NASA: பூமியை நோக்கி வேகமாக வரும் 5 சிறுகோள்கள்-நாசா எச்சரிக்கை
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Nasa: பூமியை நோக்கி வேகமாக வரும் 5 சிறுகோள்கள்-நாசா எச்சரிக்கை

NASA: பூமியை நோக்கி வேகமாக வரும் 5 சிறுகோள்கள்-நாசா எச்சரிக்கை

Jan 08, 2024 04:18 PM IST Manigandan K T
Jan 08, 2024 04:18 PM , IST

வரும் நாட்களில் பூமிக்கு அருகில் 5 பெரிய சிறுகோள்கள் வரவுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. அவற்றின் வேகம், தூரம், அளவு முதல் மற்ற விவரங்கள் வரை, நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

சிறுகோள் 2023 JR1: இது ஒரு பேருந்து அளவை கொண்டது, 39-அடி சிறுகோள், மணிக்கு 72864 கிலோமீட்டர் வேகத்தில் பூமியை நோக்கி பயணிக்கிறது. நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகம் (ஜேபிஎல்) இதைப் பற்றி எச்சரித்துள்ளது.389000 கிலோமீட்டர் தொலைவில் பூமிக்கு மிக அருகில் நெருங்கி வரும் என்று தெரிவித்துள்ளது.

(1 / 5)

சிறுகோள் 2023 JR1: இது ஒரு பேருந்து அளவை கொண்டது, 39-அடி சிறுகோள், மணிக்கு 72864 கிலோமீட்டர் வேகத்தில் பூமியை நோக்கி பயணிக்கிறது. நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகம் (ஜேபிஎல்) இதைப் பற்றி எச்சரித்துள்ளது.389000 கிலோமீட்டர் தொலைவில் பூமிக்கு மிக அருகில் நெருங்கி வரும் என்று தெரிவித்துள்ளது.(Pixabay)

சிறுகோள் 2023 ஜேபி: நமது கிரகத்தை நோக்கி வரும் மற்றொரு சிறுகோள் இதுவாகும். இந்த 85 அடி, விமானம் அளவிலான சிறுகோள் பூமிக்கு மிக அருகில் 3.23 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் பூமியை நெருங்கி வியக்க வைக்கும் வகையில் பயணிக்கும் என்று நாசா தெரிவித்துள்ளது. மணிக்கு 27972 கிலோமீட்டர் வேகத்துடன் இது வருகிறது.

(2 / 5)

சிறுகோள் 2023 ஜேபி: நமது கிரகத்தை நோக்கி வரும் மற்றொரு சிறுகோள் இதுவாகும். இந்த 85 அடி, விமானம் அளவிலான சிறுகோள் பூமிக்கு மிக அருகில் 3.23 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் பூமியை நெருங்கி வியக்க வைக்கும் வகையில் பயணிக்கும் என்று நாசா தெரிவித்துள்ளது. மணிக்கு 27972 கிலோமீட்டர் வேகத்துடன் இது வருகிறது.(NASA)

சிறுகோள் 2023 JL1:  பூமியை நோக்கி வரும் இந்த 39 அடி சிறுகோளுக்கு 2023 JL1 என பெயரிடப்பட்டுள்ளது. இது பேருந்து அளவிலான சிறுகோள் ஆகும். மணிக்கு 26316 கிலோமீட்டர் வேகத்தில் பயணிப்பதாக நாசா எச்சரித்துள்ளது. இந்த ராட்சத சிறுகோள் 2.49 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் பூமிக்கு மிக அருகில் வரும்.

(3 / 5)

சிறுகோள் 2023 JL1:  பூமியை நோக்கி வரும் இந்த 39 அடி சிறுகோளுக்கு 2023 JL1 என பெயரிடப்பட்டுள்ளது. இது பேருந்து அளவிலான சிறுகோள் ஆகும். மணிக்கு 26316 கிலோமீட்டர் வேகத்தில் பயணிப்பதாக நாசா எச்சரித்துள்ளது. இந்த ராட்சத சிறுகோள் 2.49 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் பூமிக்கு மிக அருகில் வரும்.(Pixabay)

சிறுகோள் 2023 JO1: இந்த 46 அடி, கட்டிட அளவிலான பிரம்மாண்டமான சிறுகோள் மே 16, 2023 அன்று பூமியின் கிரகத்தை நெருங்கும். இந்த சிறுகோள் 2.99 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் கிரகத்தை நெருங்கும். இது மணிக்கு 29772 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கிறது.

(4 / 5)

சிறுகோள் 2023 JO1: இந்த 46 அடி, கட்டிட அளவிலான பிரம்மாண்டமான சிறுகோள் மே 16, 2023 அன்று பூமியின் கிரகத்தை நெருங்கும். இந்த சிறுகோள் 2.99 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் கிரகத்தை நெருங்கும். இது மணிக்கு 29772 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கிறது.(Pixabay)

சிறுகோள் 2023 JS1: இந்த 39 அடி சிறுகோள் 2.17 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் பூமிக்கு மிக அருகில் வரும். இந்த சிறுகோள் மணிக்கு 28692 கிலோமீட்டர் வேகத்தில் பயணிப்பதாகவும், எந்த வித அச்சுறுத்தல் மற்றும் ஆபத்தை ஏற்படுத்தாமல் கிரகத்தை கடந்து செல்லும் என்றும் கூறப்படுகிறது.

(5 / 5)

சிறுகோள் 2023 JS1: இந்த 39 அடி சிறுகோள் 2.17 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் பூமிக்கு மிக அருகில் வரும். இந்த சிறுகோள் மணிக்கு 28692 கிலோமீட்டர் வேகத்தில் பயணிப்பதாகவும், எந்த வித அச்சுறுத்தல் மற்றும் ஆபத்தை ஏற்படுத்தாமல் கிரகத்தை கடந்து செல்லும் என்றும் கூறப்படுகிறது.(Pixabay)

மற்ற கேலரிக்கள்