தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Kavundampalayam Movie: மிரட்டல் எதிரொலி! கவுண்டம்பாளையம் ரிலீஸ் நிறுத்தம்! நடிகர் ரஞ்சித் வேதனை பேட்டி!

Kavundampalayam Movie: மிரட்டல் எதிரொலி! கவுண்டம்பாளையம் ரிலீஸ் நிறுத்தம்! நடிகர் ரஞ்சித் வேதனை பேட்டி!

Jul 04, 2024 07:48 PM IST Kathiravan V
Jul 04, 2024 07:48 PM , IST

  • Kavundampalayam Movie Release: எனக்கு எப்படி பெயர் சொல்வது என்று தெரியவில்லை. எங்கிருந்து வருகின்றனர் என்பது தியேட்டர் அதிபர்கள் சொல்லும்போது கஷ்டமாக உள்ளது. சொல்பவர்கள் தங்கள் சுயவிவரங்களை மறைத்துக் கொண்டு மிரட்டுகின்றனர். தியேட்டர் அதிபர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என நடிகர் ரஞ்சித் பேட்டி

நாளை திரைக்கு வரவிருந்த கவுண்டம்பாளையம் திரைப்படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்படுவதாக நடிகர் ரஞ்சித் தெரிவித்து உள்ளார்.

(1 / 6)

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், கவுண்டம்பாளையம் திரைப்படம் நாளை ரிலீஸ் ஆகாது என்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றேன் என தெரிவித்து உள்ளார். 

(2 / 6)

எனக்கு எப்படி பெயர் சொல்வது என்று தெரியவில்லை. எங்கிருந்து வருகின்றனர் என்பது தியேட்டர் அதிபர்கள் சொல்லும்போது கஷ்டமாக உள்ளது. சொல்பவர்கள் தங்கள் சுயவிவரங்களை மறைத்துக் கொண்டு மிரட்டுகின்றனர். தியேட்டர் அதிபர்களுக்கு பாதுகாப்பு வேண்டும். தமிழ்நாடு முழுவதும் இந்த படத்தை ரிலீஸ் செய்யக் கூடாது என மிரட்டல்கள் வருகின்றது. நமக்கு கடவுள்தான் துணை, ரவுடிசமோ, வன்முறையோ எதுவும் தெரியாது.

(3 / 6)

எனக்கு தெரியவில்லை, நிறைய போன் வருகின்றது என சொல்கின்றனர். ஒரு படம் எடுப்பது எவ்வளவு கஷ்டம் என்று தெரியும். எனது படத்தின் தயாரிப்பாளர்கள் சாதாரண விவசாயிகள்தான், பெரிய கோடீஸ்வரர்கள் கிடையாது.

(4 / 6)

நாளை ரிலீஸ் ஆகும் சூழலில், இன்று மாலை எல்லோரும் எங்களை கைவிட்டால் நாங்கள் என்ன செய்வது. திரையரங்கு உரிமையாளர்களுக்கு பாதுகாப்பு வேண்டும். அவர்களின் அச்சுறுத்தலை போக்கும் வகையில் வேறு நல்ல நாளில் திரைப்படத்தை திரையிட உள்ளோம்.  போலீஸ் பாதுகாப்பு உடன் திரையரங்கில் ரிலீஸ் செய்ய வேண்டும் என்பதற்காக இந்த முடிவை எடுத்து உள்ளோம். தமிழகம் முழுவதும் நிறைய இடங்களில் எதிர்ப்பலை உள்ளது. இதனால் நமக்கு பலர் தியேட்டர் தர மறுக்கின்றனர்.

(5 / 6)

ஒரு குழந்தையை சீராடி, தாலாடி இந்த படத்தை எடுத்தோம். ஆனால் அந்த படத்திற்கு முட்டுக்கட்டையாக சில விஷயங்கள் நடந்து உள்ளது. இந்த படத்தில் உள்ள சிக்கல்களை தீர்க்க செய்தித்துறை அமைச்சர், டிஜிபியை முறையிட்ட திட்டமிட்டு உள்ளோம். முடிந்தால் முதல்வரையும் சந்திக்க தயாராக உள்ளோம் என அவர் கூறினார். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்