகில் நடக்கும் தில்லுமில்லுகளை அபட்டமாக வெளிச்சம் போட்டு காட்டும் படமாக இருந்து வரும் இந்த படத்தில் பல்வேறு நய்யாண்டி விஷயங்கள் இடம்பிடித்திருக்கும் நிலையில், பின்னணி இசை என்பது இல்லாமல் இயல்பான சத்தங்களே இசை போல் ஒலிக்க வைத்திருப்பார்கள்
மற்ற கேலரிக்கள்