5 Rasis: பிறப்பிலேயே சிக்கலான 5 ராசிகள் மற்றும் அவர்களின் குணாதிசியங்கள்
- வானியல் மற்றும் சோதிட சாஸ்திரத்தின்படி,நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளும் ராசிகளில் எதிரொலிக்கின்றன. பூமியில் பிறந்த ஒவ்வொருவருக்கும் பிறந்த நேரம், பிறந்த இடம் ஆகியவற்றை வைத்து ராசி, நட்சத்திரம் கணிக்கப்படுகிறது.
- வானியல் மற்றும் சோதிட சாஸ்திரத்தின்படி,நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளும் ராசிகளில் எதிரொலிக்கின்றன. பூமியில் பிறந்த ஒவ்வொருவருக்கும் பிறந்த நேரம், பிறந்த இடம் ஆகியவற்றை வைத்து ராசி, நட்சத்திரம் கணிக்கப்படுகிறது.
(1 / 6)
சிலர் பிறக்கும் இடம், ராசி ஆகியவற்றை வைத்து செய்யும் ஒவ்வொருரின் குணாதிசியங்களையும் ஜோதிட சாஸ்திரம் கூடுகிறது. அந்தவகையில் சில ராசியினரை பிறநபர்கள் கையாள்வது மிகவும் அப்படி. ஏனென்றால், இந்த ராசியினர் செய்யும் செயல் பலருக்கும் எரிச்சலைத் தரலாம். அத்தகைய 5 ராசிகள் குறித்து காண்போம்.
(2 / 6)
மேஷம்: இந்த ராசியினர் பலரின் பிரச்னைகளில் ஏன், எதற்கு, எப்படி என ஆராயாமல் நுழைந்து பிறருக்கு சிக்கலை ஏற்படுத்திவிடுவர். இவர்களுக்கு நிதானம் மிகவும் குறைவு. அதை சரிசெய்தால், இந்த ராசியினரைப் பிறர் தவறாக எண்ணாமல் இருக்கலாம்.
(3 / 6)
கடகம்: இந்த ராசியினர் பலருக்குப் பிடித்தமானவர்களாக இருந்தாலும், இவர்களது மனநிலை குரங்குபோல் தாவிக்கொண்டே இருக்கும். ஆகையால், இது இவர்களைச் சுற்றி இருப்பவர்களுக்கு எரிச்சலைத் தரலாம். இதைத்தவிர்க்க, மனதை ஒரு நிலைப் படுத்தி, ஆராய்ந்து, ஒவ்வொரு செயலையும் நிறைவேற்றவேண்டும்.
(4 / 6)
துலாம்: தராசு போல் நடுநிலைமையானவர்கள் துலாம் ராசியினர். இவர்களின் நடுநிலைமைத் தன்மைப் பலருக்கு கோபத்தை மூட்டி, இவர்களை வெறுக்கவைக்கலாம். இவர்கள் இடத்திற்கு ஏற்றபோல் சூது வாதுடன் இருக்க தெரிந்தால் தப்பிக்கலாம். இல்லையேல், பிரச்னை தான். மனசாட்சிக்குக் கட்டுப்பட்டு ஒவ்வொரு விஷயத்தின் சரி, தவறுகளை சரிசெய்யலாம்.
(5 / 6)
விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரரின் ஓவர் கன்ஃபிடன்ஸ் மற்றவர்களுக்கு எரிச்சலைத் தரலாம். அதேபோல், எதற்கெடுத்தாலும் இவர்கள் இப்படித்தான் என வெறுப்பை உமிழ்வார்கள். அதனைக் கட்டுப்படுத்தினால், விருச்சிகராசிக்காரர்களுக்கு சமூகத்தில் நல்ல மதிப்பு கிட்டும். அதேபோல், விருச்சிக ராசிக்காரர்களின் சந்தேக குணம் தான், அவர்களின் வாழ்க்கையை அழிக்கும் சத்ரு. விருச்சிக ராசி பெண்கள், தங்கள் கணவரையோ அல்லது கணவர் வீட்டாரையோ சந்தேகப்பட்டுக்கொண்டே இருப்பர். அதை மாற்றினால், இல்வாழ்க்கை சுபமாகும்.
(Freepik)(6 / 6)
கும்பம்: இந்த ராசியினர், இவர்களைச் சுற்றி இருப்பவர்களைக் கண்டுகொள்ளாமல் பல செய்கைகளை செய்வதால், இவர்கள் மீது பலருக்கு காழ்ப்புணர்ச்சி வரும். மற்றவர்களுடன் ஒப்பிட்டு, தான் தான் பெரிய ஆள் போல் இருந்தாலும் பிறர் மீது பாசம் காண்பித்தால் மதிப்பார்கள். இல்லையென்றால், வாழ்க்கை நரகம் தான்.
(பொறுப்புத்துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பொதுவான அடிப்படையில் உள்ளன. தெளிவாக தெரிந்து கொள்ள சரியான நிபுணரை அணுகி அறிந்து கொள்ளவும்.)
மற்ற கேலரிக்கள்