7 Brain Teasers : உங்கள் குழந்தைகளின் மூளையை ஷார்ப்பாக்கும் 7 விஷயங்கள்; இதை தினமும் செய்வது கட்டாயம்!
- 7 Brain Teasers : உங்கள் குழந்தைகளின் மூளையை ஷார்ப்பாக்கும் 7 விஷயங்கள்; இதை தினமும் செய்வது கட்டாயம்!
- 7 Brain Teasers : உங்கள் குழந்தைகளின் மூளையை ஷார்ப்பாக்கும் 7 விஷயங்கள்; இதை தினமும் செய்வது கட்டாயம்!
(1 / 7)
பழ விடுகதைகள் - நான் ஒரு பழம், நான் பழுத்திருப்பேன், நான் மஞ்சள் நிறத்தில் இருப்பேன், குரங்குகளுக்கு பிடித்த பழம் நான், நான் ஒரு சீப்பாகத்தான் இருப்பேன். நான் யார்? இப்படி நீங்கள் ஒரு விடுகதை கேட்டால், அதற்கு வாழைப்பழம் தான் பதில். வெளியே முள்ளாக இருப்பேன், உள்ளே சுவையாக இருப்பேன் என்று நீங்கள் ஒரு விடுகதை கேட்டால் அதற்கு பதில் பலாப்பழம். இப்படி பழத்தின் குணங்கள் மற்றும் நிறங்களைக் அதாவது, பழத்தின் மற்ற அடையாளங்கள் அனைத்தையும் கூறி அதன் பெயரை மட்டும் கூறாமல், அது என்ன என்று கண்டுபிடிக்க வேண்டும் என்று உங்கள் குழந்தைகளிடம் கூறினால், அவர்கள் கண்டுபிடிப்பார்கள். அப்போது அவர்கள் அதற்காக யோசிப்பார்கள். இதனால் அவர்களின் மூளைக்கு வேலைக்கு கொடுக்கப்பட்டு, அவர்கள் சிந்திக்க துவங்குவார்கள். அவர்களின் மூளை ஷார்ப்பாகும்.
(2 / 7)
திருவிழா விடுகதைகள் - நான் விளக்குகள் ஏற்றி கொண்டாடப்படுவேன். புத்தாடை அணிந்து, இனிப்புகள் சாப்பிட்டு, பட்டாசுகள் வெடித்து மக்கள் என்னை கொண்டாடுவார்கள். வீடுகளை அலங்கரித்து பரிசுகளை வழங்கி, கொண்டாடுவார்கள். நான் எந்தப்பண்டிகை என நீங்கள் கேட்டால் அதற்கு பதில் தீபாவளி. இதுபோன்ற தகவல்களைக் கொடுக்கலாம் அல்லது இந்த மாதத்தில் கொண்டாடப்படும். இந்த இடத்தில் கொண்டாடப்படும் என்ற வேறு தகவல்களையும் கொடுத்து நீங்கள் விடுகதைகளுக்கு விடைகள் வாங்கும்போது அவர்கள் பல்வேறு விதமாக சிந்தித்து அவர்களின் மூளையை ஷார்ப்பாக்கிக்கொள்வார்கள்.
(3 / 7)
ஆட் ஒன் அவுட் - இதில் எது இந்த கூட்டத்தில் இல்லாதது என்பதை கண்டுபிடியுங்கள். அதாவது நீங்கள் 4 விஷயங்களைக் கூறவேண்டும். எடுத்துக்காட்டாக யானை, புலி, திமிங்கலம், சிங்கம். இதில் வேறுபட்டது எது என்று அவர்கள் கண்டுபிடிக்கவேண்டும். இதற்கான விடை திமிங்கலம். அதாவது மற்றவை மூன்றும் நிலத்தில் வாழும் விலங்குகள், திமிங்கலம் மட்டும்தான் நீரில் வாழக்கூடிய விலங்கு. எனவே கூட்டத்தில் இல்லாத ஒன்று தான் சரியான பதில். அதையும் அவர்கள் யோசித்து விடைளுகுக்கும்போது, அவர்களின் மூளை சுறுசுறுப்பாகும்.
(4 / 7)
குடும்ப மரம் - ராமின் தந்தைக்கு 4 குழந்தைகள். முதல் குழந்தையின் பெயர் ராமு, இரண்டாவது குழந்தையின் பெயர் ஷ்யாம், மூன்றாவது குழந்தையின் பெயர் லட்சுமி, நாலாவது குழந்தையின் பெயர் என்ன? ராம் என்பதுதான் சரியான பதில். இதற்கு அவர்கள் பல்வேறு வகைகளில் சிந்தித்து அவர்கள் பதில் கொடுக்கவேண்டும். ஆனால் கேள்வியிலேயே பதிலும் உள்ளது. இது மிகவும் எளிய ஒன்றுதான். எனினும், இதற்காக அவர்கள் மிகவும் சிந்திப்பார்கள். கஷ்ப்படுவார்கள். அப்போது அவர்களின் மூளை சுறுசுறுப்பாகும்.
(5 / 7)
பழங்காலத்து விடுகதைகள் - நான் வாயில்லாமல் பேசுவேன், காதில்லாமல் கேட்பேன், ஆனால் எனக்கு உடல் கிடையாது. ஆனால் நான் காற்றில் கலந்து உயிருடன் வருவேன். நான் யார்? இதற்கான பதில் எக்கோ. இதுபோன்ற எண்ணற்ற பழங்கால விடுகதைகளை நீங்கள் இணையதளத்தில் தேடலாம். குழந்தைகளின் வயதுக்கு ஏற்ப, அவர்கள் கண்டுபிடிக்க முடிந்த அளவுக்காக விடுகதைகள் உள்ளது. அவற்றை தினமும் அவர்களிடம் கேட்கலாம். இதனால் அவர்களின சிந்தனை திறன் அதிகரித்து, அவர்களின் மூளையை சுறுசுறுப்பாக்கும்.
(6 / 7)
வடிவ விடுகதைகள் - எனக்கு நான்கு சரிசமமான பக்கங்கள் உண்டு, 4 சரியான கோணங்களும் உண்டு. நான் யார்? அதற்கான விடை - சதுரம். இதுபோன்ற விடுகதைகளையும் நீங்கள் கேட்கும்போது குழந்தைகளின் மூளை சுறுசுறுப்பாகும்.
(7 / 7)
மறைந்திருக்கும் விலங்கு விடுகதை - நான் பறப்பேன் ஆனால் எனக்கு இறக்கையில்லை. நான் அழுவேன், ஆனால் எனக்கு கண்கள் இல்லை. நான் செல்லும் இடத்தில் இருள் பறந்தோடும். நான் யார்? இதற்கு பதில் மேகம். இதுபோன்ற விடுகதைகளும் உங்கள் குழந்தைகளை சிந்திக்க தூண்டும். இவையெல்லாம் இணையதளத்திலேயே கொட்டிக்கிடக்கும். இவற்றை உங்கள் குழந்தைகளின் வயதுக்கு பொருத்தமானதை தேர்ந்தெடுத்து கேட்டால் அவர்களுக்கு அது பயனுள்ளதாக இருக்கும்.
மற்ற கேலரிக்கள்