குடி.. மாமிசம்… அரட்டை.. ஒரே ஐஸ்கிரீம்.. ரூமுக்குள் வந்த சாவித்ரி..கொதித்த ஜெமினி! - தட்டிவிட்ட சந்திரபாபு!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  குடி.. மாமிசம்… அரட்டை.. ஒரே ஐஸ்கிரீம்.. ரூமுக்குள் வந்த சாவித்ரி..கொதித்த ஜெமினி! - தட்டிவிட்ட சந்திரபாபு!

குடி.. மாமிசம்… அரட்டை.. ஒரே ஐஸ்கிரீம்.. ரூமுக்குள் வந்த சாவித்ரி..கொதித்த ஜெமினி! - தட்டிவிட்ட சந்திரபாபு!

Jan 01, 2025 07:24 AM IST Kalyani Pandiyan S
Jan 01, 2025 07:24 AM , IST

ஜெமினி கணேசன் சாவித்திரியோடு இருந்தார். அவர்களுக்கு ஒரு குழந்தையும் இருந்தது. சாவித்திரி வீட்டில் பெரிதாக அசைவ உணவுகளை சமைக்க மாட்டார். அதனால், ஜெமினி கணேசன் என்னுடைய அண்ணனான சந்திரபாபுவின் வீட்டிற்கு வந்துவிடுவார். - ஜவஹர்!

சந்திரபாபுவுக்கும் சாவித்ரிக்கும் இடையே முளைத்த காதல் குறித்து சந்திரபாபு சகோதரர் ஜவஹர் மீடியா சர்க்கிள் யூடியூப் சேனலுக்கு பேசி இருக்கிறார்.குடி, அசைவ உணவுஅவர் பேசும் போது, ‘சந்திரபாபுவும், ஜெமினி கணேசனும் மிக மிக நெருங்கிய நண்பர்களாக இருந்தார்கள். அப்போது ஜெமினி கணேசன் சாவித்திரியோடு இருந்தார். அவர்களுக்கு ஒரு குழந்தையும் இருந்தது. சாவித்திரி வீட்டில் பெரிதாக அசைவ உணவுகளை சமைக்க மாட்டார். அதனால், ஜெமினி கணேசன் என்னுடைய அண்ணனான சந்திரபாபுவின் வீட்டிற்கு வந்துவிடுவார். இங்கு அவர்கள் இருவரும் சேர்ந்து, தேவையான அசைவு உணவுகளை வாங்கியும், மது அருந்திக் கொண்டும் நேரத்தை கழிப்பார்கள். 

(1 / 8)

ஒரு கட்டத்தில் ஜெமினி கணேசன் சாவித்ரி வீட்டிற்கு செல்வதையே நிறுத்திவிட்டார். இதனால் மிகவும் மனமடைந்து போன சாவித்திரி, அண்ணனுக்கு போன் செய்து, தயவு செய்து அவர் அங்கு வந்தால், அவருக்கு அசைவு உணவுகள், மது உள்ளிட்டவற்றை கொடுக்காதீர்கள். நான் இங்கு குழந்தையோடு தவித்துக் கொண்டிருக்கிறேன்; 

(2 / 8)

ஆனால், அவர் அதைக் கண்டு கொள்ளாமல் அங்கு வந்து தேவையில்லாத வேலைகளை பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று சொன்னார். இதில் வருத்தம் அடைந்த அண்ணன் ஜெமினி கணேசனிடம் இனி நீ இங்கு வராதே.. சாவித்திரி கவலைப்படுகிறாள் என்று கூறிவிட்டார். 

(3 / 8)

படம் ஏற்படுத்திய படலம்இதற்கிடையே, ஜெமினி கணேசனிடம், ஆங்கில படம் ஒன்றைச் சொல்லி, அந்தப் படத்தின் ஐடியா நன்றாக இருக்கிறது. அதை நாம் செய்யலாமா என்று கேட்டார் அண்ணன். மேலும், அந்த படம் ஒரு குறிப்பிட்ட திரையரங்கில் ஓடுகிறது; நாளை இரவு சென்று பார்க்கலாம் என்று கேட்க, ஜெமினி கணேசனோ எனக்கு நாளை ஷூட்டிங் இருக்கிறது என்றார். 

