GMkumar Pallavi: ‘மொத்த செலவும் என்னதுன்னு அவளே கூப்பிட்டா’ - பல்லவி உடனான உறவு குறித்து ஜி.எம்.குமார் ஓப்பன் டாக்!
GMkumar Pallavi: அவள் தற்போது சந்தோஷமாக இருக்கிறாள். அவளது மகன் இறந்து போனதில் அவள் மிகவும் கஷ்டப்பட்டாள். அவளுக்கு தற்போது மிகவும் நல்ல கணவர் அமைந்து இருக்கிறார். அவர் வெளிநாட்டவர். அவர் கூகுளில் பொறியாளராக பணியாற்றிக்கொண்டிருக்கிறார். அவர்களுக்கு குழந்தைகள் இல்லை. - ஜி.எம்.குமார்
(1 / 6)
GMkumar Pallavi: ‘மொத்த செலவும் என்னதுன்னு அவளே கூப்பிட்டா’ - பல்லவி உடனான உறவு குறித்து ஜி.எம்.குமார் ஓப்பன் டாக்!
(2 / 6)
GMKumar on Pallavi: பிரபல இயக்குநரும், நடிகருமான ஜி.எம். குமார் தனக்கும், பல்லவிக்கும் இடையே இருந்த காதல் உறவு குறித்து டூரிங் டாக்கீஸ் சேனலுக்கு மனம் திறந்து பேசி இருக்கிறார்.பல்லவிக்கும் எனக்கும் இருந்த உறவுஇது குறித்து அவர் பேசும் போது, “நான் பல்லவியுடன் நிறைய முறை காரில் பாம்பேவிற்கு சென்று வந்து இருக்கிறேன். 88 -களில் நாங்கள் பாம்பே செல்லும் போது, குறைந்தது 45 மணி நேரம் முதல் 50 மணி நேரம் வரை செலவாகும். அதன் பின்னர், அந்த நேரமானது கொஞ்சம், கொஞ்சமாக குறைந்தது. இப்போது அந்த பயணத்தின் தூரமான 1500 கிலோ மீட்டரை, 21 மணி நேரத்தில் காரில் கடந்து சென்றுவிட முடிகிறது.
(3 / 6)
முன்பெல்லாம் நானும், பல்லவியும் காரில் செல்வோம். ஆனால், இப்போது நான் செல்கிறேன். அவள், அவளது கணவரோடு செல்கிறாள். அவள் என்னை பாம்பேவிற்கு ஓப்பனாக அழைத்தாள். நான் என்னிடம் காசு இல்லை என்று கூறினேன். ஆனால் அவள் பெட்ரோல், தங்குவது உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் நானே ஏற்றுக்கொள்கிறேன்; வா என்றாள்.. நான் சென்று வந்து விட்டேன். (சிரிக்கிறார்)
(4 / 6)
பயங்கரமாக கஷ்டப்பட்டாள்அவள் தற்போது சந்தோஷமாக இருக்கிறாள். அவளது மகன் இறந்து போனதில் அவள் மிகவும் கஷ்டப்பட்டாள். அவளுக்கு தற்போது மிகவும் நல்ல கணவர் அமைந்து இருக்கிறார். அவர் வெளிநாட்டவர். அவர் கூகுளில் பொறியாளராக பணியாற்றிக்கொண்டிருக்கிறார். அவர்களுக்கு குழந்தைகள் இல்லை.
(5 / 6)
அவளுக்கு அப்போதே உடலில் ஏதோ பிரச்சினை இருந்தது.அவள் இப்போது மிக மிக சந்தோஷமாக இருக்கிறாள். அவள் முன்பு இங்கு இருந்த பொழுது, அவளுக்கு பயங்கரமாக கடன் தொல்லை இருந்தது. இப்போது அவளுக்கு கடன் தொல்லை இல்லை.கடந்த 2008 ஆம் ஆண்டு அவள் என்னை விட்டு சென்றாள்.
(6 / 6)
நிச்சயமாக அந்த காதலுக்கான எமோஷன் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், காலப்போக்கில் அது கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சமாக நீர்த்துப் போய்விட்டது. மாயாண்டி குடும்பத்தார், வெயில், அவன் இவன் உள்ளிட்ட படங்களிலெல்லாம் சோகமான காட்சிகளில் நடிக்கும் பொழுது, அவள் விட்டுச்சென்ற பிரிவை நினைத்து தான் நடித்தேன். உண்மையில் அந்த படங்களில் வெளிப்படுத்திய நடிப்பு அனைத்தும், அவள் கொடுத்த பிரிவின் வலிதான். அதனால்தான் அதில் அவ்வளவு உண்மை இருக்கிறது; அந்த பிரிவின் வலி கொஞ்சம் கொஞ்சமாக சென்று கொண்டிருக்கிறது. ஆகையால் இப்பொழுதுதான் நான் நடிக்க ஆரம்பித்து இருக்கிறேன்” என்று பேசினார்.
மற்ற கேலரிக்கள்