படங்களில் நடிக்கப் போவதில்லை! பிரேக் எடுக்கப் போகும் அஜித்! அவரே கொடுத்த பேட்டி!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  படங்களில் நடிக்கப் போவதில்லை! பிரேக் எடுக்கப் போகும் அஜித்! அவரே கொடுத்த பேட்டி!

படங்களில் நடிக்கப் போவதில்லை! பிரேக் எடுக்கப் போகும் அஜித்! அவரே கொடுத்த பேட்டி!

Jan 10, 2025 06:33 PM IST Suguna Devi P
Jan 10, 2025 06:33 PM , IST

  • தமிழின் முன்னணி நடிகரான அஜித், ஸ்போர்ட்ஸ் கார் ரேஸராக அறிமுகமாகி, 2010-ம் ஆண்டு எம்ஆர்எஃப் ரேசிங் சீரிஸில் பங்கேற்றார். மும்பை, சென்னை, டெல்லி உள்ளிட்ட பல்வேறு சுற்றுகளிலும், ஜெர்மனி மற்றும் மலேசியாவில் சர்வதேச அளவிலும் போட்டியிட்டுள்ளார்

தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களில் முக்கியமான ஒருவரான அஜித் குமாருக்கு 2025 ஆம் ஆண்டில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரண்டு படங்கள் வெளியாக உள்ளது. இந்த நிலையில் ரேசிங்கில் தொடர்ந்து பங்கேற்க உள்ளதால் நடிப்பில் இருந்து சிறிது காலம் ஓய்வு எடுப்பதாக தெரிவித்துள்ளார். 

(1 / 6)

துபாயில் நடைபெற உள்ள 24 மணி நேர கார் பந்தயத்தில் அஜித் பங்கேற்றுள்ளார். இதற்காக தீவிர பயிற்சி எடுத்து வருகிறார். மேலும் இவரது தலைமையில் ஒரு குழுவும் இந்த பந்தயத்தில் கலந்து கொள்ள உள்ளது. இது தொடர்பான போட்டோக்களும், வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

(2 / 6)

இந்த குழுவின் கேப்டனாக செயல்படும் அஜித் நீண்ட தொலைவிற்கு கார் ஓட்ட வேண்டும். இதற்காக தனியாக சிறப்பு பயிற்சி எடுத்து வரும் போது திடீரென விபத்து ஏற்பட்டது. ஆனால் இதில் அஜித்திற்கு எந்த காயமும் ஏற்படவில்லை. 

(3 / 6)

முன்னதாக அஜித் குமார் அடுத்து படங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியது. ஆனால் அது குறித்தான எந்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. இந்த நிலையில் அஜித் அளித்த பேட்டி தொடர்பான வீடியோ வெளியாகி அவரது ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது. 

(4 / 6)

அந்த பேட்டியில் பேசிய அஜித் இந்த ரேசிங் முடியும் வரை படங்களில் நடிக்கப் போவதில்லை எனக் கூறியுள்ளார். இந்த ஆண்டு அக்டோபர் வரை பிரேக் எடுக்கப் போவதாகவும் தெரிவித்தார். அக்டோபருக்கு மேல் படப்பிடிப்பிற்கு செல்ல உள்ளதாகவும் தெரிவித்தார். 

(5 / 6)

கார் ரேசிங் தவிர பைக் ரேசிங், துப்பாக்கி சுடுதல் என பல ஆக்ட்விட்டிகளில் ஈடுபடும் வழக்கத்தை அஜித் கொண்டுள்ளார். இவரின் ரசிகர்களுக்கும் இவரது படத்தை தாண்டிய செயல்பாடுகளும் மிகவும் பிடிக்கும். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக எந்த படமும் வெளியாகமல் இருந்த பட்சத்தில் மீண்டும் படங்களில் நடிப்பதில் இருந்து பிரேக் எடுக்கும் இந்த முடிவு அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்