(4 / 8)

அப்படியானால் அந்தப் படத்தின் கதையை நான் சாவித்திரியிடம் சொல்கிறேன். நீ அவளை அனுப்பி வை என்று அண்ணன் கூறினார். இதையடுத்து இரவு சாவித்திரியை அழைத்துக் கொண்டு கணேசன் வந்தார். படம் முடிந்தவுடன் போன் செய்கிறேன்; நீ அவளை வந்து பிக்கப் செய்து கொள் என்று அண்ணன் சொல்ல, சரி என்று கூறி கணேசன் கிளம்பிவிட்டார்.

(5 / 8)

ஆனால் சாவித்திரியும் சந்திரபாபுவும் படத்திற்குச் செல்லவில்லை மவுண்ட் ரோட்டில் இருக்கக்கூடிய ஒரு பிரபலமான ஐஸ்கிரீம் பார்லரில் சாவித்திரிக்கு மிக மிகப் பிடித்த பாதாம் வித் சாக்லேட் ஐஸ்கிரீமை வாங்கி சாப்பிட்டு உரையாடிக்கொண்டு, அருகில் சந்திரபாபுவுக்குத் தேவையான 555 சிகரெட்டையும் வாங்க்கொண்டு படத்திற்கு செல்லாமல் வீட்டிற்கு வந்து விட்டார்கள். வீட்டிற்குள் வந்தவர்கள் ஒரு ரூமிற்குள் கதவை சாத்திக் கொண்டு விட்டார்கள்.

(6 / 8)

ஒரு கட்டத்தில் இருவரும் இணைந்து விட்டார்கள். அவர்களுக்குள் காதல் மலந்து விட்டது.காலம் ஓட, எம்ஜிஆரை வைத்து சந்திரபாபு ஒரு படம் எடுக்க இருந்தார். அந்தப் படத்தில் எம்ஜிஆர் கதாநாயகனாக நடிக்க, சாவித்திரி கதாநாயகியாக நடிப்பதாக கமிட் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டு விட்டது. எம்ஜிஆருக்கு 4 லட்சம் சம்பளம் பேசப்பட்டு, முன்பணமாக 25 ஆயிரம் கொடுக்க வேண்டிய இக்கட்டான நிலை. சந்திரபாபுவிடம் கையில் ரொக்கமாக காசு இல்லை. இதையடுத்து இந்த விஷயத்தை சாவித்திரியிடம் சொல்ல, சாவித்திரி தன்னுடைய பணத்தை அவருக்கு கொடுத்தார் 

(7 / 8)

அப்போது ஜெமினிகணேசனுக்கும் சாவித்திரிக்கும் ஜாயிண்ட் அக்கவுண்ட் இருந்தது. இதையடுத்து ஜெமினி கணேசனுக்கு விஷயம் தெரிய, அவர் சாவித்திரியிடம் கேட்க, இருவருக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஜெமினி கணேசனுக்கு சந்தேகம் ஏற்பட, ஒரு நாள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது நேரடியாக சந்திரபாபுவிடம் விஷயத்தை கேட்டு விட்டார். அப்போது, சந்திரபாபு ஒரு பெண் என்னை தேடி வருகிறார் என்றால் அவளை நான் தள்ளிவிட முடியாது என்று கறாராக சொல்லிவிட்டார். இதைக்கேட்டு டென்ஷனான ஜெமினி கணேசன் சாவித்ரி உடனான உறவை நீ முடித்துக் கொள்ளவில்லை என்றால் உன்னை கொல்வதற்கு கூட நான் தயங்க மாட்டேன் என்றார். ஆனால் சந்திரபாபு கேட்டபாடில்லை, சாவித்திரியும் இதுகுறித்து எந்த ஒரு சலனமும் படவில்லை. அவ்வளவு நெருக்கமாக அவர்கள் காதலிக்க ஆரம்பித்து விட்டார்கள்.’ என்று பேசினார்.

(8 / 8)

மற்ற கேலரிக்கள்