முடிச்சு விட்டீங்க போங்க! ஜிம் ட்ரெயினரை திருமணம் செய்த பப்லுவின் முன்னாள் காதலி ஷீத்தல்!
- நடிகர் பப்லு பிருத்திவிராஜின் முன்னாள் காதலியான ஷீத்தல் ஒரு ஜிம் ட்ரெயினரை தீடீரென திருமணம் செய்துள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- நடிகர் பப்லு பிருத்திவிராஜின் முன்னாள் காதலியான ஷீத்தல் ஒரு ஜிம் ட்ரெயினரை தீடீரென திருமணம் செய்துள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
(1 / 6)
தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்களில் ஒருவரான பப்லு பிருத்திவிராஜின் முன்னாள் காதலி ஷீத்தல் தற்போது ஜிம் ட்ரெயினர் ஒருவரை திருமணம் செய்துள்ளார். இது குறித்தான செய்தி தான் கடந்த சில நாட்களாகவே சமூக வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டு இருக்கிறது.
(2 / 6)
தன்னை விட சுமார் 30 வயது குறைந்த பெண்ணை காதலித்து வந்ததையும், அவருடன் லிவ் இன் இல் இருப்பதையும் பல யூடியூப் சேனல்களில் தம்பட்டம் அடித்து வந்தார். இவருக்கு ஏற்கனவே ஒரு திருமணம் நடைபெற்று இருப்பதும், அவர்களுக்கு ஆட்டிசம் பாதிக்கபட்ட ஒரு மகன் இருப்பதும் அனைவரும் அறிந்ததே. ஆனால் பப்லுவின் இதய காதல் கட்டத்தில் பலர் சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வந்தனர்.
(3 / 6)
60 வயதை நெருங்கி கொண்டிருக்கும் பப்லு சில படங்களிலும் நடித்து வருகிறார். இவர் ஷீத்தலை காதலித்த போது மிகவும் வெளிப்படையாக பேசி வந்தார். உடலுறவு முக்கியம், அது ஒரு தனி நபரின் சுதந்திரம் எனவும் கூறி இருந்தார். மேலும் தனது யூட்யூப் சேனலிலும் இருவரும் சேர்ந்து வீடியோ விலாக்குகளை பதிவிட்டு வந்தனர்.
(4 / 6)
இந்த ஆண்டு பிரிவை அறிவித்த இந்த ஜோடி தனித் தனியாக பேட்டி கொடுத்து ஒருவைரையொருவர் குற்றம் சாட்டினர். அதிலும் குறிப்பாக பப்லு காதலில் இருந்த போது அதிகமாக செலவு ஏற்பட்டதாகவும் தெரிவித்து இருந்தார். மேலும் இது மொத்தமும் விளம்பரத்திற்காக செய்யப்பட்ட ஸ்டண்ட் எனவும் தெரிவித்து இருந்தார்.
(5 / 6)
இந்த நிலையில் தற்போது ஷீத்தல் அவரது இன்ஸ்டா பக்கத்தில் திருமணம் ஆகியதாக குறிப்பிட்டுள்ளார். அந்த நபர் ஒரு ஜிம் ட்ரெயினர் எனக் கூறப்படுகிறது. சுமேஷ் சோமசேகரன் என்பவரை ஷீத்தல் திருமணம் செய்துக்கொண்டுள்ளார். இவர் ஒரு தடகள வீரர் எனத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இவர் ஜீம்மில் பயிற்சியாளராக இருக்கிறார்.
(6 / 6)
இவர்களது திருமணம் கடவுளின் ஆசீர்வாதத்தால் நிறைவேறியுள்ளதாக ஷீத்தல் தெரிவித்துள்ளார். இது குறித்தான அவரது பதிவில், "எங்கள் பிரார்த்தனைகள் எப்போதும் பதிலளிக்கப்படும். ஆமென்!கடவுள் உங்களுக்காக பெரிய திட்டங்களை வைத்திருக்கிறார். ஆமென்!கடவுள் நமக்குச் சிறந்ததைத் தருகிறார், நாம் அவருடைய குழந்தைகளாகிய நம்மைப் பாதுகாக்கிறார். ஆமென்!நான் எப்பொழுதும் என் கடவுளை நம்பியிருக்கிறேன், ஆனாலும் இப்போது அவருடைய மந்திரத்தை உண்மையாகவே உணர்கிறேன், அனுபவிக்கிறேன், கடவுளின் ஆசீர்வாதங்கள் எங்கள் இருவர் மீதும் நம் வாழ்நாள் முழுவதும் பொழியும்; இந்த நாளிலிருந்து நல்லதோ கெட்டதோ, பணக்காரர் அல்லது ஏழை, நோய் அல்லது ஆரோக்கியம், மரணம் நம்மைப் பிரிக்கும் வரை அன்பு செலுத்தவும், போற்றவும் விரும்புகிறேன். இது என் வாழ்க்கையின் மிகவும் தெய்வீகமான, அமானுஷ்யமான மற்றும் மறக்கமுடியாத தருணம். என் அன்பானவனே, என் நண்பனே, என் நலம் விரும்புபவனே, உன் மிகப் பெரிய ஆதரவைப் பெற்றதற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். எப்போதும் எனக்காக இருப்பதற்கு நன்றி" எனக் குறிப்பிட்டுள்ளார்.
மற்ற கேலரிக்கள்