தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Actor Ramarajan: ‘அத்தனை பேர உருவாக்குனேன்; ஒருத்தன் தேடி வரல' - - ராமராஜன்!

Actor Ramarajan: ‘அத்தனை பேர உருவாக்குனேன்; ஒருத்தன் தேடி வரல' - - ராமராஜன்!

May 23, 2024 09:47 PM IST Kalyani Pandiyan S
May 23, 2024 09:47 PM , IST

Actor ramarajan: டூரிங் டாக்கீஸ் காலத்திலிருந்து படங்களை பார்த்து வருபவன் என்பதால், இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள இடைவேளை காட்சி போல, வேறு எந்த படத்திலும் இதுவரை வந்ததில்லை என்று உறுதியாகச் சொல்வேன்.  - ராமராஜன்  

நாயகன் ராமராஜன் பேசும்போது “என் வாழ்க்கையில் ஏற்பட்ட மிகப்பெரிய விபத்தில் இருந்து, மயிரிழையில் உயிர் பிழைத்து, இன்று இந்த சாமானியன் என்கிற படத்தின் மூலம் திரும்பி வந்திருக்கிறேன். சினிமாவை விட்டு இத்தனை வருடங்களாக ஒதுங்கவில்லை. நல்ல கதைக்காகதான் காத்துக் கொண்டிருந்தேன்.     

(1 / 5)

முன்பு புரட்சித்தலைவர் எம்ஜிஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிசியாக நடித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில், எம்ஜிஆர் பாணியில், சிவாஜியையும், சிவாஜி பாணி படத்தில் எம்.ஜி.ஆரையும் நடிக்க வைக்க ஆலோசனை கூறினார்கள்.ஆனால் அப்படி எம்ஜிஆர் நடித்த பாசம், சிவாஜி நடித்த தங்கச் சுரங்கம் என இரண்டு படங்களுமே, வரவேற்பு பெறவில்லை. அதன் பின்னர், அவரவருக்கு ஏற்ற கதையிலேயே நடியுங்கள் என்று கூறி விட்டார்கள். அப்படி எனக்கு எந்த கதை சரியாக இருக்கும் என மக்கள் ஒத்துக் கொள்கிறார்களோ, அதே வழியில் தான் நான் ஆரம்பத்தில் இருந்து பயணித்து வந்திருக்கிறேன்.  

(2 / 5)

இளையராஜா மட்டும்தான் காரணம்:86 லிருந்து 90 வரை நான்கு வருடங்கள் மட்டுமே பீக்கில் இருந்த ராமராஜனை, இன்று வரை மக்கள் மனதில் நினைத்திருக்கிறார்கள் என்றால், அதற்கு இசைஞானி இளையராஜா, என் படங்களில் சாதாரண மக்களையும், உழைக்கும் வர்க்கத்தையும் தொடும் விதமாக அமைத்த பாடல்கள் மட்டும்தான் காரணம். அவை தான் மக்களிடம் இப்போதும் என்னை ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கிறது. அதனால் தான் இத்தனை வருடங்கள் கழித்து வரும்போது, என்னை ரசிக்கும் ரசிகர்களுக்கும், அதே சமயம் இப்போதுள்ள தலைமுறைக்கும், ஏற்றுக்கொள்ளும் விதமாக, ஒரு கதையும் கதாபாத்திரமும் அமைந்ததால், சாமானியன் படத்தில் நடிக்க உடனே ஒப்புக் கொண்டேன்.  

(3 / 5)

ஒருத்தர் கூட தேடி வரல:டூரிங் டாக்கீஸ் காலத்திலிருந்து படங்களை பார்த்து வருபவன் என்பதால், இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள இடைவேளை காட்சி போல, வேறு எந்த படத்திலும் இதுவரை வந்ததில்லை என்று உறுதியாகச் சொல்வேன். இந்தப்படத்தில், பாடல் காட்சிகளுக்கு இடம் இல்லை என்றாலும் கூட, இளையராஜா தானாகவே ஒரு சிச்சுவேஷனை உருவாக்கி அருமையான ஒரு பாடலை கொடுத்துள்ளார்.   

(4 / 5)

படத்திற்கு அட்வான்ஸ் எதுவும் வாங்காமலேயே பின்னணி இசை கோர்ப்பு பணிகளை ஆரம்பித்து விட்டார் இசைஞானி. அப்போது என்னை ஒருநாள் அழைத்து பின்னணி இசையுடன் படத்தை போட்டு காட்டியபோது, “ஏண்ணே. கரகாட்டக்காரனுக்கு போடுகின்ற மியூசிக் மாதிரியா இருக்கு. ஏதோ இங்கிலீஷ் படம் மாதிரி இருக்கு” என்று அவரிடம் கூறினேன்.இத்தனை வருடங்களில் ராமராஜன் நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பார் என பத்திரிகைகள் எழுதி, எழுதி கடைசியில் எனக்கு ஹீரோ வாய்ப்பே தேடி வந்தது. எத்தனை தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் என நாம் உருவாக்கிக் கொடுத்தோமே.. ஆனால் நாம் 44 படம் நடித்ததோடு அப்படியே நிற்கிறதே.. ஒருத்தர் கூட நம்மை தேடி வரவில்லையே.. சினிமாவில் நமக்கு 144 போட்டு விட்டார்கள் போல என்று நினைத்தேன்.. ஆனால் 45 வது படமாக இது அற்புதமாக அமைந்து விட்டது” என்று கூறினார்.

(5 / 5)

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்