இந்திய மக்கள் பார்க்கவே கூடாதென தடை செய்யப்பட்ட படங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா? சமூகத்தில் சர்ச்சையை கிளப்பிய படங்கள்
காதல், மதம், பெண்கள், போர் போன்ற சில சென்சிடிவ்வான விஷயங்களைப் பற்றி பேசி இந்திய மக்கள் பார்ககவே தடை விதிக்கப்பட்ட சில படங்களைப் பற்றி தெரியுமா? இதோ சில படங்களின் விவரங்கள்.
(1 / 8)
காதல், மதம், பெண்கள், போர் போன்ற சில சென்சிடிவ்வான விஷயங்களைப் பற்றி பேசி இந்திய மக்கள் பார்ககவே தடை விதிக்கப்பட்ட சில படங்களைப் பற்றி தெரியுமா? இதோ சில படங்களின் விவரங்கள்.
(2 / 8)
"தி பெயிண்டெட் ஹவுஸ்" (The Painted House) என்ற படம் 2015ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியானது. இந்தப் படமானது சந்தோஷ், சதீஷ் என்ற சகோதரர்களால் இயக்கப்பட்டது. தமிழில் இந்தப் படம் வானம் பூசிய வீடு என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்தப் படத்தில் சில ஆபாசமான காட்சிகள் இருப்பதாகக் கூறி தணிக்கை வாரியம் படத்தை தடை செய்தது. பின் நீதிமன்றம் தலையிட்டு எந்த தணிக்கையும் இல்லாமல் வெளியிட்டது.
(3 / 8)
"லிப்ஸ்டிக் அண்டர் மை புர்கா" (Lipstick Under My Burkha) படம் 2016 ஆம் ஆண்டு இந்தி மொழியில் வெளியானது. இதனை அலன்க்ரிதா ஸ்ரீவாஸ்தவா எழுதி இயக்கியிருந்தார். இந்தப் படத்தை இந்தியாவில் வெளியிட தணிக்கை வாரியம் முதலில் மறுத்த போகும் பெண்களை மையப்படுத்திய கதை என்று கூறி சில சென்சார் கட்டுகளுடன் படம் வெளியானது.
(4 / 8)
"இந்தியா'ஸ் டாட்டர்" (India's Daughter) என்பது 2015 ஆம் ஆண்டு வெளியான லெஸ்லி உட்வின் இயக்கிய ஆவணப்படம் ஆகும். இது 2012 ஆம் ஆண்டு புது தில்லியில் ஜோதி சிங் என்ற மாணவி பேருந்தில் கும்பல் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை பேசுகிறது. இந்தப் படம், பாதிக்கப்பட்ட பெண்ணின் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் குற்றவாளிகள் உட்பட பலரின் நேர்காணல்களை கொண்டிருப்பதால் இந்தியாவில் இந்தப் படம் தடை செய்யப்பட்டுள்ளது.
(5 / 8)
"அன்ஃபிரீடம்" (Unfreedom) என்பது 2014 ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்திய இந்தி திரைப்படம். இது ஓரினச்சேர்க்கை மற்றும் மத அடிப்படைவாதம் போன்ற சர்ச்சைக்குரிய விஷயங்களைப் பேசுகிறது. நியூயார்க்கில் வசிக்கும் ஒரு ஓரினச்சேர்க்கையாளரான பெண்ணின் கதையும், ஒரு மத அடிப்படைவாதியின் கதையும் இணையாக சொல்லப்படுகிறது. இதனால், இந்தப் படம் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது.
(6 / 8)
"வாட்டர்" (Water) திரைப்படம் 2005 ஆம் ஆண்டு தீபா மேத்தா இயக்கத்தில் வெளியானது. இது 1938 ஆம் ஆண்டு காலனித்துவ இந்தியாவில் விதவைகளின் வாழ்க்கையை மையமாகக் கொண்டது. இந்தப் படம் விதவைகளின் பரிதாபகரமான நிலையையும், அவர்கள் எதிர்கொள்ளும் சமூகக் கொடுமைகளையும் காட்டியதால் இந்தியாவில் படப்பிடிப்பு நடத்தவே அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் படப்பிடிப்பே இலங்கையில் நடந்தது. இந்தப் படத்தை இந்து மத ஆதரவாளர்கள் கடுமையாக எதிர்த்தனர்.
(7 / 8)
"சின்ஸ்" (Sins) என்ற படத்தை வினோத் பாண்டே இயக்கி தயாரித்ததுசன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவும் செய்தார். 2005 ஆம் ஆண்டு வெளியான இந்த இந்திய ஆங்கிலத் திரைப்படம் கேரள பாதிரியாரின் பாலியல் தொல்லை மற்றும் கொலை குற்றத்தில் தொடர்புடையதைப் பற்றி விவரிக்கிறது. இந்தப் படம் ஒரு மதத்தை எதிர்மறையாக சித்தரிப்பதாகக் கூறி படத்திற்கு தடை விதிக்க வழக்கு தொடரப்பட்டது.
(8 / 8)
"இன்ஷாஅல்லாஹ் ஃபுட்பால்" (Inshallah, Football) என்ற ஆவணப்படம் 2010 ஆம் ஆண்டு வெளியானது. அஷ்வின் குமார் இயக்கியிருந்த இந்த படம் காஷ்மீரை சேர்ந்த கால்பந்து வீரரை மையப்படுத்தியுள்ளது. இந்தப் படத்தில் கால்பந்துடன் காஷ்மீரின் அழகும் ராணுவமயமாக்கலால் உண்டான நெருகக்டி, போரினால் பாதிக்கப்படும் குழந்தைகள் குறித்து பேசியதால் அடெல்ட் கண்டென்ட் படமாக சான்று வழங்கப்பட்டது.
மற்ற கேலரிக்கள்