தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Actor Parthiban: ‘நான் ஒரு முட்டாள்.. அவள அப்பவே போன்னு சொல்லிருக்கணும்..’ - சீதா காதல் குறித்து பார்த்திபன்!

Actor Parthiban: ‘நான் ஒரு முட்டாள்.. அவள அப்பவே போன்னு சொல்லிருக்கணும்..’ - சீதா காதல் குறித்து பார்த்திபன்!

Jul 08, 2024 09:29 PM IST Kalyani Pandiyan S
Jul 08, 2024 09:29 PM , IST

Actor Parthiban: எங்களுக்குள் பிரச்சினை எழுந்த பொழுது, விவாகரத்து எல்லாம் வேண்டாம் என்று, நான் அதனை விரட்டி, விரட்டி எப்படியாவது சமாளித்து வாழ்ந்து விடலாம் என்று தான் நினைத்துக் கொண்டிருந்தேன். - பார்த்திபன் 

பிரபல நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் தனக்கும், சீதாவிற்கும் இடையே இருந்த உறவு குறித்து பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில் பேசி இருக்கிறார். அதில் அவர் பேசும் போது, “என்னுடைய அம்மா பத்மாவதியின் பிரதிபலிப்புதான், என்னுடைய முக்கால்வாசி என்று சொல்லலாம். என்னுடைய குணங்களில் பலவை அவருடையதுதான். அப்பாவிடம் இருந்து தோரணை, நேரத்திற்கு வருவது உள்ளிட்ட விஷயங்கள் என்னுள் வந்து விட்டன. 

(1 / 5)

சீதா காட்டிய காதல்சீதாவின் உடைய காதலை பற்றி பேசும் போது, "எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. அதில் ஒன்று என்னுடைய திருமணமும்.. நான் காதலை முதன் முதலில் அதிகமாக உணர்ந்தது சீதாவிடம் இருந்துதான். அந்த காதல் எப்படி இருந்தது என்றால், நான் மிகவும் சாதாரணமாக ஆளாக இருந்த பொழுது, நீ பெரிய ஆளாக வருவாய்.. முதல் படத்திலேயே நீ வீடு, பங்களா உள்ளிட்டவை வாங்குவாய் என்று ஜோசியம் சொன்னது. அந்த ஜோசியம்தான் அந்த காதல். அது கொடுத்த உத்வேகம், உலகத்தில் எங்கிருந்தும் எனக்கு கிடைத்ததில்லை. அதன் மூலமாக நடந்த எல்லா விஷயங்களுமே எனக்கு சந்தோஷமாகத்தான் இருந்தது.இந்த நேரத்தில் நான் எதைப் பற்றியும் பொய் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது என்று நினைக்கிறேன்.காரணம், காதலையும் கடந்து விட்டோம். பொய்யையும் கடந்து விட்டோம்.நான் ஒரு முட்டாள். எங்களுக்குள் பிரச்சினை எழுந்த பொழுது, விவாகரத்து எல்லாம் வேண்டாம் என்று,  நான் அதனை விரட்டி, விரட்டி எப்படியாவது சமாளித்து வாழ்ந்து விடலாம் என்று தான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், இப்போது நான் நினைக்கிறேன் அப்படி எல்லாம் இருக்கவே கூடாது. முதலில் சீதாவை எனக்கு எந்தளவு பிடிக்கும் என்றால், நான் அவரை கல்யாணம் செய்து கொள்ளக் கூடாது;    

(2 / 5)

அவர் பெரிய ஸ்டாராக வர வேண்டும் என்று நினைக்கும் அளவுக்கு பிடிக்கும். அந்தளவு நான் அவரை காதலித்தேன். ஆனால் காலப்போக்கில் அவருக்கு நடிக்க பிடிக்கவில்லை. இதனையடுத்து தான் நாங்கள் கல்யாணம் செய்து கொண்டோம்.   

(3 / 5)

கல்யாணம் செய்துகொண்ட பின்னர், அவர் நடிக்க வேண்டும் என்று சொன்னபோது, எனக்கு அதில் விருப்பம் இல்லாமல் இருந்தது. காரணம், இந்த குடும்பம் பிரிந்து விடுமோ என்ற எண்ணம் எனக்கு இருந்தது. அப்போது நான் அவ்வளவு முட்டாளாக இருந்திருக்கிறேன். இப்போது இருக்கக்கூடிய புரிதல், அப்போது இருந்திருந்தால், அம்மா தாயே, தயவு செய்து சந்தோஷமாக நீ நடிக்கச் செல் என்று கூறி இருப்பேன்.  

(4 / 5)

அவள் வைத்த காதல் தான் உட்சபடச காதல் என்னுடைய மனைவி என் மீது வைத்த காதல் தான் இந்த உலகத்தின் உச்சபட்ச காதல். அதில் எந்தவித மாறுபட்ட கருத்தும் கிடையாது. உடன் இருக்கக்கூடிய அபி என்னுடைய உயிருக்கு சமம். எனக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள். நான் என்னுடைய கதையை நான் ரெடி செய்து முதலில் சொல்வது, என்னுடைய குழந்தைகளிடம்தான். காரணம் என்னவென்றால், அதன் மூலமாக நடக்கக்கூடிய நல்லது, கெட்டது அனைத்தும் அவர்களையும் பாதிக்கும். அவர்களுக்கு நான் நிரந்தரமான ஒரு வாழ்க்கையை இப்போது வரை ரெடி செய்து கொடுக்கவில்லை. " என்று பேசினார் 

(5 / 5)

மற்ற கேலரிக்கள்