Comedy actor senthil: ‘சகதியில் சிக்கிய அம்பாஸிடர் கார்; பெண் பார்க்கும் படலத்தில் அவ்வளவு பிரச்சினை’ - செந்தில்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Comedy Actor Senthil: ‘சகதியில் சிக்கிய அம்பாஸிடர் கார்; பெண் பார்க்கும் படலத்தில் அவ்வளவு பிரச்சினை’ - செந்தில்!

Comedy actor senthil: ‘சகதியில் சிக்கிய அம்பாஸிடர் கார்; பெண் பார்க்கும் படலத்தில் அவ்வளவு பிரச்சினை’ - செந்தில்!

Published Jun 08, 2024 06:29 PM IST Kalyani Pandiyan S
Published Jun 08, 2024 06:29 PM IST

Comedy actor senthil: நாங்கள் லவ்வெல்லாம் செய்து கல்யாணம் செய்து கொள்ள வில்லை. லவ்வெல்லாம் செய்தால், எங்கள் வீட்டில் வெட்டியே போட்டு விடுவார்கள். இவர் சினிமாக்காரர் என்பதால், யாரும் இவருக்கு பெண் கொடுக்க வில்லை. - செந்தில்

Comedy actor senthil: ‘சகதியில் சிக்கிய அம்பாஸிடர் கார்; பெண் பார்க்கும் படலத்தில் அவ்வளவு பிரச்சினை’ - செந்தில்!

(1 / 6)

Comedy actor senthil: ‘சகதியில் சிக்கிய அம்பாஸிடர் கார்; பெண் பார்க்கும் படலத்தில் அவ்வளவு பிரச்சினை’ - செந்தில்!

Comedy actor senthil:தமிழ் சினிமாவில், தவிர்க்க முடியாத காமெடியனாக வலம் வந்தவர் நடிகர் செந்தில். இவரும் நடிகர் கவுண்டமணியும் இணைந்து படங்களில் அடித்த லூட்டிகள் அனைத்தும், இன்றைய 2கே கிட்ஸின் மீம் மெட்டிரியலாக வலம் வந்து கொண்டிருக்கின்றன. இவர் கடந்த 1984ம் ஆண்டு கலைச்செல்வி என்பவரை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டர்.  இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். அவர்களுக்கும் குழந்தைகள் இருக்கின்றனர். இந்த நிலையில் நடிகர் செந்திலும் அவரது மனைவியும் அண்மையில் கலாட்டா சேனலுக்கு பேட்டி அளித்தனர். அந்த பேட்டியில், அவர்கள் தங்களது கல்யாண வாழ்க்கை குறித்தான பல்வேறு சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்தனர்.  

(2 / 6)

Comedy actor senthil:தமிழ் சினிமாவில், தவிர்க்க முடியாத காமெடியனாக வலம் வந்தவர் நடிகர் செந்தில். இவரும் நடிகர் கவுண்டமணியும் இணைந்து படங்களில் அடித்த லூட்டிகள் அனைத்தும், இன்றைய 2கே கிட்ஸின் மீம் மெட்டிரியலாக வலம் வந்து கொண்டிருக்கின்றன. 

இவர் கடந்த 1984ம் ஆண்டு கலைச்செல்வி என்பவரை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டர். 

 

இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். அவர்களுக்கும் குழந்தைகள் இருக்கின்றனர். 

இந்த நிலையில் நடிகர் செந்திலும் அவரது மனைவியும் அண்மையில் கலாட்டா சேனலுக்கு பேட்டி அளித்தனர். அந்த பேட்டியில், அவர்கள் தங்களது கல்யாண வாழ்க்கை குறித்தான பல்வேறு சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்தனர். 

 

யாரும் செந்திலுக்கு பெண் கொடுக்க வில்லை அந்த பேட்டியில் செந்தில் மனைவி கலைச்செல்வி பேசும் போது, “நாங்கள் லவ்வெல்லாம் செய்து கல்யாணம் செய்து கொள்ள வில்லை. லவ்வெல்லாம் செய்தால், எங்கள் வீட்டில் வெட்டியே போட்டு விடுவார்கள். இவர் சினிமாக்காரர் என்பதால், யாரும் இவருக்கு பெண் கொடுக்க வில்லை. முதன்முறையாக, இவர் என்னை பெண் பார்க்க வரும் போது அம்பாஸிடர் காரில்தான் வந்தார். அப்போது நல்ல மழை வேறு பெய்து கொண்டிருந்தது. அது கிராமம் என்பதால் அங்கு வயல் வெளி சம்பந்தமான பகுதிகள் அதிகம். அதனால்  இவரது கார் வயல்வெளி சகதியில் சிக்கிக்கொண்டது. இதைப்பார்த்த அங்கிருந்த சின்ன குழந்தைகள் அனைவரும் அந்தக்காரை அங்கிருந்து எடுக்க உதவினார்கள்.” என்றார்.  

