ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ஜூன் மாதம்.. திரைக்கு வரும் ஹை- பட்ஜெட் படங்கள் ஒரு லிஸ்ட்!
திரையுலக ரசிகர்களால் மிகவும் ஆர்வமாக எதிர்பார்க்கப்பட்ட சில திரைப்படங்கள் வரும் ஜூன் மாதம் திரைக்கு வரவுள்ளன. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பலமொழி ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட படங்கள் என்னென்ன என்பதை நாம் இங்கு பார்க்கலாம்.
(1 / 8)
இந்தியா முழுவதும் பல்வேறு மொழிகளில் உருவான பெரிய பட்ஜெட், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்கள் ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளன. இந்தப் படங்களுக்காக ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
(2 / 8)
ஜூன் 27 அன்று இந்திய அளவில் வெளியாக உள்ள தெலுங்கு திரைப்படம் கண்ணப்பா. மஞ்சு விஷ்ணு, பிரபாஸ், அக்ஷய் குமார் போன்ற நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்தப் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
(3 / 8)
மணிரத்னம் இயக்கத்தில், கமல்ஹாசன் நாயகனாக நடித்துள்ள தமிழ் திரைப்படம் தக் லைஃப். இந்தப் படம் ஜூன் 5 அன்று வெளியாக உள்ளது. இதில் திரிஷா, சிம்பு ஆகியோரும் நடித்துள்ளனர். 30 வருடங்களுக்கு பின் மணிரத்னம் கமல் கூட்டணியில் படம் உருவாக இருப்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
(4 / 8)
இந்தியில் ஜூன் 5 ஆம் தேதி காஜோல் நடித்த 'மா' திரைப்படம் வெளியாக உள்ளது. விஷால் பூரியா இயக்கியுள்ள இந்தத் திரைப்படம் ஒரு சுவாரஸ்யமான, மர்மமான திரில்லர் ஆகும்.
(5 / 8)
உதய்பூரில் கன்ஹையலால் என்ற ஒரு தையல்காரர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டதை மையமாகக் கொண்டு உருவான ஞானவாபி ஃபைல்ஸ் - எ டைலர் மர்டர் ஸ்டோரி' ஜூன் 27 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
(6 / 8)
'சிதாரே ஜமீன் பர்' 2025 ஜூன் 20 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படம் 2007 ஆம் ஆண்டு ஆமிர் கான் நடித்த 'தாரே ஜமீன் பர்' படத்தின் தொடர்ச்சியாகும். இதில் ஆமிர் ஒரு கூடைப்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார்.
(7 / 8)
டிஸ்னி, பிக்சர் மூவிஸில் இருந்து வரும் அனிமேஷன் அறிவியல் புனைகதை திரைப்படம் எலியோ. இந்தப் படம் ஜூன் 20 அன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
மற்ற கேலரிக்கள்