'மாமன் படத்துக்கு நல்ல வரவேற்பு மக்கள் கொடுத்திருக்காங்க.. இதையே தக்க வைக்க முயற்சி பண்ணுவேன்’: நடிகர் சூரி திட்டவட்டம்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  'மாமன் படத்துக்கு நல்ல வரவேற்பு மக்கள் கொடுத்திருக்காங்க.. இதையே தக்க வைக்க முயற்சி பண்ணுவேன்’: நடிகர் சூரி திட்டவட்டம்!

'மாமன் படத்துக்கு நல்ல வரவேற்பு மக்கள் கொடுத்திருக்காங்க.. இதையே தக்க வைக்க முயற்சி பண்ணுவேன்’: நடிகர் சூரி திட்டவட்டம்!

Published May 21, 2025 04:58 PM IST Marimuthu M
Published May 21, 2025 04:58 PM IST

  • மாமன் படத்துக்கு நல்ல வரவேற்பு மக்கள் கொடுத்திருக்காங்க என்றும்; குடும்பத்துக்கு அப்புறம் தான் எல்லாமே என்றும் நடிகர் சூரி கூறியிருக்கிறார்.

மாமன் திரைப்படம் நினைத்ததை விட மிகப் பெரிய வெற்றி படமாக அமைந்திருக்கிறது என்று நடிகர் சூரி பேட்டியளித்திருக்கிறார்.திருச்சியில் மாமன் திரைப்படம் ஓடும் திரையரங்குகளுக்குச் சென்று பார்வையிட்ட நடிகர் சூரி, அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்தார்.அதில், ‘’எல்லோருக்கும் வணக்கம். மாமன் திரைப்படம் நம் குடும்ப உறவு சார்ந்த படம். உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும். அதை நூறு சதவீதம் நம்புங்கன்னு பட ரிலீஸுக்கு முன்னாடி சொல்லியிருந்தோம். மாமன் படத்தின் ரிலீஸுக்கு அப்புறம், படம் நினைத்ததைவிட மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைஞ்சிருக்கு.குடும்பம் குடும்பமாக தியேட்டருக்கு வந்து மாமன் திரைப்படத்தைப் பார்த்து மக்கள் கொண்டாடுறாங்க. தியேட்டர் உரிமையாளர்கள் எல்லோரும் சொல்றப்ப, பத்து டிக்கெட், 20 டிக்கெட்னு தான் எடுத்திட்டு வர்றதா சொன்னாங்க. முழு குடும்பமாக உட்கார்ந்து மாமன் படம் பார்க்கிறாங்க. ரொம்பப் பெருமையாக இருக்கு. சந்தோஷமாக இருக்கு.

(1 / 6)

மாமன் திரைப்படம் நினைத்ததை விட மிகப் பெரிய வெற்றி படமாக அமைந்திருக்கிறது என்று நடிகர் சூரி பேட்டியளித்திருக்கிறார்.

திருச்சியில் மாமன் திரைப்படம் ஓடும் திரையரங்குகளுக்குச் சென்று பார்வையிட்ட நடிகர் சூரி, அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அதில், ‘’எல்லோருக்கும் வணக்கம். மாமன் திரைப்படம் நம் குடும்ப உறவு சார்ந்த படம். உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும். அதை நூறு சதவீதம் நம்புங்கன்னு பட ரிலீஸுக்கு முன்னாடி சொல்லியிருந்தோம். மாமன் படத்தின் ரிலீஸுக்கு அப்புறம், படம் நினைத்ததைவிட மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைஞ்சிருக்கு.

குடும்பம் குடும்பமாக தியேட்டருக்கு வந்து மாமன் திரைப்படத்தைப் பார்த்து மக்கள் கொண்டாடுறாங்க. தியேட்டர் உரிமையாளர்கள் எல்லோரும் சொல்றப்ப, பத்து டிக்கெட், 20 டிக்கெட்னு தான் எடுத்திட்டு வர்றதா சொன்னாங்க. முழு குடும்பமாக உட்கார்ந்து மாமன் படம் பார்க்கிறாங்க. ரொம்பப் பெருமையாக இருக்கு. சந்தோஷமாக இருக்கு.

