STR 50: தயாரிப்பாளராக களம் இறங்கும் சிம்பு! 50 ஆவது படத்தின் போஸ்டரை வெளியிட்டார்!
- STR 50: நடிகர், பாடகர் என பல பரிணாமங்கள் கொண்ட சிலம்பரசன் தற்போது தயாரிப்பாளராகவும் களம் இறங்கியுள்ளார். அவர் நடிக்கும் 50 ஆவது படத்தினை சிம்பு தொடங்கிய தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளது.
- STR 50: நடிகர், பாடகர் என பல பரிணாமங்கள் கொண்ட சிலம்பரசன் தற்போது தயாரிப்பாளராகவும் களம் இறங்கியுள்ளார். அவர் நடிக்கும் 50 ஆவது படத்தினை சிம்பு தொடங்கிய தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளது.
(1 / 6)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிம்பு இன்று (03.02.2025) அவரது 42 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில் அவரது புதிய படங்களின் அறிவிப்பு வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் அவரது எக்ஸ் தளத்தில் 50 ஆவது படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளார். மேலும் கூடுதலாக இந்த 50 ஆவது படத்தினை சிம்புவே தயாரிக்க உள்ளார்.
(2 / 6)
கடந்த 2024 ஆம் ஆண்டு சிம்புவிற்கு எந்த படங்களும் வெளியாகமல் இருந்த நிலையில் இந்த ஆண்டு தொடர்ந்து பல படங்கள் வெளியாக உள்ளது. இந்த சமயத்தில் சிம்புவின் பிறந்தநாளில் வெளியாகும் படங்களின் அறிவிப்பு அவரது ரசிகர்களை குஷி படுத்தியுள்ளது. மேலும் சமூக வலைத்தளங்களில் அவரது தயாரிப்பு நிறுவனத்திற்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
(3 / 6)
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் தக் லைப் படத்தில் சிம்பு முக்கியமான கதா பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கான படப்பிடிப்பு முடிந்து இந்த ஆண்டு வெளியாக தயார் நிலையில் உள்ளது.
(4 / 6)
சிம்பு ஒழுங்காக சூட்டிங்கிற்கு வரமாட்டார். வேலை செய்ய மாட்டார் என பல வதந்திகள் சோசியல் மீடியாவில் உலா வந்த வண்ணம் உள்ளன. அவரது ஹேட்டர்ஸ்களுக்கு இந்த தொடர் பட அறிவிப்பு சிறந்த பதிலை கொடுத்துள்ளது எனக் கூறலாம். மேலும் தயாரிப்பாளர் என்ற புது அவதாரம் அவரது திரை பயணத்திற்கு மேலும் மெருக்கேற்றியுள்ளது.
(5 / 6)
சமீபமாக மியூசிக் கான்செர்ட்களில் கலந்து கொண்டு பாடி செம வைபாக ரசிகர்களை மகிழவித்து வருகிறார். மேலும் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் ட்ராகன் படத்திலும் ஒரு பாடலை பாடியுள்ளார். நீண்ட முடி வளர்த்து காளை பட லுக்கில் விண்டேஜ் சிம்புவாக வலம் வருகிறார்.
(6 / 6)
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிய இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தினை முன்னதாக ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க இருந்தது. பின்னர் அதில் இருந்து விலகியது. தற்போது இந்த படத்தை அட்மேன் சினி ஆர்ட்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் தயாரிக்க உள்ளார். இது குறித்தான அறிவிப்பில், "இறைவனுக்கு நன்றி!
@Atman_cinearts
உடன் ஒரு தயாரிப்பாளராக ஒரு புதிய பயணத்தில் அடியெடுத்து வைக்கிறேன் என்பதை பகிர்ந்து கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
எனக்கும் இயக்குனர் தேசிங்கு பெரியசாமிக்கும் ஒரு கனவுத் திட்டமான எனது 50வது படத்துடன் இதைத் தொடங்குவதை விட சிறந்த வழி எதுவுமில்லை. இதில் நாங்கள் எங்கள் இதயங்களை ஊற்றுகிறோம்!
இந்தப் புதிய முயற்சிக்காக உற்சாகமாக இருக்கிறேன், எப்போதும் போல உங்கள் அனைவரின் அன்பையும் ஆதரவையும் உண்மையிலேயே எதிர்பார்க்கிறேன்!
நீங்க இல்லம்மா நான் இல்ல!" எனக் குறிப்பிட்டு இருந்தார்.
மற்ற கேலரிக்கள்