Republic Day In Tamil Nadu: களை கட்டிய கலைநிகழ்ச்சி! வீறு நடை போட்ட முப்படை! கொடியேற்றிய ஆளுநர்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Republic Day In Tamil Nadu: களை கட்டிய கலைநிகழ்ச்சி! வீறு நடை போட்ட முப்படை! கொடியேற்றிய ஆளுநர்!

Republic Day In Tamil Nadu: களை கட்டிய கலைநிகழ்ச்சி! வீறு நடை போட்ட முப்படை! கொடியேற்றிய ஆளுநர்!

Jan 26, 2025 10:22 AM IST Suguna Devi P
Jan 26, 2025 10:22 AM , IST

  • Republic Day In Tamil Nadu: நாட்டின் 76 ஆவது குடியரசு தின விழா நாடு முழுவயதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிலும்  மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்தார்.

தமிழ்நாட்டின் குடியரசு தினவிழா நிகழ்ச்சி  சென்னையில் மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலை அருகே நடந்தது. இதில் ஆளுநர் ரவி, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் பிற அமைச்சர்கள் என பலர் கலந்துக் கொண்டனர்.  தமிழக போக்குவரத்து காவல் படையினரின் வாகன அணிவகுப்புடன் முதல்வர் ஸ்டாலினும், அவரை தொடர்ந்து, ராணுவ வாகன அணிவகுப்புடன் ஆளுநர் ரவியும் விழா நடைபெறும் இடத்துக்கு வந்து சேர்ந்தார்கள். 

(1 / 8)

முப்படை தளபதிகள், காவல் துறை உயர் அதிகாரிகள் ஆகியோர் ஆளுநருக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்ட பின்னர் மூவர்ணக் கொடியை ஏற்றினார். மேலே ஹெலிக்காப்டரில் இருந்து மலர்கள் தூவ அனைவரும் தேசிய கீததத்திற்கு மரியாதை செலுத்துகின்றனர். 

(2 / 8)

ஆளுநர் கொடியை ஏற்றியதும் பிற நிகழ்வுகள் நடந்தேறின. இந்த நிகழ்ச்சியில் ஆளுநரின் மனைவியும் அவருடன் இருந்தார். மேலும் முப்படைத் தளபதிகளும் அவர் அருகில் நின்றிருந்தனர். 

(3 / 8)

பின்னர வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கம், மத நல்லிணக்கத்துக்கான கோட்டை அமீர் பதக்கம், திருத்திய நெல் சாகுபடிக்கான விருதுகள், மதுவிலக்கு தொடர்பான காந்தியடிகள் பதக்கங்கள், சிறந்த காவல் நிலையத்துக்கான விருது உள்ளிட்ட பல  விருதுகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார்.

(4 / 8)

ராணுவம், கடற்படை, விமானப்படை, கடலோர காவல் படை, தமிழக காவல் துறையின் பல்வேறு பிரிவினர், தேசிய மாணவர் படையினர், தமிழக வனத்துறை, சிறைத்துறை, தீயணைப்பு துறை, பள்ளி, கல்லூரிகளின் பேண்டு வாத்திய குழுவினர், சாரண, சாரணிய பிரிவினர், ஊர்க்காவல் படையினர் உள்ளிட்டோரின் அணிவகுப்பு நடந்தது. 

(5 / 8)

தமிழக கலை, பண்பாட்டு துறை சார்பில் பல்வேறு மாநில கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள், பள்ளி, கல்லூரி மாணவிகளின் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 

(6 / 8)

விழா மேடையில் சபாநாயகர் அப்பாவு, மீன்வளத்துறை அமைச்சர் துரை முருகனும் அமர்ந்து நிகழ்ச்சியை கண்டு களித்தனர். இவர்கள் உடன் ஆளுநரின் மனைவியும் இருந்தார். 

(7 / 8)

நிகழ்ச்சியை பார்ப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த மேடையில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மா. சுப்ரமணியன் உட்பட அமைச்சர்கள் இருந்தனர். மேலும் சென்னை மேயர் பிரியாவும் இந்த நிகழ்ச்சியில் இருந்தார். 

(8 / 8)

மற்ற கேலரிக்கள்