சோகம்.. அட கருப்பி என் கருப்பி.. பரியேறும் பெருமாள் படத்தில் நடித்த கருப்பி பலி.. பட்டாசு வெடித்ததால் நேர்ந்த விபரீதம்!
- பரியேறும் பெருமாள் படத்தில் கருப்பி கதாபாத்திரத்தில் நடித்த செல்லப்பிராணி உயிரிழந்துள்ளது. வெடி சத்தத்தை கேட்டு தெறித்து ஓடிய கருப்பி நாய் சாலையில் வந்த வண்டி மீது மோதி உயிரிழந்துள்ளதுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- பரியேறும் பெருமாள் படத்தில் கருப்பி கதாபாத்திரத்தில் நடித்த செல்லப்பிராணி உயிரிழந்துள்ளது. வெடி சத்தத்தை கேட்டு தெறித்து ஓடிய கருப்பி நாய் சாலையில் வந்த வண்டி மீது மோதி உயிரிழந்துள்ளதுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
(1 / 5)
இயக்குநர் மாரி செல்வராஜின் முதல் படமாக உருவான திரைப்படம் 'பரியேறும் பெருமாள்'. இயக்குநர் பா.ரஞ்சித்தின் தயாரிப்பு நிறுவனமான நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் இப்படம் தயாரிக்கப்பட்டது. இப்படத்தில் கதிர், கயல் ஆனந்தி, யோகிபாபு, இயக்குநர் மாரிமுத்து, பூ ராமு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்தார். இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
(2 / 5)
பரியேறும் பெருமாள் படத்தில் ஆதிக்க சாதி சமூகத்தை சார்ந்த ஜோவும், ஒடுக்கப்பட்ட சமூகத்தில் உள்ள பரியனும் நட்பாக பழகுகிறார்கள். அவர்களை ஆதிக்க சாதி சமூகம் எப்படி நடத்துகிறது எப்படி ஒடுக்குமுறைக்கு உள்ளாக்குகிறது என்பதை அழகாக காட்சிப்படுத்தியிருப்பார் மாரி செல்வராஜ்.
(3 / 5)
இப்படத்தில் யோகி பாபுவின் நட்பு, தாத்தாவின் கொடூரமான காட்சிகள், செல்லப் பிராணியான கருப்பி, பரியனின் அப்பாவின் நடிப்பு என எதார்த்தமான பேச்சு என படம் முழுக்க தவிர்க்க முடியாத காட்சிகள் ஏராளம். கிளைமாக்ஸ் காட்சி ஒரு கருப்பு டீ மற்றும் ஒரு பால் டீ அடங்கிய இரண்டு டம்ளர்கள் என காட்டி சமூகத்தில் சாதிய ஆணவத்தை காட்டி இருபார் மாரி செல்வராஜ்.
(4 / 5)
இப்படத்தில் கருப்பி எனும் செல்லப்பிராணி நடித்திருந்தது. அந்த செல்லப்பிராணி படத்தின் கதையோட்டத்தை உணர்ச்சிப்பூர்வமான கட்டத்திற்கு அழைத்துச் செல்வதில் முக்கிய பங்கு வகித்தது. இதனால் இப்படத்தில் இடம்பெற்றிருந்த கருப்பி எனும் பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் பரியேறும் பெருமாள் படத்தில் கருப்பி கதாபாத்திரத்தில் நடித்த செல்லப்பிராணி உயிரிழந்துள்ளது.
மற்ற கேலரிக்கள்