அவ்வளவு மணி நேரம் காக்க வச்சு..2 மணிக்கு பாட கூப்பிட்டார்.. நான் என்ன பைத்தியமா? - ரஹ்மானை வெளுத்த பாடகர்!
ஒரு கட்டத்தில், இனியும் காத்திருக்க கூடாது என்று முடிவு செய்தேன். மேலும் அங்கிருந்தவர்களிடம் காலையில் பதிவு செய்யலாம் என்று சென்றேன். - அபஜீத்
(1 / 7)
அவ்வளவு மணி நேரம் காக்க வச்சு..2 மணிக்கு பாட கூப்பிட்டார்.. நான் என்ன பைத்தியமா? - ரஹ்மானை வெளுத்த பாடகர்!
(2 / 7)
1999 ஆம் ஆண்டு இயக்குநர் கதிர் இயக்கி சோனாலி பிந்த்ரே மற்றும் குணால் சிங் நடித்த காதலர் தினம் திரைப்படத்தின் ஹிந்தி வெர்ஷனில் இடம் பெற்ற ‘ஏ நஸ்னீன் சுனோ நா’ பாடலை பாடியிருந்தார் அபிஜீத் பட்டாச்சார்யா. தமிழில் ‘என்ன விலை அழகே’ பாடலாக வெளியான இந்தப்பாடலை உன்னிக்கிருஷ்ணன் பாடியிருந்தார். இந்தப்பாடலுக்கு பிறகு, ஏ.ஆர்.ரஹ்மானும் அபிஜீத்தும் இணைண்ட்இல்லை. இந்த நிலையில், இது குறித்து அவர் தனியார் சேனல் ஒன்றிற்கு பேசி இருக்கிறார்.
(3 / 7)
இது குறித்து அவர் பேசும் போது, ‘ நான் என்னுடைய மார்க்கெட்டின் உச்சத்தில் இருந்தேன். நானும் அவருடன் இணைந்த பாடலுக்கு அவரிடம் இருந்து அழைப்பு வந்த போது, ஹோட்டலில் அவருக்காக மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டியிருந்தது; ஒரு கட்டத்தில், இனியும் காத்திருக்க கூடாது என்று முடிவு செய்தேன். மேலும் அங்கிருந்தவர்களிடம் காலையில் பதிவு செய்யலாம் என்று சென்றேன்.2 மணிக்கு அழைப்பு வந்தது!இந்த நிலையில், நள்ளிரவு 2 மணிக்கு என்னை ஸ்டுடியோவுக்கு வரச்சொன்னார்கள்; நான் என்ன பைத்தியமா? நான் தூங்கிவிட்டேன் என்று கூறிவிட்டேன்.
(4 / 7)
அதனை தொடர்ந்து, நான் காலையில் சென்றேன்; ஆனால் ரஹ்மான் அங்கு இல்லை. வழக்கமான நேரங்களில் வேலை செய்யும் பழக்கம் இவர்களுக்கு இருப்பதில்லை.
(5 / 7)
நான் ஒரு முறையான நேரத்தில் வேலை செய்ய பழக்கப்பட்டவன்; படைப்பாற்றல் என்ற பெயரில், அதிகாலை 3:33 மணிக்கு பாடலை பதிவு செய்வேன் என்று சொன்னால், எனக்கு அது புரியாது’ என்று அபிஜீத் கூறினார்.
(6 / 7)
மேலும் பேசிய அவர், ‘ரஹ்மான் இறுதியில் பாடல் பதிவுக்கு வரவில்லை; ஒரு உதவியாளரை அனுப்பினார்; அங்கு வைக்கப்பட்ட ஏசியிலிருந்து வந்த அதிக குளிர் காரணமாக, எனக்கு ஜலதோஷம் வந்த போதிலும், நான் பாடினேன்.
மற்ற கேலரிக்கள்