SJ Surya: நடிப்பு அரக்கன் எஸ்.ஜே.சூர்யாவின் திரைப் பயணம்!
- எஸ்.ஜே.சூர்யா கடந்து வந்த பாதையைக் காணலாம்.
- எஸ்.ஜே.சூர்யா கடந்து வந்த பாதையைக் காணலாம்.
(1 / 6)
எஸ்.ஜே.சூர்யாவின் இயற்பெயர் சம்மனசு பாண்டியன் ஜஸ்டின் செல்வராஜ், தமிழில் இயக்குநர், நடிகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என சினிமாவின் பல்வேறு துறைகளிலும் பணிபுரிபவர். நடிப்பதற்காக சினிமா துறையில் நுழைந்து முதலில் இயக்குநரானார். வசந்த் மற்றும் சபாபதி ஆகியோரிடம் உதவி இயக்குனராக இருந்தார்.
(2 / 6)
1999ஆம் ஆண்டு வாலி படத்தை இயக்கினார், எஸ்.ஜே.சூர்யா. அஜித் இரட்டை வேடத்தில் கலக்கியிருக்கும் அந்தப்படம் பயங்கர ஹிட்டானது. பாடல்களும் ஹிட்டாகவே இயக்குநராக பிரபலமானார் எஸ்.ஜே.சூர்யா. தொடர்ந்து விஜய்யை வைத்து இயக்கிய குஷி படமும் வெற்றி பெற்றது. பின்னர் நியூ, அன்பே ஆருயிரே, இசை போன்ற படங்களை இயக்கினார். நியூ படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானார். தொடர்ந்து கள்வனின் காதலி, திருமுருகன், வியாபாரி, ஸ்பைடர், மாநாடு, டான் போன்ற படங்களில் நடித்தார்.
(3 / 6)
எஸ்.ஜே.சூர்யா சங்கரன்கோயில் அருகே உள்ள வாசுதேவநல்லூரைச் சேர்ந்தவர். பள்ளி முடிந்தவுடன் சென்னைக்கு வந்தார். லயோலா கல்லூரியில் பிசிக்ஸ் படித்தார். மதுரையில் இன்ஜினியரிங் படிக்க கிடைத்த வாய்ப்பை விட்டுவிட்டு சென்னையிலேயே தங்கினார். தமிழ் சினிமாவில் நடித்துவிட வேண்டும் என்று வாய்ப்புகளை தேடிவந்தார். பொருளாதாரத்திற்காக ஓட்டல்களில் பணிபுரியத் துவங்கினார். பின்னர் அவருக்கு பாக்யராஜிடம் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. இயக்குநர் வசந்திடம் ஆசை படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். இயக்குநர் சபாபதியுடன் சுந்தரபுருஷன் படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார்.
(4 / 6)
சில படங்களில் சாதாரண கதாபாத்திரங்களில் சில நிமிடங்கள் நடிக்க எஸ்.ஜே.சூர்யாவுக்கு வாய்ப்பும் கிடைத்தது. பாரதிராஜாவின் கிழக்கு சீமையிலே படத்தில் கோழி சண்டை போடுபவராக நடித்திருப்பார். உல்லாசம் படத்தில் உதவியாளராக வேலை செய்துகொண்டிருந்தபோதுதான், அஜித்திடம் ’வாலி’ படக்கதையைச் சொன்னார், எஸ்.ஜே.சூர்யா
(5 / 6)
பல்வேறு படங்கள் இயக்கியிருந்தாலும், பல்வேறு படங்களில் நடித்து இருந்தாலும், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ’இறைவி’ படத்தில் நடித்ததன்மூலம் தான் ஒரு மாறுபட்ட நடிகர் என்பதை, தமிழ் ரசிகர்களிடம் நிரூபித்தார், எஸ்.ஜே.சூர்யா. அதன்பின், ஸ்பைடர் முதல் மார்க் ஆண்டனி, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் வரை எந்தவொரு கதாபாத்திரம் கொடுத்தாலும் அநாயாசமாக செய்து பெயர் பெறுவார். குறிப்பாக, மார்க் ஆண்டனி படத்தில் சில்க் ஸ்மிதாவைப் பார்த்ததும், அவரது மனசாட்சியாக துள்ளல் ஆட்டம்போட்டு நடித்திருப்பார்,
(6 / 6)
நடிகர் எஸ்.ஜே.சூர்யாவுக்கு தமிழ் மொழி மட்டுமல்லாது தெலுங்கு, இந்தி, ஹாலிவுட் படங்கள் வரை சென்று நடித்து பெரும் நடிகர் ஆகவேண்டும் என்னும் கனவு இருக்கிறது. அதற்காகவே தொடர்ந்து நிறைய கற்றுக்கொண்டும், முழு முயற்சியோடும் நடித்து வருகிறார். முன்னதாக, பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் அமிதாப் பச்சனை வைத்து உயர்ந்த மனிதன் என்னும் படத்தை இயக்கும் முயற்சியிலும் எஸ்.ஜே.சூர்யா ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற கேலரிக்கள்