(3 / 6)

யாரும் செந்திலுக்கு பெண் கொடுக்க வில்லை 

அந்த பேட்டியில் செந்தில் மனைவி கலைச்செல்வி பேசும் போது, “நாங்கள் லவ்வெல்லாம் செய்து கல்யாணம் செய்து கொள்ள வில்லை. லவ்வெல்லாம் செய்தால், எங்கள் வீட்டில் வெட்டியே போட்டு விடுவார்கள். இவர் சினிமாக்காரர் என்பதால், யாரும் இவருக்கு பெண் கொடுக்க வில்லை.

 

முதன்முறையாக, இவர் என்னை பெண் பார்க்க வரும் போது அம்பாஸிடர் காரில்தான் வந்தார். அப்போது நல்ல மழை வேறு பெய்து கொண்டிருந்தது. அது கிராமம் என்பதால் அங்கு வயல் வெளி சம்பந்தமான பகுதிகள் அதிகம். அதனால்  இவரது கார் வயல்வெளி சகதியில் சிக்கிக்கொண்டது. இதைப்பார்த்த அங்கிருந்த சின்ன குழந்தைகள் அனைவரும் அந்தக்காரை அங்கிருந்து எடுக்க உதவினார்கள்.” என்றார். 

 

வயல்வெளியில் சிக்கிய கார். செந்தில் பேசும் போது, “இவளை பெண் பார்க்க செல்லும் போது, சில்க் போன்ற போன்ற ஜிப்பா அணிந்து சென்றேன். அப்போது வெண்ணிலா ஆடை மூர்த்தி அதே போன்ற ஆடைகளை அணிவார். அதைப்பார்த்துதான் நான் அந்த ஆடையை அணிந்து சென்றேன்.” என்று பேசினார்.   

(4 / 6)

வயல்வெளியில் சிக்கிய கார். 

செந்தில் பேசும் போது, “இவளை பெண் பார்க்க செல்லும் போது, சில்க் போன்ற போன்ற ஜிப்பா அணிந்து சென்றேன். அப்போது வெண்ணிலா ஆடை மூர்த்தி அதே போன்ற ஆடைகளை அணிவார். அதைப்பார்த்துதான் நான் அந்த ஆடையை அணிந்து சென்றேன்.” என்று பேசினார்.

 

 

 

அதனை தொடர்ந்து பேசிய கலைசெல்வி, “அப்போது மலையூர் மம்பட்டியான் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது. அதனால் அந்த ஊரில், வாத்தியார் பேத்தியை நடிகர் ஒருவர் கல்யாணம் செய்து கொள்ள போகிறாராம் என்று பரபரப்பாக பேசப்பட்டது. இதனால் நான் பெண் பார்க்கும் போதே அப்படி கூட்டம் கூடி விட்டது. 

(5 / 6)

அதனை தொடர்ந்து பேசிய கலைசெல்வி, “அப்போது மலையூர் மம்பட்டியான் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது. அதனால் அந்த ஊரில், வாத்தியார் பேத்தியை நடிகர் ஒருவர் கல்யாணம் செய்து கொள்ள போகிறாராம் என்று பரபரப்பாக பேசப்பட்டது. இதனால் நான் பெண் பார்க்கும் போதே அப்படி கூட்டம் கூடி விட்டது.

 

முதன்முறையாக வாங்கிய கார் முதன்முறையாக இவர் ஃபியட் கார் ஒன்றை வாங்கினார். அதை பார்த்த என்னுடைய அப்பாவிற்கு மிகப்பெரிய சந்தோஷம். அதை விட, அவருடைய அப்பாவிற்கு அளவில்லா சந்தோஷம். என்னுடைய மகனும், மருமகளும் எப்படி காரில் வந்து இறங்குகிறார்கள் பாருங்கள் என்று பெருமிதம் அடைந்தார். இவருக்கு ரொமன்ஸே வராது. ஆனால், வெளிநாடுகள், வெளியூர்களுக்கு செல்லும் போது எனக்கு பூ, புடவைகள் உள்ளிட்டவற்றை வாங்கி வருவார்.” என்று பேசினார். 

(6 / 6)

முதன்முறையாக வாங்கிய கார் 

முதன்முறையாக இவர் ஃபியட் கார் ஒன்றை வாங்கினார். அதை பார்த்த என்னுடைய அப்பாவிற்கு மிகப்பெரிய சந்தோஷம். அதை விட, அவருடைய அப்பாவிற்கு அளவில்லா சந்தோஷம். என்னுடைய மகனும், மருமகளும் எப்படி காரில் வந்து இறங்குகிறார்கள் பாருங்கள் என்று பெருமிதம் அடைந்தார். இவருக்கு ரொமன்ஸே வராது. ஆனால், வெளிநாடுகள், வெளியூர்களுக்கு செல்லும் போது எனக்கு பூ, புடவைகள் உள்ளிட்டவற்றை வாங்கி வருவார்.” என்று பேசினார். 

மற்ற கேலரிக்கள்