’திருச்சியில் தான் மாமன் படம் எடுத்தோம்’: நடிகர் சூரிஇந்தப் படம் எதை நினைச்சு எடுத்தோமோ, அது மக்கள்கிட்ட போய்ச் சேர்ந்திடுச்சுன்னு நம்புறோம். அதற்கு நன்றி சொல்லும்விதமாக தமிழ்நாட்டில் இருக்கிற பெரும்பான்மை ஊர்களுக்கு, முடிஞ்சளவுக்கு போயி, படம் பார்த்திட்டு வர்றவங்களுக்கு, நன்றி சொல்லிட்டு வர்றோம். அதுக்காகத்தான் திருச்சிக்கு வந்தோம். இதற்காகத்தான், நாங்க படம் எடுத்தோம்.நன்றி’ என்றார், சூரி.அதனைத்தொடர்ந்து பேசிய நடிகர் சூரி, ‘ படம் முழுக்க திருச்சியில் தான் எடுத்தோம். அது தான் திருச்சியில் இருக்கிற எல்லா தியேட்டருக்கும் போய் விசிட் செய்திட்டு வந்திருக்கோம்’’ என்றார்.அதன் பின் நடிகர் சூரியிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதற்கு அவர் அளித்த பதிலின் தொகுப்பு:-

(2 / 6)

’திருச்சியில் தான் மாமன் படம் எடுத்தோம்’: நடிகர் சூரி

இந்தப் படம் எதை நினைச்சு எடுத்தோமோ, அது மக்கள்கிட்ட போய்ச் சேர்ந்திடுச்சுன்னு நம்புறோம். அதற்கு நன்றி சொல்லும்விதமாக தமிழ்நாட்டில் இருக்கிற பெரும்பான்மை ஊர்களுக்கு, முடிஞ்சளவுக்கு போயி, படம் பார்த்திட்டு வர்றவங்களுக்கு, நன்றி சொல்லிட்டு வர்றோம். அதுக்காகத்தான் திருச்சிக்கு வந்தோம். இதற்காகத்தான், நாங்க படம் எடுத்தோம்.நன்றி’ என்றார், சூரி.

அதனைத்தொடர்ந்து பேசிய நடிகர் சூரி, ‘ படம் முழுக்க திருச்சியில் தான் எடுத்தோம். அது தான் திருச்சியில் இருக்கிற எல்லா தியேட்டருக்கும் போய் விசிட் செய்திட்டு வந்திருக்கோம்’’ என்றார்.

அதன் பின் நடிகர் சூரியிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதற்கு அவர் அளித்த பதிலின் தொகுப்பு:-

’அடுத்து அரசியலில் எதுவும் மாற்றம் வரும் என்று நினைக்கிறீர்களா?நடிகர் சூரி: கண்டிப்பாக மாற்றம் வரும். எல்லா மக்களும் நினைக்கிற மாதிரியான அரசியல் அமையும்.

(3 / 6)

’அடுத்து அரசியலில் எதுவும் மாற்றம் வரும் என்று நினைக்கிறீர்களா?

நடிகர் சூரி: கண்டிப்பாக மாற்றம் வரும். எல்லா மக்களும் நினைக்கிற மாதிரியான அரசியல் அமையும்.

துணைநடிகர், காமெடி நடிகர், ஹீரோ.. அடுத்த கட்ட நகர்வு என்னவாக இருக்கும்?நல்ல வரவேற்பு மக்கள் கொடுத்திருக்காங்க. இதேயே தக்க வைக்க முயற்சி பண்ணுறேன்.

(4 / 6)

துணைநடிகர், காமெடி நடிகர், ஹீரோ.. அடுத்த கட்ட நகர்வு என்னவாக இருக்கும்?

நல்ல வரவேற்பு மக்கள் கொடுத்திருக்காங்க. இதேயே தக்க வைக்க முயற்சி பண்ணுறேன்.

உங்களது ரசிகர்களுக்கு ஏதாவது சொல்ல விரும்புறீங்களா?முதலில் குடும்பத்தைப் பாருங்க. குடும்பத்துக்கு அப்புறம் தான் எல்லாமே. அதன்பின், சந்தோசத்தைக் கொண்டாடுங்க. குறிப்பாக, முகம் சுளிக்காத வகையில் சந்தோஷத்தைக் கொண்டாடுங்க.

