Bharath: வளர்ந்தது எல்லாம் சூளைமேடு.. நிறைய ஆட்டோ டிரைவர் ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க.. பயணம் ஈஸி இல்லை.. நடிகர் பரத் பேட்டி
- Bharath: வளர்ந்தது எல்லாம் சூளைமேடு என்றும் தனக்கு நிறைய ஆட்டோ டிரைவர் ஃப்ரெண்ட்ஸ் இருக்கிறார்கள் என்றும்; திரைப் பயணம் ஈஸி இல்லை எனவும் நடிகர் பரத் பேட்டி அளித்துள்ளார்.
- Bharath: வளர்ந்தது எல்லாம் சூளைமேடு என்றும் தனக்கு நிறைய ஆட்டோ டிரைவர் ஃப்ரெண்ட்ஸ் இருக்கிறார்கள் என்றும்; திரைப் பயணம் ஈஸி இல்லை எனவும் நடிகர் பரத் பேட்டி அளித்துள்ளார்.
(1 / 6)
சமீபத்தில் சினி உலகம் யூட்யூப் சேனலில், நடிகர் பரத் அளித்த பேட்டியின் தொகுப்பு இது; அதில்,
‘’நடிகர் பரத் தன்னுடைய சினிமா பயணத்தைப் பற்றி என்ன நினைக்கிறார்?
முதலில் என்னை நானே பெருமையாகப் பார்த்துக்கொள்கிறேன். இதுரொம்ப போட்டி நிறைந்த இன்டஸ்ட்ரி இது. எல்லா நாட்களுமே போராட்டம் தான். பார்த்தீர்கள் என்றால், நீங்கள் சொல்லும்போது இந்தப் பயணம் ஈஸி இல்லைன்னு தோணுது. இப்போது நீங்க என்னப் பண்ணிட்டு இருக்கீங்க அதை வைச்சுத்தான் சினிமாவில் உங்களை மதிப்பிடுவாங்க. அதுக்கு ஒரு ஓட்டம் இருக்கு பார்த்தீங்களா. அது தான் ஒரு பெரிய போராட்டமாக இருக்கும்''.
(2 / 6)
‘’17 வயதில் உங்களுடைய கதை தேர்வுக்கும் , இப்போது உங்களுடைய கதை தேர்வைப் பற்றியும் சொல்லுங்க?
சில படங்கள் எனக்கு அமைஞ்சது. நான் சென்னையில் வளர்ந்தவனாக இருந்தாலுமே, அந்த சமயத்தில் வந்த படங்கள் எல்லாம் கிராமத்து பின்னணி கொண்டதாக இருக்கட்டும். என்கிட்ட வந்து வெயில், எம் மகன், பட்டியல், காதல் எல்லாமே கிராமத்துச் சாயலில் இருக்கும். அதெல்லாம் எனக்கு அமைஞ்சது. அந்த வகையில் நான் அதிர்ஷ்டசாலி. அமைஞ்சதுக்கு அப்புறம் வேலை பார்க்கிறது என்பதைவிட, அது அமையணும்ல. என்னை பாலாஜி சக்திவேல் சார் காதல் எனக்கு கொடுத்தார். என்னை நம்பி வசந்தபாலன் சார் வந்தார். எம் மகன் திருமகன் சார் கொண்டு வந்து கொடுத்தார். விஷ்ணுவர்தன் தேடி வந்து பட்டியலில் நடிக்கவைச்சார். இப்படி தேடி வந்ததை நான் சரியாக பயன்படுத்திக்கிட்டேன்னு நினைக்கிறேன்''
(3 / 6)
‘’செல்லமே படத்தில் எப்படி சார் அந்த வயதில் அப்படி நடிச்சீங்க?
செல்லமே, காந்தி கிருஷ்ணா சார் தான், டைரக்ட் பண்ணுனார். அவர் கதை சொல்லமாட்டேன். மொத்தப் படமே நீ தான்னு சொன்னார். அப்போது அந்த நுண் உணர்வுகள் எல்லாம் நடிக்க நடிக்க அதில் கத்துக்கிட்டேன். என்னுடைய கேரியரில் முக்கியமான படம் என்று காதல் என்று சொல்வாங்க. ஆனால், அதற்கு முன்பு, செல்லமே எனக்கு முக்கியமான படம். அது விஷாலுடைய முதல் படம். அந்த கேரக்டர் எல்லாம் காந்தி கிருஷ்ணா எழுதியது தான்''.
(4 / 6)
‘’காதல் படத்தில் மெக்கானிக்காக நடிச்சிருந்தீங்க. அது எப்படி பண்ணுனீங்க. அந்த பிராசஸ் என்ன?
காதல் படத்தில் கொடுத்த கேரக்டர் எனக்கு ரொம்ப ஈஸியாக இருந்தது. நான் எளிமையான குடும்பத்தில் மிடில் கிளாஸ் குடும்பத்தில் இருந்து வந்ததால், நான் வளர்ந்து எல்லாம் சென்னை சூளைமேடு தான். வெல்டிங் ஃபிரெண்ட்ஸ் இருந்தாங்க, ஆட்டோ டிரைவர் ஃபிரெண்ட்ஸ் இருந்தாங்க. அந்த சமயத்தில் விளையாண்டது எல்லாம் பம்பரம், கில்லி, கோலி தான்''.
(5 / 6)
பாலாஜி சார் ஒன்லைன் தான் சொன்னார்: நடிகர் பரத்
‘’அதனால் காதல் படத்தில் சொன்ன கதாபாத்திரத்தைச் செய்ய எனக்கு எளிமையாக இருந்தது. பாலாஜி சார் ஒன்லைன் தான் சொன்னார். எனக்கு ஏதாவது ஒன்னு பண்ணனும்னு வெறி இருந்தது. எம் மகன் படத்துக்குப் பின் தான் கதை கேட்க ஆரம்பிச்சேன். அப்போது மெல்ல மெல்ல அந்த வயது வந்தது.
பாலாஜி சாரோட ஆதரவு இல்லாமல் நான் பண்ணினது கிடையாது. அந்தப் படம் எல்லாருக்குமே பிரேக் கொடுத்த படம்''.
(6 / 6)
எந்தப் படத்துக்குப் பின் நமக்கு இனிமேல் சினிமா தான் எல்லாம் என்று முடிவு எடுத்தீர்கள்?
காதல் படத்துக்குப் பின் முடிவு எடுத்தேன். ஏனென்றால், காலேஜ் செகண்ட் இயர் படிக்கும்போது செல்லமே பண்ணிட்டு இருக்கேன். நிறைய வருகைப்பதிவு வீக் ஆகுது. மூன்றாவது வருஷம் படிக்கமுடியலை. அப்போதுதான், காதல் படம் பண்ணிமுடித்தேன். அதன்பின் தான், முழுமையாக இதில் போயிடணும்னு தோணுச்சு. வீட்டில் அவங்களுக்கு ஒரு பயம் இருந்துச்சு'' எனப் பேசி முடித்தார், நடிகர் பரத். தற்போது பரத் காளிதாஸ் 2 படத்தில் நடித்து வருகிறார்.
மற்ற கேலரிக்கள்