Secret Male Rasis: மனைவியிடம் கூட ரகசியத்தை கட்டிக்காக்கும் 4 ஆண் ராசிகள்
- கணவன் - மனைவி இடையே ஒளிவு மறைவு இல்லாத தூய்மையான உறவு என்பது இருந்தாலே அது பல ஆண்டுகள் கடந்து நீடிக்கும்.
- கணவன் - மனைவி இடையே ஒளிவு மறைவு இல்லாத தூய்மையான உறவு என்பது இருந்தாலே அது பல ஆண்டுகள் கடந்து நீடிக்கும்.
(2 / 6)
மிதுனம்: இந்த ராசி ஆண்கள் அறிவுக் கூர்மைமிக்கவர்கள். தங்களது அடையாளத் தேவைக்காக தொடர்ந்து போராடும் மிதுன ராசியினர், தன்னைப் பற்றிய பல ரகசியங்களை வெளியில் சொல்லாமல் கமுக்கமாக இருப்பர். தங்கள் ரகசியங்கள் தெரிந்தால் மற்றவர்கள் கிண்டலடித்துவிடுவார்களோ என்ற பயம் மிதுன ராசியினரிடம் எப்போதும் இருக்கும். அதேபோல் யாரிடமும் எளிதில் மிதுனராசியினர் பழகமாட்டார்கள்.
(3 / 6)
விருச்சிகம்: இந்த ராசி ஆண்கள் எதிலும் ஆர்வத்துடன் செயல்பட்டாலும், இந்த ராசியினரும் தங்களைப் பற்றி எந்தவொரு ரகசியத்தையும் வெளியில் இம்மியளவுகூட கசியவிடமாட்டார்கள். இதனாலேயே இவர்களைப் புரிந்துகொள்வது என்பது பிற ராசியினருக்கு கடினமான டாஸ்க் இருக்கும். தெளிவாக தான் என்னபேசவேண்டும் என்று நினைக்கிறார்களோ அதைத்தவிர பிறரிடம் எதையும் பேசமாட்டார்கள். விருச்சிக ராசி ஆண்களின் நம்பிக்கையில்லாத தன்மை, யாரையும் அனுசரித்துப் பேசும் பாங்கு இல்லாமை இவர்களை திகில் கூட்டும் நபராக சமூகத்தில் பார்க்கவைக்கும்.
(Freepik)(4 / 6)
மீனம்: இந்த ராசியினர், எதையும் வெளியில் தெரியாமல் சமாளிப்பதில் வல்லவர்கள். வெளியில் தாங்கள் நல்லவர்கள் போன்று இருப்பர். ஆனால், மீனராசியினரின் சுயரூபம் உக்கிரமானது. இவர்களிடமும் எந்தவொரு பெர்ஷனல் தகவல்களையும் பெறுவது அவ்வளவு சுலபமானது கிடையாது.
(5 / 6)
மகரம்: தெளிவான இலக்கு உடையவர்கள், மகர ராசியனர். பார்ப்பதற்கு அமைதியான நபர் போன்று தோற்றம் பெற்றவராக இருந்தாலும் சுற்றி நடப்பதை உன்னிப்பாகப் பார்த்து, அதை மனதில் வைத்துக்கொள்ளக்கூடியவர்கள், மகர ராசியினர். இதனால் மகர ராசியினர் உறவுகளுக்கிடையே மிகவும் அதிகம் பேசமாட்டார்கள். எந்தவொரு விஷயத்தையும் அப்படியே மூடி மறைத்துவிடுவர். மிகுந்த நம்பிக்கை கொண்டவர்களிடத்தில் மட்டுமே மகர ராசியினர் வாய் திறப்பர்.
(6 / 6)
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
மற்ற கேலரிக்கள்