‘நாளை விடுமுறை.. பொது போக்குவரத்து நிறுத்தம்.. IT ஊழியர்களுக்கு WFH’ திடீரென வந்த உத்தரவு!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  ‘நாளை விடுமுறை.. பொது போக்குவரத்து நிறுத்தம்.. It ஊழியர்களுக்கு Wfh’ திடீரென வந்த உத்தரவு!

‘நாளை விடுமுறை.. பொது போக்குவரத்து நிறுத்தம்.. IT ஊழியர்களுக்கு WFH’ திடீரென வந்த உத்தரவு!

Nov 29, 2024 08:53 PM IST Stalin Navaneethakrishnan
Nov 29, 2024 08:53 PM , IST

  • காற்றழுத்த தாழ்வு நிலை கரையை கடப்பதால், நாளை பொது போக்குவரத்திற்கு தற்காலிக தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் விபரங்கள் இதோ:

CTA icon
உங்கள் நகரின் வானிலை அறிய இங்கே கிளிக் செய்க
நாளை பிற்பகல் புயல் கரையை கடப்பதால், பல முக்கிய அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. 

(1 / 5)

நாளை பிற்பகல் புயல் கரையை கடப்பதால், பல முக்கிய அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. 

நவ.30 நாளை பிற்பகல், புயல் கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஓ.எம்.ஆர்.சாலையில் பொது போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்தி தமிழக அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. 

(2 / 5)

நவ.30 நாளை பிற்பகல், புயல் கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஓ.எம்.ஆர்.சாலையில் பொது போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்தி தமிழக அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. (PTI)

புயல் எச்சரிக்கை காரணமாக தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், தங்களது பணியாளர்களை நவ.30ம் தேதியான நாளை, வீட்டிலிருந்து பணிபுரிய (Work from Home) அறிவுறுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது. 

(3 / 5)

புயல் எச்சரிக்கை காரணமாக தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், தங்களது பணியாளர்களை நவ.30ம் தேதியான நாளை, வீட்டிலிருந்து பணிபுரிய (Work from Home) அறிவுறுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது. (PTI)

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (நவ.30) விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவு. மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு, தேர்வு போன்ற எந்த நிகழ்வுகளும் நாளை நடத்த வேண்டாம் என அறிவுறுத்தல்.

(4 / 5)

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (நவ.30) விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவு. மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு, தேர்வு போன்ற எந்த நிகழ்வுகளும் நாளை நடத்த வேண்டாம் என அறிவுறுத்தல்.(PTI)

பொதுமக்கள் அத்தியாவசிய தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்குமாறு, பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

(5 / 5)

பொதுமக்கள் அத்தியாவசிய தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்குமாறு, பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. (Lakshmi)

மற்ற கேலரிக்கள்