மீனத்தில் உருவாகும் புதன் - சுக்கிரன் சேர்க்கை.. நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறப்போகும் 3 ராசிகள்
- புதன் - சுக்கிரன் சேர்க்கையால் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறப்போகும் ராசிகள் குறித்துப் பார்ப்போம்.
- புதன் - சுக்கிரன் சேர்க்கையால் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறப்போகும் ராசிகள் குறித்துப் பார்ப்போம்.
(1 / 6)
சந்திர நாட்காட்டியின்படி, சூரிய பகவான் மார்ச் 13ஆம் தேதி முதல் மீன ராசியில் சஞ்சரிக்கிறார். அதேபோல் மார்ச் 13ஆம் தேதி முதல் புதன் மற்றும் சுக்கிரன் ஆகியவற்றின் சேர்க்கை மீன ராசியில் உருவாகும். இதனால் சில ராசியினர் அதிர்ஷ்டத்தைப் பெறுகின்றன.
(2 / 6)
இது புதாத்திய யோகா, லக்ஷ்மி-நாராயண யோகா, திரிகிரகி யோகா ஆகியவை உருவாக வாய்ப்பினை ஏற்படுத்தும்.
மதுபானியைச் சேர்ந்த பிரபல ஜோதிடர் ராஜேஷ் நாயக் அவர்களின் கருத்துப்படி, இந்த முறை ஹோலிப் பண்டிகை நாளில், பல ஆண்டுகளுக்குப் பிறகு கிரகங்களின் அரிய கலவை உருவாகுகிறது. ஹோலி நாளில் உருவாகும் கிரகங்களின் நல்ல நிலை சில ராசிகளுக்கு மங்களகரமான பலன்களைத் தரக்கூடியது. ஹோலி நாளில் எந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டசாலிகள் என்பதை அறிந்து கொள்வோம்.
(3 / 6)
மேஷம்: மார்ச் 13ஆம் தேதி முதல் மேஷ ராசிக்காரர்களுக்கு நன்மை கிட்டும் என்று நம்பப்படுகிறது. மேஷ ராசியினர் வழிபாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்கள். இந்த காலத்தில் வெளிநாடு செல்லும் யோகமும் மேஷ ராசியினருக்கு உண்டாகும். உங்கள் அதிர்ஷ்டம் வலுவாக இருக்கும்.
மேஷ ராசியினருக்கு காலமும் நன்றாக இருக்கும். மேலும், காதல் வாழ்க்கையிலும் மேஷ ராசியினருக்கு மகிழ்ச்சி நன்றாக இருக்கும். அனைத்து வகையான சவால்களையும் சமாளிப்பீர்கள். மன அழுத்தம் குறையும். கடன் குறையும். உங்களிடம் பணத்தைப் பெற்றுவிட்டு திரும்பத் தராமல் இழுத்தடிக்கும் நபர்களிடம் இருந்து பணம் உரியமுறையில் வந்தடையும். குடும்பத்தில் அமைதி நிலவும். இல்வாழ்க்கைத் துணையுடன் சண்டை சச்சரவுகள் இருக்காது.
(4 / 6)
மார்ச் 13ஆம் தேதி முதல் விருச்சிக ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. பாதுகாப்பான விருப்பங்களில் உங்களது பணத்தை முதலீடு செய்வது நன்மை பயக்கும். ஆனால், நிபுணரின் ஆலோசனையைப் பெற மறக்காதீர்கள். அதே நேரத்தில், சில நல்ல செய்திகளையும் பெறலாம். நிதி நிலைமையும் வலுவாக இருக்கும். இதனுடன், வேலையில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. ஆனால், உடல் ஆரோக்கியத்தில் விருச்சிக ராசியினர் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
(5 / 6)
சிம்மம்: சிம்ம ராசிக்காரர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். வியாபாரத்தில் வெற்றி பெறுவீர்கள். ஆரோக்கியமும் நன்றாக இருக்கும். அதே சமயம் பண ஆதாயம் கிடைப்பதற்கான வாய்ப்புகளும் கூடும். ஆனால், செலவுகளும் அதிகரிக்கக்கூடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். காதல் வாழ்க்கையில் காதல் அதிகரிக்கும். மகிழ்ச்சியான வாழ்க்கை உங்களுடையதாக இருக்கும். நீங்கள் ஒரு பயணம் செல்ல திட்டமிடுவீர்கள். கடன் தொகை குறையும். திருமணமாகாதவர்களுக்கு இந்நாளில் நிச்சயதார்த்தம் நடக்க வாய்ப்புள்ளது.
(6 / 6)
பொறுப்பு துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கண்க்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.
மற்ற கேலரிக்கள்