HBD Silambarasan: ஸ்டைல்.. எமோஷனல்.. டான்ஸ்.. சர்ச்சை கலந்துகட்டிய நடிகர் சிலம்பரசனின் பயணம்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Hbd Silambarasan: ஸ்டைல்.. எமோஷனல்.. டான்ஸ்.. சர்ச்சை கலந்துகட்டிய நடிகர் சிலம்பரசனின் பயணம்!

HBD Silambarasan: ஸ்டைல்.. எமோஷனல்.. டான்ஸ்.. சர்ச்சை கலந்துகட்டிய நடிகர் சிலம்பரசனின் பயணம்!

Feb 03, 2025 07:17 AM IST Marimuthu M
Feb 03, 2025 07:17 AM , IST

  • HBD Silambarasan: நடிகர் சிலம்பரசனின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுவதை ஒட்டி, அவர் கடந்து வந்த பயணம் குறித்துப் பார்ப்போம். 

சினிமாவுக்கு என்று பிறந்த கலைஞன், சிலம்பரசன் என்கிற சிம்பு எனலாம். உறவைக் காத்த கிளி படம் மூலம் 1984ஆம் ஆண்டு சினிமாவில் காலடி எடுத்து வைத்த சிலம்பரசன், ஐ அம் ஏ லிட்டில் சூப்பர் ஸ்டார் எனும் பாடல் மூலம் குழந்தை நட்சத்திரமாகவே பலரது கவனத்தை ஈர்த்தார்.நடிப்பின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, காதல் அழிவதில்லை என்னும் படம் மூலம் ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்.

(1 / 7)

சினிமாவுக்கு என்று பிறந்த கலைஞன், சிலம்பரசன் என்கிற சிம்பு எனலாம். உறவைக் காத்த கிளி படம் மூலம் 1984ஆம் ஆண்டு சினிமாவில் காலடி எடுத்து வைத்த சிலம்பரசன், ஐ அம் ஏ லிட்டில் சூப்பர் ஸ்டார் எனும் பாடல் மூலம் குழந்தை நட்சத்திரமாகவே பலரது கவனத்தை ஈர்த்தார்.

நடிப்பின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, காதல் அழிவதில்லை என்னும் படம் மூலம் ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்.

சிலம்பரசன் என்ற இயற்பெயருடன் தமிழில் அறிமுகமான இவர், சிம்பு, எஸ்.டி.ஆர், ஆத்மன் என்ற புனைப் பெயர்களால் ரசிகர்களால் அன்பாக அழைக்கப்பட்டார்.அதோடு நடிப்பு என்ற வட்டத்திற்குள் மட்டுமே நின்றுவிடாமல், கதையாசிரியர், இசையமைப்பாளர், எழுத்தாளர், பாடகர், சிறப்பாக நடனமாடுபவர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையைக் கொண்டவராக வலம் வருகிறார். சிம்பு இயக்கிய வல்லவன் படம் சூப்பர் ஹிட்டானது. 

(2 / 7)

சிலம்பரசன் என்ற இயற்பெயருடன் தமிழில் அறிமுகமான இவர், சிம்பு, எஸ்.டி.ஆர், ஆத்மன் என்ற புனைப் பெயர்களால் ரசிகர்களால் அன்பாக அழைக்கப்பட்டார்.

அதோடு நடிப்பு என்ற வட்டத்திற்குள் மட்டுமே நின்றுவிடாமல், கதையாசிரியர், இசையமைப்பாளர், எழுத்தாளர், பாடகர், சிறப்பாக நடனமாடுபவர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையைக் கொண்டவராக வலம் வருகிறார். சிம்பு இயக்கிய வல்லவன் படம் சூப்பர் ஹிட்டானது. 

சிலம்பரசன் தமிழ் சினிமாவில் இயக்குநரான டி.ராஜேந்தர் மற்றும் நடிகை உஷா தம்பதியினரின் மூத்த மகன் ஆவார். தனது கேரியரில் மன்மதன், வல்லவன், கோயில், தொட்டி ஜெயா, விண்ணைத்தாண்டி வருவாயா, மாநாடு, வெந்து தணிந்தது காடு என ஹிட் படங்களைக் கொடுத்தவர்.  

