Actor Karthi: ‘நாக சைதன்யாவின் அந்த கூச்ச உணர்வுக்குதான் பெண்கள்.. அவர் அப்பா என்னை அப்படி பார்த்துக்கிட்டார்’ - கார்ததி
Actor karthi: ‘அந்த அப்பாவித்தனத்தை தான் ஏராளமான பெண்கள் ரசிக்கிறார்கள். அவருடைய அப்பாவித்தனமும் பிடித்தது. அவருடைய அப்பாவையும் பிடித்தது. அவருடைய தாத்தாவையும் பிடித்தது.’ - கார்த்தி
(1 / 6)
Actor Karthi: ‘நாக சைதன்யாவின் அந்த கூச்ச உணர்வுக்குதான் பெண்கள்.. அவர் அப்பா என்னை அப்படி பார்த்துக்கிட்டார்’ - கார்ததி
(2 / 6)
தண்டேல் படத்தின் ட்ரெயிலர் வெளியீட்டு விழாவில் பேசிய கார்த்தி, ‘நாக சைதன்யா அவருடைய தாத்தா எனக்கு தெரியும். அவரைத் தொடர்ந்து நாகார்ஜுனாவை தெரியும். அவர் 'இதயத்தை திருடாதே' படத்தை பார்த்த பிறகு.. அவரைப் போல் டிரஸ் செய்து கொள்வது.. அதேபோல் ஓடுவது.
என பல முயற்சிகளை பலரும் செய்தார்கள். ஆனால் அவர் செய்த ஸ்டைலில் யாராலும் செய்ய முடியவில்லை. அவரைப் போல் அழகாக பேசவும் தெரியாது. அவருடன் தெலுங்கு திரைப்படத்தில் பணியாற்றிருக்கிறேன்.
(3 / 6)
நான் அங்கு சென்று படப்பிடிப்பில் கலந்து கொண்ட போது ஒவ்வொரு விசயத்தையும் பார்த்து பார்த்து செய்வார். அவ்வளவு அக்கறையுடன் பார்த்துக் கொள்வார். அன்பை பொழிவதில் தன்னிகரற்றவர். அவருடன் பணியாற்றி 10 வருடங்கள் ஆகிவிட்டது. இருந்தாலும் தற்போது நான் என்ன படம் செய்து கொண்டிருக்கிறேன் என்பதை அறிந்து வைத்திருப்பார். அந்தப் படத்தை பார்க்க வேண்டும் என்று சொல்வார். படம் பார்த்து பிடித்து விட்டால்.. உடனடியாக ட்வீட் செய்வார். இது போல் எனக்காக எப்போதும் அன்பு காட்டி வரும் அவருக்கு நான் திருப்பி என்ன செய்வதென்று தெரியவில்லை.
(4 / 6)
நாக சைதன்யாவை முதன் முதலில் திரையில் பார்த்த போது கூச்ச உணர்வு உள்ள ஒரு இளைஞரை அழுத்தம் கொடுத்து நடிக்க வைக்கிறார்களோ..! என தோன்றியது. ஆனால் அவர் முகத்தில் ஒரு அப்பாவித்தனம் தெரியும்
.
(5 / 6)
அந்த அப்பாவித்தனத்தை தான் ஏராளமான பெண்கள் ரசிக்கிறார்கள். அவருடைய அப்பாவித்தனமும் பிடித்தது. அவருடைய அப்பாவையும் பிடித்தது. அவருடைய தாத்தாவையும் பிடித்தது.
(6 / 6)
நாக சைதன்யா கடுமையாக உழைப்பதில் ஆர்வம் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு படத்தில் அவருடைய வளர்ச்சி தெரிகிறது. இந்தத் திரைப்படத்திற்காக ஒன்றரை ஆண்டு காலம் தன் உடலமைப்பையும் மாற்றி நடித்திருக்கிறார். உழைப்பு ஒரு போதும் வீண் போகாது.
உங்களுடைய கடும் உழைப்புக்கு இந்த படம் சரியான பரிசை வழங்கும். இந்தப் படம் தமிழிலும் பெரிய வெற்றியை பெறும் என்று உறுதியாக நம்புகிறேன்.
விவேகா- தேவி ஸ்ரீ பிரசாத்தின் ஹிட்டான பாடல்கள்- சாய் பல்லவி திரைத்தோற்றம்- உண்மை சம்பவம் - புது ஐடியா - என பல பாசிட்டிவ்வான விசயங்கள் இருப்பதால் இந்த திரைப்படம் பெரிய வெற்றியை பெரும் என்று வாழ்த்துகிறேன்'' என்றார்.
மற்ற கேலரிக்கள்