தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Sukran In Rohi:ரோகிணி நட்சத்திரத்துக்குள் புகுந்த சுக்கிர பகவான்..அலங்காநல்லூர் காளை மாதிரி துள்ளிக்குதிக்கும் 3 ராசிகள்

Sukran In Rohi:ரோகிணி நட்சத்திரத்துக்குள் புகுந்த சுக்கிர பகவான்..அலங்காநல்லூர் காளை மாதிரி துள்ளிக்குதிக்கும் 3 ராசிகள்

May 27, 2024 02:51 PM IST Marimuthu M
May 27, 2024 02:51 PM , IST

  • Sukran In Rohini: சுக்கிர பகவான் ரோகிணி நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடைகிறார். இதனால் அதிக நன்மைகளைப் பெறக்கூடிய ராசியினர் குறித்துக் காண்போம்.

Sukran In Rohini: ஒன்பது கிரகங்களில் மிகவும் ஆடம்பரமான கிரகம் சுக்கிர பகவான் ஆவார். இவர் அழகு, ஆடம்பரம், அன்பு, செழிப்பு, ஆடம்பரம் போன்றவற்றை ராசியினருக்கு வழங்குபவர். அசுரர்களின் குருவும் சுக்கிர பகவான் தான். சுக்கிரனின் நிலை மாறும் போது, அது மேஷ ராசி முதல் மீன ராசி வரை அனைத்து ராசிகளிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சுக்கிர பகவான் மிகக் குறுகிய காலத்தில் தனது நிலையை மாற்றிக் கொள்கிறது. இது அதன் ராசிக்கூட்டத்தினையும் அவ்வாறே மாற்றுகிறது.

(1 / 6)

சுக்கிர பகவான், மாதம் ஒரு முறை ராசியை மாற்றக்கூடியவர். அடிக்கடி நட்சத்திரத்தையும் மாற்றக்கூடியவர். கிருத்திகை நட்சத்திரத்தில் இருந்து இன்று மே27ஆம் தேதி, சுக்கிர பகவான் ரோகிணிக்குள் நுழைகிறார்.ரோகிணி நட்சத்திரத்தில் சுக்கிர பகவான் சஞ்சரிப்பதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். ரோகிணி நட்சத்திரத்தில் சுக்கிர பகவான் சஞ்சரிப்பதால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் குறித்துக் காண்போம்.

(2 / 6)

கடகம்:சுக்கிர பகவான் ரோகிணி நட்சத்திரத்துக்குப் புலம்பெயர்வதால், கடக ராசியினருக்கு இருந்த கவலைகள் சற்று விலகும். கூடுதலான நாட்களாக பணியில் இருந்துவந்த தொய்வு மாறி, உற்சாகம் பிறக்கும். இதனால் பணிகள் நல்ல முறையில் ஆக்கப்பூர்வமாக முடிவடையும். அதேபோல், தொழில் செய்பவர்களுக்கு, கூடுதலான வளர்ச்சி இருக்கும். புதிய வாய்ப்புகள் உண்டாகும். வியாபாரிகளுக்கு புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்கும். இதனால் வருவாய் அதிகரிக்கும். பல நாட்களாக தடைபட்டுப் போன வாய்ப்புகள் கை வந்துசேரும். வங்கியில் இருப்பு பெருகும். கணவன் - மனைவி இருந்த சண்டை சச்சரவுகள் குறையும். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்கள் இந்த காலத்தில் தொடங்கலாம். அது லாபகரமானதாக மாறும்.

(3 / 6)

கன்னி: சுக்கிரனின் நட்சத்திரப் பெயர்ச்சியானது, கன்னி ராசியினருக்கு நல் வாய்ப்புகளை உண்டாக்கும். நெடுநாட்களாக வாங்க ஆசைப்பட்ட வீட்டுக்குத் தேவையான பொருட்களை இக்காலத்தில் வாங்குவீர்கள். கல்யாண வாழ்க்கையில் இருந்த கசப்பான சம்பவங்கள் எல்லாம் மெல்ல மெல்ல குறையும். பெண்களால் ஏற்பட்ட அவப்பெயர் நீங்கும். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். சைடு பிசினஸ் செய்ய ஆசைப்படும் கன்னி ராசியினர், இக்காலத்தில் நல்ல வாய்ப்பினைப் பெறுவீர்கள். குழந்தையில்லாத தம்பதியினருக்கு குழந்தைப் பாக்கியம் கிட்டும். வரன் பார்க்காமல் இருக்கும் கன்னி ராசியினர், இக்காலத்தில் வரன் பார்க்க ஆரம்பிக்கலாம். உங்களிடம் கடன் பெற்றவர்கள், இந்த சந்தர்ப்பத்தில் திருப்பிக் கொடுத்துவிடுவர்.

(4 / 6)

விருச்சிகம்:சுக்கிர பகவானின் நட்சத்திரப் பெயர்ச்சியால் விருச்சிக ராசியினருக்கு பல பாஸிட்டிவ் ஆன விஷயங்கள் நடக்கவுள்ளன. கணவன் - மனைவி இடையே மூன்றாம் நபர் செய்த திருகுவேலையால் உண்டான பிரிவில் இருக்கும் விருச்சிக ராசியினருக்கு உண்மை புலப்படும். இக்காலத்தில் உங்கள் ஈகோவை விட்டுவிட்டு இல்வாழ்க்கைத் துணையுடன் இணைமுயற்சித்தால் நன்மை கிடைக்கும். பணியிடத்தில் இருந்த அலுவலக அரசியல் சற்று குறையும். போட்டி மனப்பான்மையுடன் செயல்பட்டவர்கள் நட்பு பாராட்டுவார்கள். உடல் நலன் மேம்படும்.

(5 / 6)

பொறுப்புத் துறப்பு:இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ ஜோதிடர்கள்/ பஞ்சாங்கங்கள்/ சொற்பொழிவுகள்/ நம்பிக்கைகள்/ வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

(6 / 6)

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்