Wayanad landslides: கேரளாவை உலுக்கிய நிலச்சரிவு.. அதிகரித்து கொண்டே இருக்கும் பலி எண்ணிக்கை!
- கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அந்த மாவட்டத்தின் மேப்பாடி, முண்டகை டவுன் மற்றும் சூரல்மலை ஆகிய பகுதிகளில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், நிலச்சரிவில் சிக்கி 100க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
- கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அந்த மாவட்டத்தின் மேப்பாடி, முண்டகை டவுன் மற்றும் சூரல்மலை ஆகிய பகுதிகளில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், நிலச்சரிவில் சிக்கி 100க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உங்கள் நகரின் வானிலை அறிய இங்கே கிளிக் செய்க
(1 / 6)
நிலச்சரிவில் வீடுகள், வாகனங்கள் மண்ணில் புதைந்த நிலையில் ஏராளமானோரோ காணவில்லை என கூறப்படுகிறது. இதுவரை 41 பேர் உயிரிழந்ததாகவும், பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
(2 / 6)
வயநாடு பகுதியில் ஒரேநாளில் 300 மில்லி மீட்டர் அளவு மழை பெய்ததால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினை தொடர்ந்து நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. மேலும் இன்றும் (ஜூலை 30) கேரளாவின் வயநாடு உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(3 / 6)
வயநாடு நிலச்சரிவு மீட்பு, நிவாரணப் பணிகளில் தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். மேலும் வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
(4 / 6)
இதேபோல் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி எக்ஸ் பதிவில், “வயநாடு மாவட்டம் மேப்பாடியில் ஏற்பட்ட நிலச்சரிவு செய்தியறிந்து வேதனையடைந்தேன். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்கள் பத்திரமாக மீட்கப்படுவார்கள் என நான் நம்புகிறேன். ஐக்கிய ஜனநாயக முன்னணி தொண்டர்கள் மீட்பு, நிவாரணப் பணிகளில் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டுகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
(5 / 6)
“கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவு சம்பவத்தில் உயிர்கள் பறிபோன செய்தி அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன்; முழுவீச்சில் நடைபெற்று வரும் மீட்புப் பணிகள் நிலச்சரிவில் சிக்கி உள்ளவர் அனைவரையும் மீட்கும் என நம்புகிறேன்; இந்த நெருக்கடியான நேரத்தில் நமது சகோதர மாநிலமான கேரளாவிற்கு தேவையான அனைத்து உதவிகளை வழங்க தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது." என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
(6 / 6)
30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப் படை பெங்களூரில் இருந்து வயநாடு விரைந்துள்ளது. வயநாடு நிலச்சரிவில் சிக்கியவர்களுக்கு உதவிகளை வழங்க கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. அவசர உதவி தேவைப்படுபவர்கள் 9656938689 மற்றும் 8086010833 ஆகிய இரண்டு எண்கள் மூலம் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என்று கேரள அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற கேலரிக்கள்