பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் அறிந்ததும் அறியாததுமான பக்கங்கள்!
- சுதந்திரப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை வரலாற்றை அறிவோம்.
- சுதந்திரப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை வரலாற்றை அறிவோம்.
(1 / 4)
தமிழ்நாட்டில் ராமநாதபுரத்து மாவட்டத்தில் பசும்பொன் என்னும் கிராமத்தில் உக்கிரபாண்டி தேவருக்கும், இந்திராணி அம்மையாருக்கும் அக்டோபர் 30,1908ஆம் ஆண்டு ஒரே மகனாகப் பிறந்தவர். மிகுந்த வசதி வாய்ந்த குடும்பத்தில் பிறந்தாலும் இவர் தனது ஒரு வயதில் தாயை இழந்து தாய்ப்பாசத்திற்கு ஏங்கினார். பெரியதாயார் மீனலோசனி அம்மாவும், இஸ்லாமிய நட்புக்குடும்பத்தைச் சார்ந்த பெண்ணாலும் வளர்க்கப்பட்டார்.
(2 / 4)
1920களில் மதராஸ் மாகாணத்தில் அம்பலகாரர், வலையர், கள்ளர், மறவர், உப்புக்குறவர் மற்றும் சில சமூக மக்களை ஒடுக்கும் வகையில் குற்றப்பரம்பரை சட்டத்தை(கை ரேகை சட்டம்) கொண்டுவந்தது, பிரிட்டிஷ் அரசு. அதன்படி, இச்சமூகங்களைச் சேர்ந்த வயது வந்த ஆண்கள் இரவில் இருக்கும் காவல்நிலையத்தில் தங்கியிருந்துவிட்டு, கை ரேகையினைப் பதிவுசெய்துவிட்டு, காலையில் வீடு திரும்பவேண்டும். ஒரு அவசர ஆத்திரத்திற்காக வேறு ஒரு ஊருக்குச் செல்லவேண்டும் அனுமதிச்சீட்டுப் பெறவேண்டும் உள்ளிட்டப் பல்வேறு கொடுமைகள் அப்போது அமலில் இருந்தன. அதனை, எதிர்க்கும்விதமாக மதுரை(பிரிக்கப்படாத தேனி, திண்டுக்கல்), ராமநாதபுரம், நெல்லை ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த பாதிக்கப்பட்ட மக்களை சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒன்று திரட்டி போராட்டம் செய்தார். தேவர் தலைமையில் நடந்த தொடர்போராட்டங்களால், பின் இச்சட்டத்தை நீக்கியது பிரிட்டிஷ் அரசு.
(3 / 4)
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர், மிகச்சிறந்த முருக பக்தர். அவருக்கு மதுரையில் குடிகொண்டிருக்கும் அன்னை மீனாட்சி உற்ற கடவுளாகவும் திகழ்ந்தார். காலையில் எழுந்ததும், குளித்துவிட்டு முருகனையும் மீனாட்சியையும் வணங்கி நெற்றி நிறைய திருநீறுபூசிக்கொள்வார்
(4 / 4)
1957ஆம் ஆண்டு முதுகுளத்தூர் இடைத்தேர்தலில் பார்வர்ட் பிளாக் கட்சி வெற்றிபெற்றது. இது காங்கிரஸ் கட்சிக்கு எரிச்சலை செய்தது. இதனால் இரு சமுதாயத்தினருக்கு இடையே பிரச்னைகள் உருவாகி கலவரமாக வெடித்தன. அப்போது நடந்த கூட்டத்தில் இம்மானுவேல் சேகரனுக்கும் தேவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. பின் மறுநாள் இம்மானுவேல் சேகரன் பரமக்குடியில் அடையாளம் தெரியாத நபர்களால் கொல்லப்பட்டார். இக்கொலை தொடர்பாக, அதனைத்தொடர்ந்து செப்டம்பர் 28, 1957ல் திருச்சி மத்தியசிறையில் அடைக்கப்பட்டார், தேவர். பின், அரசியல் பழிவாங்கல் காரணமாக செய்யப்பட்ட கொலை எனவும், தேவர் குற்றமற்றவர் எனவும் 1959ஆம் ஆண்டு ஜனவரி மாதம் விடுவிக்கப்பட்டார்
மற்ற கேலரிக்கள்