தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Aadhaar Card Update: மீண்டும் ஒரு வாய்ப்பு..ஆதார் தகவல்களை இலவசமாக புதுப்பிக்க அவகாசம் நீட்டிப்பு - விபரம் இதோ..!

Aadhaar card Update: மீண்டும் ஒரு வாய்ப்பு..ஆதார் தகவல்களை இலவசமாக புதுப்பிக்க அவகாசம் நீட்டிப்பு - விபரம் இதோ..!

Jun 14, 2024 08:39 PM IST Karthikeyan S
Jun 14, 2024 08:39 PM , IST

  • பொதுமக்கள் தங்கள் ஆதார் விவரங்களை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வலியுறுத்தி உள்ளது.

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) இணையதளத்தின் வலைத்தளத்தின்படி, ஆதார் அட்டை விவரங்களை இப்போது செப்டம்பர் 14, 2024 வரை புதுப்பிக்கலாம், அதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

(1 / 6)

கடந்த 8 முதல் 10 ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்ட ஆதார் அட்டையில் உள்ள பெயர், முகவரி, புகைப்படம் போன்ற விவரங்களை புதுப்பித்துக் கொள்ள தற்போது வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, வங்கி கணக்கு புத்தகம் ஆகிய ஆவணங்களுடன் அருகில் உள்ள நிரந்தர ஆதார் சேவை மையத்தை அணுகலாம் அல்லது மை ஆதார் என்ற இணையதளத்திலும் புதுப்பித்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி பொதுமக்கள் தங்கள் ஆதார் தகவல்களை புதுப்பிக்கத் தொடங்கினர்.

(2 / 6)

ஆன்லைன் மூலம் புதுப்பிக்க கட்டணம் எதுவும் கிடையாது. நேரில் ஆதார் சேவை மையத்திற்கு சென்று திருத்தம் செய்வதற்கு மட்டும் 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

(3 / 6)

ஆதார் தகவல்களை கட்டணமின்றி புதுப்பிக்க, முதலில் 2023 டிசம்பர் 23ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. பின்னர் 2024 மார்ச் 13, ஜூன் 14 என அடுத்தடுத்து இந்த அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இந்த அவகாசம் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், மேலும் மூன்று மாதங்களுக்கு அதாவது, செப்டம்பர் 14 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, இனி செப்டம்பர் 14-ம் தேதி வரை கட்டணம் இன்றி ஆதாரில் திருத்தங்களை மேற்கொள்ளலாம். 

(4 / 6)

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஏற்படுத்தி கொடுத்துள்ள வசதிகள் மூலம் எளிதாக ஆதார் விவரங்களை மாற்ற முடியும். https://myaadhaar.uidai.gov.in/ என்ற இணைதளத்தில் லாக் இன் செய்து ஆதார் விவரங்களை இலவசமாக புதுப்பிக்கலாம்.

(5 / 6)

ஆதார் அட்டை புகைப்படத்தை மாற்ற விரும்பினால், இந்த வழிமுறைகளைப் பின்பற்றவும்: UIDAI இணையதளத்திலிருந்து ஆதார் பதிவு படிவத்தை பதிவிறக்கவும். தேவையான விவரங்களுடன் படிவத்தை நிரப்பவும். உங்கள் அருகிலுள்ள ஆதார் பதிவு மையம் / ஆதார் சேவை மையத்திற்குச் சென்று பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை பயோமெட்ரிக் தகவல்களுடன் சமர்ப்பிக்கவும். இங்கே உங்கள் நேரடி புகைப்படம் எடுக்கப்பட்டு, புதுப்பிப்பு கோரிக்கை எண்ணுடன் (URN) ஒப்புதல் சீட்டு வழங்கப்படும்.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்