பிறப்பால் தமிழர்.. கேரளாவில் பெரிய ஸ்டார்.. வாழவைத்த மிமிக்ரி.. செண்டை தந்த அங்கீகாரம்.. நடிகர் ஜெயராமின் கதை
- பிறப்பால் தமிழர்.. கேரளாவில் பெரிய ஸ்டார்.. வாழவைத்த மிமிக்ரி.. செண்டை தந்த அங்கீகாரம்.. நடிகர் ஜெயராமின் கதையினை அவரது பிறந்தநாளான இன்று பார்ப்போம்.
- பிறப்பால் தமிழர்.. கேரளாவில் பெரிய ஸ்டார்.. வாழவைத்த மிமிக்ரி.. செண்டை தந்த அங்கீகாரம்.. நடிகர் ஜெயராமின் கதையினை அவரது பிறந்தநாளான இன்று பார்ப்போம்.
(1 / 6)
மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பிரபல நடிகராக அறியப்படுபவர், நடிகர் ஜெயராம். இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கும் இவரின் பிறந்தநாளான இன்று அவர் குறித்து அறிந்துகொள்ள நிறைய சுவாரஸ்யமான விஷயங்கள் உள்ளன.
(2 / 6)
1965ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் தேதி, கேரள மாநிலம் பெரும்பாவூரில் பிறந்தவர், நடிகர் ஜெயராம். இவரது தந்தையின் பெயர் சுப்ரமண்யம், தாயின் பெயர் தங்கம். ஜெயராமின் குடும்பமானது கேரளாவில் வசிக்கும் தமிழ்க்குடும்பம் ஆகும். அவரது அம்மாவின் சொந்த ஊர் தஞ்சாவூர். அவரது பாட்டானர்கள் சிலதலைமுறைகளுக்கு முன்பே கேரளாவுக்குப் புலம்பெயர்ந்துவிட்டனர். அதனால் ஜெயராம் வீட்டில் தமிழும், வெளியில் மலையாளமும் நன்கு பேசுவார். அதன்பின், காலடியில் ஸ்ரீசங்கரா கல்லூரியில் படித்தபின் மெடிக்கல் ரெப்ரசன்டிவ் ஆக பணிபுரிந்த ஜெயராம், கலாபவன் என்னும் மையத்தில் சேர்ந்து மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் ஆனார். அதன்பின் கிடைத்த புகழின் மூலம் சினிமாவில் ஜெயராமுக்கு வாய்ப்பு கிடைத்தது.
(3 / 6)
ஜெயராமின் மிமிக்ரி திறமையைக் கண்டு வியந்துபோன மலையாள இயக்குநர் பத்மராஜன் நடிகர் ஜெயராமுக்கு 1988ஆம் ஆண்டு அபரன் என்னும் படத்தில் வாய்ப்பு கொடுத்து, அறிமுகப்படுத்தப்பட்டார். அதனைத்தொடர்ந்து பத்மராஜனின் படங்களில் மூனாம் பாக்கம், இன்னலே ஆகியப் படங்களில் தொடர்ந்து நடித்தார். அபரன் படத்தில் நடிக்கும்போது, அப்படத்தில் நடித்த நடிகை பார்வதியுடன் ஜெயராமுக்கு காதல் ஏற்பட்டது. அதன்பின், 1992ஆம் ஆண்டு, செப்டம்பர் 7ஆம் தேதி ஜெயராம் மற்றும் பார்வதி ஆகியோர் திருமணம் செய்துகொண்டனர். அதன்பின், 1993ஆம் ஆண்டு, ஜெயராம் நடிப்பில் மேல்பரம்பில் ஆண்வீடு என்னும் படம் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. இதன்மூலம் மலையாளத்தின் முக்கிய 5 நடிகர்களில் ஒருவர் ஆனார், ஜெயராம்.
(4 / 6)
நடிகர் ஜெயராம் தனது கல்லூரியில் படிக்கும்போதே குரு பல்லசான நந்தகுமாரின் வழிகாட்டுதலின்படி, செண்ட மேளம் அடிக்கக் கற்றுக்கொண்டார். தனது திறமையை முக்கிய கோயில் திருவிழாக்களில் நடிகர் ஜெயராம் காட்டத்தவறவில்லை. இந்தியன் சினிமாவின் 100ஆவது ஆண்டுவிழா கொண்டாட்டத்தில் நடிகர் ஜெயராம் குழுவினர், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா முன் வாசித்த செண்டைகளி நிகழ்ச்சி அவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தைப் பெற்றுத்தந்தது.
(5 / 6)
நட்சத்திர தம்பதிகளான ஜெயராம் மற்றும் பார்வதி தம்பதியினருக்கு நடிகர் காளிதாஸ் என்ற மகனும் மாளவிகா என்ற மகளும் உள்ளனர். இதில் காளிதாஸும் நடிகராகி தமிழ், மலையாளப் படங்களில் நடித்து வருகிறார். அண்மையில் நடிகர் காளிதாஸ், தனுஷுடன் சேர்ந்து ராயன் படத்தில் நடித்து இருந்தார்.
(6 / 6)
தமிழில் கோகுலம், புருஷ லட்சணம், கோலங்கள், முறைமாமன், தெனாலி, நளதமயந்தி, தாம் தூம், உத்தம வில்லன், பஞ்ச தந்திரம், பொன்னியின் செல்வன், தி கோட் ஆகிய முக்கியப் படங்களில் நடித்திருக்கும் நடிகர் ஜெயராம் இதுவரை இரண்டு கேரள மாநில திரைப்பட விருது, ஒரு தமிழ்நாடு மாநில திரைப்பட விருது மற்றும் பத்மஸ்ரீ விருதினைப் பெற்றுள்ளார்.
மற்ற கேலரிக்கள்