Aruppakottai : சோகம்.. அருப்புக்கோட்டையில் சுட்டரிக்கும் வெயிலில் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர் உயிரிழப்பு!
- அருப்புக்கோட்டை செய்தியாளர் ராஜா சங்கர் நேற்று காரியாபட்டி அருகே ஆவியூர் பகுதியில் சுட்டெரிக்கும் கடும் வெயிலில் சென்று செய்தி சேகரித்துவிட்டு உடல் சோர்வடைந்த நிலையில், மீண்டும் அருப்புக்கோட்டைக்கு வந்த உடனே உடல் நலம் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் உயிரிழந்தார்.
- அருப்புக்கோட்டை செய்தியாளர் ராஜா சங்கர் நேற்று காரியாபட்டி அருகே ஆவியூர் பகுதியில் சுட்டெரிக்கும் கடும் வெயிலில் சென்று செய்தி சேகரித்துவிட்டு உடல் சோர்வடைந்த நிலையில், மீண்டும் அருப்புக்கோட்டைக்கு வந்த உடனே உடல் நலம் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் உயிரிழந்தார்.
உங்கள் நகரின் வானிலை அறிய இங்கே கிளிக் செய்க
(1 / 5)
பொதுவாக கோடைக்காலமானது மார்ச் முதல் ஜூன் வரை இருக்கும். இந்த காலகட்டத்தில் வெயில் சுட்டெரிக்கும். அதிலும் அக்னி நட்சத்திரம் என்று சொல்லப்படும் கத்தரி வெயில் காலங்களில் வெப்பம் அதிகரித்து காணப்படும்.
(2 / 5)
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் வெப்ப அலையின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இருபதுக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகி வருகிறது.
(3 / 5)
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ராஜா சங்கர்(42) செய்தி சேகரிக்க சென்று வந்த நிலையில் கடும் வெப்பம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
(4 / 5)
சன் தொலைக்காட்சி செய்தியாளராக பணியாற்றும் அவர் காரியாபட்டி அருகே ஆவியூரில் நடந்த வெடி விபத்து குறித்து செய்தி சேகரிக்க சுட்டெரிக்கும் கடும் வெயிலில் சென்று, செய்தி சேகரித்துள்ளார். கடும் வெயில் காரணமாக உடல் சோர்வடைந்த நிலையில் மீண்டும் அருப்புக்கோட்டைக்கு திரும்பி வந்துள்ளார்.
(5 / 5)
பின்னர், அவருக்கு உடல் நலம் கடுமையாக பாதிக்கப்படவே அவரது குடும்பத்தினர் அவரை அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவருக்கு திருமணம் செய்ய பெற்றோர் தீவிரமாக பெண் பார்த்து வந்துள்ளனர். இந்தநிலையில் அவரது திடீர் மரணம் குடும்பத்தினர் மற்றும் செய்தியாளர்கள், ஊடகவியலாளர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
மற்ற கேலரிக்கள்