(5 / 6)

உங்களது ரசிகர்களுக்கு ஏதாவது சொல்ல விரும்புறீங்களா?

முதலில் குடும்பத்தைப் பாருங்க. குடும்பத்துக்கு அப்புறம் தான் எல்லாமே. அதன்பின், சந்தோசத்தைக் கொண்டாடுங்க. குறிப்பாக, முகம் சுளிக்காத வகையில் சந்தோஷத்தைக் கொண்டாடுங்க.

உங்கள் சகோதரர் மீது புகார் வந்திருக்கு?இல்லைங்க. அவர் யார்னே தெரியாதுங்க. அவருக்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இன்னொன்னு சார், மாசமாசம் ஏதாவதுசொல்லிக்கிட்டே தான் சார் இருக்காங்க. பொழுதுபோகலைன்னா எஸ்.பி.ஆபிஸுக்கு போயிடுறாங்க. பரவாயில்லை. உங்கள் ஆதரவுக்கு ரொம்ப நன்றி’ என நடிகர் சூரி சொல்லிமுடித்தார்.இதனைத்தொடர்ந்து பேசிய மாமன் படத்தின் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் கூறுகையில், ’மாமன் திரைப்படம் தமிழ்நாடு முழுக்க மிகப்பெரிய வெற்றி. எல்லா குடும்பத்திலும் இருக்கிற அக்கா, அம்மா, தங்கச்சி எல்லோருக்கும் நன்றி சொல்லிக்கிறேன். ரொம்ப ரொம்ப நன்றி’ என்றார்.

(6 / 6)

உங்கள் சகோதரர் மீது புகார் வந்திருக்கு?

இல்லைங்க. அவர் யார்னே தெரியாதுங்க. அவருக்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இன்னொன்னு சார், மாசமாசம் ஏதாவதுசொல்லிக்கிட்டே தான் சார் இருக்காங்க. பொழுதுபோகலைன்னா எஸ்.பி.ஆபிஸுக்கு போயிடுறாங்க. பரவாயில்லை. உங்கள் ஆதரவுக்கு ரொம்ப நன்றி’ என நடிகர் சூரி சொல்லிமுடித்தார்.

இதனைத்தொடர்ந்து பேசிய மாமன் படத்தின் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் கூறுகையில், ’மாமன் திரைப்படம் தமிழ்நாடு முழுக்க மிகப்பெரிய வெற்றி. எல்லா குடும்பத்திலும் இருக்கிற அக்கா, அம்மா, தங்கச்சி எல்லோருக்கும் நன்றி சொல்லிக்கிறேன். ரொம்ப ரொம்ப நன்றி’ என்றார்.

ம.மாரிமுத்து, சீஃப் கன்டென்ட் எடிட்டராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். அச்சு, காட்சி மற்றும் டிஜிட்டல் ஊடகம் என 11+ ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, சினிமா, ஜோதிடம், லைஃப்ஸ்டைல், தேசம்-உலகம், கிரிக்கெட் உள்ளிட்டப் பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் கட்டுரைகளை எழுதி வருகிறார். சிவகங்கையிலுள்ள பண்ணை பொறியியல் கல்லூரியில் எம்.இ- ஸ்ட்ரக்சுரல் இன்ஜினியரிங் மற்றும் தென்காசி - புளியங்குடியிலுள்ள எஸ்.வி.சி.பொறியியல் கல்லூரியில் பி.இ - சிவில் இன்ஜினியரிங்கும் படித்திருக்கிறார். விகடன், மின்னம்பலம்,காவேரி நியூஸ் டிவி, நியூஸ்ஜே டிவி, ஈடிவி பாரத் ஆகிய ஊடகங்களைத் தொடர்ந்து 2023 ஆகஸ்ட் முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். விகடனின் தலைசிறந்த மாணவப்பத்திரிகையாளர் 2014-15ஆக விருதுபெற்றவர். இவரது சொந்த ஊர் வடுகபட்டி, தேனி மாவட்டம் ஆகும்.

மற்ற கேலரிக்கள்