Actor Kavin: ‘விஜய் மகனை போய் பார்த்தேன் ஆனா’ - சஞ்சய் படம் குறித்து நடிகர் கவின் ஓப்பன் டாக்!
விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறீர்களா? என்ற கேள்விக்கு நடிகர் கவின் பதில் அளித்திருக்கிறார்.
(2 / 6)
விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறீர்களா? என்ற கேள்விக்கு நடிகர் கவின் பதில் அளித்திருக்கிறார்.இது குறித்து சன் நியூஸ் தொலைக்காட்சிக்கு கவின் அளித்த பேட்டியில், “ அந்தப்படம் தொடர்பான சந்திப்பு நடந்தது உண்மைதான்.
(3 / 6)
அந்த சந்திப்பு நட்பு ரீதியாக, மிகவும் சாதரணமாக நடந்தது. அவர்களிடம் நான் எனக்கு இருக்கும் அடுத்தடுத்த வேலைகள் குறித்து சொன்னேன். அவர்கள் கலந்து யோசித்து விட்டு சொல்வதாகச் சொன்னார்கள். ஆனால் அதன் பின்னர் எந்த தகவலும் வரவில்லை.
(4 / 6)
அவர்களே அப்படி இருக்கும் போது நாமெல்லாம் எங்கே..எனக்கு என்னுடைய வேலைகள் சரியாக இருப்பதால், நான் அதில் கவனம் செலுத்தி சென்று கொண்டிருக்கிறேன். விஜய் சாரை பற்றி வெளியே அவர் அப்படி, இப்படியெல்லாம் சொல்கிறார்கள்.
(5 / 6)
ஆனால் அவரை நேரில் சந்திக்கும் போது, இவரையா அப்படிச் சொன்னார்கள் என்ற ரீதியில் மிக மிக சாதரணமாக இருப்பார்.சஞ்சயை பொருத்தவரை, அவர் அவரை விட சாதரணமாக இருப்பவர். எனக்கு அவரை பார்ப்பதற்கு பிரமிப்பாக இருந்தது.
மற்ற கேலரிக்கள்