தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Actor Ranjith: “நாடககாதலால எவ்வளவு உயிர்.. ஆமா நான் சாதி வெறியன்தான்” - நடிகர் ரஞ்சித் தாக்கு!

Actor Ranjith: “நாடககாதலால எவ்வளவு உயிர்.. ஆமா நான் சாதி வெறியன்தான்” - நடிகர் ரஞ்சித் தாக்கு!

Jun 22, 2024 05:11 PM IST Kalyani Pandiyan S
Jun 22, 2024 05:11 PM , IST

Actor Ranjith: கஷ்டப்பட்டு வளர்த்து ஆளாக்கினால், திடீரென்று யாராவது ஒருவன் வந்து தூக்கிச்செல்வான். இதற்கு பெயர் சமூக நீதியா? முதலில் சமூக நீதி என்பதே தவறு. - நடிகர் ரஞ்சித் தாக்கு!

Actor Ranjith: “நாடககாதலால எவ்வளவு உயிர்.. ஆமா நான் சாதி வெறியன்தான்”  - நடிகர் ரஞ்சித் தாக்கு!

(1 / 6)

Actor Ranjith: பிரபல நடிகர் ரஞ்சித் இயக்கி இருக்கும் திரைப்படம் கவுண்டம்பாளையம். இந்தப்படத்தின் படக்குழுவினர் இன்று கோவை கோனியம்மன் கோயிலில் வழிபாடு மேற்கொண்டனர். இந்த வழிபாட்டிற்கு பின்னர், நடிகர் ரஞ்சித் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.சமூக நீதியா… எனக்கு கோபம் வரும் அப்போது பேசிய ரஞ்சித், “கவுண்டம்பாளையம் திரைப்படம் ஜூலை 5 அன்று வெளியாகிறது. நாடக காதலை மையப்படுத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்தும் படமாக இந்தத்திரைப்படம் எடுக்கப்பட்டு இருக்கிறது. கோவை பகுதியைச் சுற்றி படம் எடுக்கப்பட்டுள்ளது. சமூக நீதி பற்றி யாராவது பேசினால், எனக்கு கடும் கோபம் வரும். என்ன சமூக நீதி.. ஒரு பெண்ணை அவரது பெற்றோர் கடுமையாக உழைத்து, கஷ்டப்பட்டு வளர்த்து ஆளாக்கினால், திடீரென்று யாராவது ஒருவன் வந்து தூக்கிச்செல்வான். இதற்கு பெயர் சமூக நீதியா? முதலில் சமூக நீதி என்பதே தவறு. 

(2 / 6)

எப்படி தவறு என்றால், ஒரு செல்போன் அல்லது கார் என எது காணாமல் போனாலும், காவல்நிலையத்தில் புகார் அளிக்கிறீர்கள். அந்த வழக்கையெல்லாம் நீங்கள் எடுத்துக்கொள்கிறீர்கள். அதே போல ஒரு பெண் காணாமல் போனாலோ அல்லது அந்தப்பெண்ணை ஒருவர் தூக்கிச் சென்றாலோ, அதற்கு என்ன பாதுகாப்பு.. நீங்களெல்லாம் சேர்ந்து அந்த பெண்ணுக்காக ஒரு கையெழுத்து போட்டால், அந்த பெண்ணுக்கு கல்யாணம் ஆகி விடுமா? அப்படியென்றால் அந்த பெற்றோரின் நிலைமை..  

(3 / 6)

சமூக நீதி போராளிகளே ஆகையால், யாரெல்லாம் சமூக நீதி போராளிகளாக இருக்கிறார்களோ, அவர்கள் தங்களது குடும்பத்தில், ஒரு சுயமரியாதை திருமணத்தை நடத்தி விட்டு, வெளியே வந்து அதனை பற்றி பேசுங்கள். சாதியப்பிரிவினை, மதப்பிரிவினை உள்ளிட்டவற்றையெல்லாம் உருவாக்க வேண்டும் என்ற காரணத்திற்காகவே இவை உருவாக்கப்படுகிறது. இவையெல்லாம் நிறுத்தப்பட வேண்டும் என்றால், பெற்றோரின் கையெழுத்து இல்லாமல் அங்கு திருமணம் நடக்கக்கூடாது என்று, ரிஜிஸ்டர் ஆஃபிசில் ஒரு சட்டம் கொண்டு வர வேண்டும். அதை கொண்டு வந்து விட்டால், எங்கேயும் ஆணவக்கொலை, சமூகப்பிரச்சினை, நாடக காதல் உள்ளிட்டவை நடக்கவே நடக்காது.   

(4 / 6)

இட ஒதுக்கீடை எடுத்துக்கொள்ளும் போது தெரியவில்லையா? அதற்கு மட்டும் உங்களுக்கு சாதி வேண்டும் என்று கேட்கிறீர்கள். பின்னர் ஏன் சமூக நீதி பிரச்சினையை பற்றி பேசுகிறீர்கள். உலகத்தில் உயர்ந்த சாதி பெத்தவங்கதான். அந்த சமூக நீதி பெத்தவங்களுக்கும் பொருந்தும் அல்லவா?. நான் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறேன். 

(5 / 6)

நாடககாதல் என்று சொன்ன உடனேயே, என்னை சாதி வெறியன் என்று முத்திரை குத்தி விடுகிறார்கள். நாடக காதல் ஒரு குறிப்பிட்ட சாதிக்கு நடப்பதில்லை, எல்லா சாதியினருக்கும் நடக்கிறது. நாடக காதல் என்று நான் சொல்வதால், என்னை நீங்கள் சாதி வெறியன் என்று முத்திரை குத்துவீர்கள் என்றால், கையெடுத்து கும்புடுகிறேன். நான் சாதிவெறியன்தான். சொல்லிக்கொள்ளுங்கள் தவறு கிடையாது.” என்று பேசினார். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்