Mens Excercise: ஜிம் போகாவிட்டாலும் பரவாயில்லை.. தினமும் வீட்டில் இந்த உடற்பயிற்சியை செய்தாக பிட்டாக இருக்கலாம்
Mens Excercise For Daily Routine: ஆண்கள் ஜிம்முக்கு செல்லாமலேயே ஃபிட்டாகவும், வலுவாகவும் இருக்க உதவும் பயிற்சிகள் எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்
(1 / 7)
நீங்கள் ஆரோக்கியமாகவும் ஃபிட்டாகவும் இருக்க விரும்பினால், தினசரி உடற்பயிற்சி செய்வது அவசியம். அந்த வகையில் ஜிம் செல்லாமல் வீட்டில் வைத்து தங்களது தினசரி வழக்கத்தில் சில உடற்பயிற்சிகளை சேர்ப்பதன் மூலம் ஆரோக்கியத்தையும், பிட்னஸையும் ஆண்கள் தக்க வைத்து கொள்ள முடியும்
(2 / 7)
மேல் உடலை பிட்டாக வைக்க புஷ்அப்கள்: உடலின் மேல் பகுதியை பிட்டாக வைக்க வீட்டில் இருந்தவாறே தினமும் புஷ்அப்கள் செய்யுங்கள். இவை உங்கள் மேல் உடல் பாகங்களை சரியான வடிவத்துடன் வைத்திருப்பது மட்டுமல்லாமல், வலிமையையும் தருகிறது
(3 / 7)
பிளாங்க்: சில வினாடிகள் முதல் சில நிமிடங்கள் வரை பிளாங்க் பயிற்சி செய்யுங்கள். இது தொங்கும் உங்கள் வயிற்று பகுதியை நீக்குவது மட்டுமல்லாமல், வலுவான மைய மற்றும் தோரணைக்கும் முக்கியமானதாக உள்ளது
(4 / 7)
ஸ்குவாட்: தினசரி செய்ய வேண்டிய உடற்பயிற்சிகளில் ஸ்குவாட் முக்கியமானதாக உள்ளது. இந்த பயிற்சிகள் உங்கள் கால்களை வலுப்படுத்தி, பிட்டம் மற்றும் பின் தொடை பகுதிகளையும் வலிமையாக்குகிறது
(5 / 7)
லஞ்சஸ்: உடலின் சமநிலையை மேம்படுத்தவும் நெகிழ்வுத்தன்மை மற்றும் இயக்கத்தை அதிகரிக்கவும் விரும்பினால், ஒவ்வொரு நாளும் லஞ்சஸ் பயிற்சிகளை செய்யுங்கள். மிக முக்கியமான விஷயமாக இந்த பயிற்சிகள் அனைத்தையும் எந்த உபகரணமும் இல்லாமல் வீட்டிலேயே செய்யலாம்
(6 / 7)
சூப்பர்மேன் உடற்பயிற்சி: இது கீழ் முதுகை வலுப்படுத்துவதோடு, காயங்கள் ஏற்படுவதை தடுக்கிறது. தரையில் வயிறு படும்விதமாக படுத்து, இரண்டு கைகளையும் கால்களையும் விரித்து வைக்கவும். இப்போது இரண்டு கைகளையும் கால்களையும் காற்றில் உயர்த்தி சில வினாடிகள் வைத்திருங்கள். இந்தப் பயிற்சி சூப்பர்மேன் போஸ் என்று அழைக்கப்படுகிறது, இது கீழ் முதுகை வலுப்படுத்த உதவுகிறது
(7 / 7)
தினசரி உடற்பயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள்: பிட்டாக இருக்க ஜிம்முக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. எனவே நாள்தோறும் குறைந்தது அரை மணி நேரம் வீட்டில் சில பயிற்சிகளை செய்வது உங்களை பிட்டாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும். இந்தப் பயிற்சிகள் உங்களை காயத்திலிருந்து பாதுகாப்பது மட்டுமல்லாமல், உடலை வலுவாகவும், நெகிழ்வாகவும், தோரணையை சரியாகவும் வைத்திருக்க உதவும்
மற்ற கேலரிக்கள்