தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Actor Kavin Who Is Gradually Progressing In The Cinema Is The Path Taken By Him

Actor Kavin Progress In Cinema: சினிமாவில் படிப்படியாக முன்னேறிவரும் நடிகர் கவின் கடந்த வந்த பாதை!

Feb 20, 2024 03:07 PM IST Marimuthu M
Feb 20, 2024 03:07 PM , IST

  • முன்னணி ஹீரோவாக உருவெடுக்கும் கவின் கடந்த வந்த பாதையைக் காணலாம். 

விஜய் டிவியில் கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை 2 சீரியல் மூலம் பிரபலமானவர், கவின். பின், அதே விஜய் டிவியில் தாயுமானவன், சரவணன் மீனாட்சி ஆகியத் தொடர்களிலும் நடித்து தமிழ் மக்களிடம் நன்கு பரீட்சயமானவர். இதனைத் தொடர்ந்து பிக்பாஸ் தமிழ் - சீசன் 3யில் பங்கேற்பாளராக இருந்தார். அந்நிகழ்ச்சியின் மூலமும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைப் பெற்றார்.

(1 / 6)

இந்நிலையில் பீட்சா, இன்று நேற்று நாளை, சத்ரியன் ஆகியப் படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து இருந்தாலும், ’நட்புன்னா என்னானு தெரியுமா, லிஃப்ட், டாடா’ ஆகியப் படங்களில் ஹீரோவாக நடித்து நல்ல பெயரைப் பெற்றுள்ளார். அதிலும் குறிப்பாக டாடாவில் இவர் நடித்தது அப்படத்தை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு சென்று நிறுத்தியது மட்டுமில்லாமல், வணிகரீதியாகவும் வெற்றியைப் பெற்றுத்தந்தது.

(2 / 6)

அதேபோல், இவரது நடிப்பில் வெளிவந்த வெப்சீரஸான ஆகாஷ் வாணி, நடிகர் கவினுக்கு நல்லபெயரைப் பெற்றுத் தந்தது. கடந்த 2023ஆம் ஆண்டு, தனது நீண்ட நாள் காதலியான மோனிகா டேவிட்டை திருமணம் செய்துகொண்டார்.

(3 / 6)

பியார் பிரேமா காதல் படத்தின் இயக்குநர் இளன் இயக்கத்தில் கவின், ‘ஸ்டார்’ என்னும் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

(4 / 6)

இது ஒருபுறமிருக்க, கவினின் ஐந்தாவது படத்தை சதீஷ் என்பவர் இயக்க, அனிருத் இசையமைக்கிறார். அப்படத்துக்கு கிஸ் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து கவின், நெல்சனின் உதவி இயக்குநர் சிவபாலனின் இயக்கத்தில் ஒரு படம், வெற்றிமாறனின் உதவி இயக்குநர் விக்ரனன் அசோக்குடன் ஒரு படம், மாரிசெல்வராஜின் இயக்கத்தில் ஒரு படம் என கதையை மட்டும் கேட்டு உறுதிசெய்து வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

(5 / 6)

எது எப்படியோ, வெகுநாட்களாக புதுமுக நடிகர்களின் வரவு கோடம்பாக்கத்துக்கு இல்லாமல் இருந்த நிலையில், புதுமுக நடிகர் கவின், இன்னும் 10 ஆண்டுகளில் மிகப்பெரிய ஹீரோவாக வலம்வருவார் எனத் தெரிகிறது

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்