(3 / 7)

2017ல் நடிகர் சிம்பு நடித்த அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படம் வெளியானது. படம் படு தோல்வியைச் சந்தித்தது. இதில் நடித்த போது சிம்பு ஒழுங்காக படப்பிடிப்புக்கு வரவில்லை, கதையை தன் விருப்பத்திற்கு மாற்ற சொல்கிறார் என்ற எல்லாம் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். ஒரு கட்டத்தில் சிம்புவிற்கு ரெட் கார்டு கொடுக்கும் அளவிற்கு சென்றுவிட்டது. இந்த சமயத்தில் தான் வந்தா ராஜாவா தான் வருவேன் படத்தில் இடம் பெற்ற ரெட் கார்டு பாடல் மூலம் பதிலடி கொடுத்தார். அதில், "பட்டதை பட்டுனு சொன்னா என்ன கெட்டவனு சொல்லுங்க ஓரமா போய் உக்காந்தா என்ன உத்தமனு சொல்லறீங்க" என்ற வரிகள் சிம்பு பதிலளித்தார். 

(4 / 7)

2015ஆம் ஆண்டு அனிருத் மற்றும் சிம்பு கூட்டணியில் உருவான பீப் பாடல் பலரை முகம் சுளிக்க வைத்தது. இந்தப் பாடல் தனிப்பட்ட முறையில் தயார்செய்ததாகவும், ஆனால் கசிந்துவிட்டதாகவும் சிம்பு பேசினார். மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தன் குடும்பத்துடன் கலந்து கொண்டார், சிம்பு. திரைவாழ்வில் நீண்ட காலமாக சிம்பு ஒரு வெற்றியைக் கூட ருசித்துப் பார்க்கவில்லை. அப்படி இருக்கும் சமயத்தில் அவர் மணிரத்னம் கூட்டணியில் உருவான, செக்கச் சிவந்த வானம் படத்தில் கமிட்டானர். அவர் நடித்த எத்திராஜ் பாத்திரம் பலரால் ரசிக்கப்பட்டது. 

(5 / 7)

2015ஆம் ஆண்டு அனிருத் மற்றும் சிம்பு கூட்டணியில் உருவான பீப் பாடல் பலரை முகம் சுளிக்க வைத்தது. இந்தப் பாடல் தனிப்பட்ட முறையில் தயார்செய்ததாகவும், ஆனால் கசிந்துவிட்டதாகவும் சிம்பு பேசினார். 

மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தன் குடும்பத்துடன் கலந்து கொண்டார், சிம்பு. திரைவாழ்வில் நீண்ட காலமாக சிம்பு ஒரு வெற்றியைக் கூட ருசித்துப் பார்க்கவில்லை. அப்படி இருக்கும் சமயத்தில் அவர் மணிரத்னம் கூட்டணியில் உருவான, செக்கச் சிவந்த வானம் படத்தில் கமிட்டானர். அவர் நடித்த எத்திராஜ் பாத்திரம் பலரால் ரசிக்கப்பட்டது. 

கொரோனா காலகட்டத்தில் தனது உடல் எடையை அதிரடியாகக் குறைத்து ஈஸ்வரன் படம் மூலம் கம்பேக் கொடுத்தார். அதற்காக தான் எந்த அளவிற்கு கஷ்டப்பட்டேன் என்பது குறித்து ஆத்மன் என்ற பெயரில் வீடியோ பதிவையும் வெளியிட்டு இருந்தார். அது பலருக்கும் உடல் பயிற்சியின் மகிமையை உணர்த்தியது. 

(6 / 7)

அடுத்து வெளியான மாநாடு திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி ரூபாய் வசூலை ஈட்டியது. அதேபோல், வெந்து தணிந்தது காடு, பத்து தல படமும் ஹிட்டாகி நல்ல பெயரை சிம்புவுக்கு பெற்றுத்தந்தன. தற்போது மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் என்னும் படத்திலும், எஸ்.டி.ஆர்.48 என்னும் படத்திலும் சிலம்பரசன் நடித்து வருகிறார். இந்நிலையில் சிலம்பரசனின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுவதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

(7 / 7)

மற்ற கேலரிக்கள்