Saturn And Venus: சனி பகவான் - சுக்கிரன் இணைவு.. கெட்டதுவிலகி தொட்டது துலங்கப்போகும் 3 ராசிகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Saturn And Venus: சனி பகவான் - சுக்கிரன் இணைவு.. கெட்டதுவிலகி தொட்டது துலங்கப்போகும் 3 ராசிகள்

Saturn And Venus: சனி பகவான் - சுக்கிரன் இணைவு.. கெட்டதுவிலகி தொட்டது துலங்கப்போகும் 3 ராசிகள்

Published Mar 23, 2025 03:59 PM IST Marimuthu M
Published Mar 23, 2025 03:59 PM IST

  • Shani and Sukran: மீன ராசியில் ஒன்று கூடும் சனி - சுக்கிர பகவானால் கோடீஸ்வர யோகம்பெறபோகும் 3 ராசிகள் குறித்துக் காண்போம்.

ஜோதிடத்தின் படி, நவக்கிரகங்கள் எப்போதும் தங்கள் நிலைகளை மாற்றிக் கொண்டே இருக்கும். ஜோதிடத்தின் படி, 12 ராசிகளும் நவக்கிரகங்களின் நகர்வுகளால் பாதிக்கப்படுகின்றன. சில நேரங்களில் சில கிரகங்களின் பெயர்ச்சி, சில ராசிக்காரர்களுக்கு அமங்கலப் பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும் தரும்.

(1 / 6)

ஜோதிடத்தின் படி, நவக்கிரகங்கள் எப்போதும் தங்கள் நிலைகளை மாற்றிக் கொண்டே இருக்கும். ஜோதிடத்தின் படி, 12 ராசிகளும் நவக்கிரகங்களின் நகர்வுகளால் பாதிக்கப்படுகின்றன. சில நேரங்களில் சில கிரகங்களின் பெயர்ச்சி, சில ராசிக்காரர்களுக்கு அமங்கலப் பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும் தரும்.

வரும் மார்ச் 29அன்று, சனி பகவான் மீன ராசிக்குப் பெயர்ச்சி அடைகிறார். அந்த நேரத்தில் சனி பகவான் ஏற்கனவே மீனத்தில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் சுக்கிரனை சந்திக்கிறார்.மீன ராசியில் சனி பகவான் மற்றும் சுக்கிர பகவானின் சேர்க்கை 30 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறுகிறது. மீன ராசியில் சுக்கிரன் மற்றும் சனியின் சேர்க்கை அனைத்து ராசிகளுக்கும் யோகப் பலன்களைக் கொண்டுவரும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்த ராசியில் உள்ளது என்பதை இங்கே பார்க்கலாம்.

(2 / 6)

வரும் மார்ச் 29அன்று, சனி பகவான் மீன ராசிக்குப் பெயர்ச்சி அடைகிறார். அந்த நேரத்தில் சனி பகவான் ஏற்கனவே மீனத்தில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் சுக்கிரனை சந்திக்கிறார்.

மீன ராசியில் சனி பகவான் மற்றும் சுக்கிர பகவானின் சேர்க்கை 30 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறுகிறது. மீன ராசியில் சுக்கிரன் மற்றும் சனியின் சேர்க்கை அனைத்து ராசிகளுக்கும் யோகப் பலன்களைக் கொண்டுவரும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்த ராசியில் உள்ளது என்பதை இங்கே பார்க்கலாம்.

மீன ராசியில் சனி மற்றும் சுக்கிரன் சேர்க்கையால் நன்மைபெறும் ராசிகள்:-மீனம்:மீன ராசியில் முதல் வீட்டில், சனி மற்றும் சுக்கிர பகவானின் கலவையானது மற்றவர்கள் மீதான உங்கள் மரியாதையை அதிகரிக்கும். வியாபாரத்தில் இருந்த பிரச்னைகள் அனைத்தும் மீன ராசியினருக்குக் குறையும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.கூட்டுத் தொழில், மீன ராசியினருக்கு நல்ல லாபம் தரும். திடீரென பணப்புழக்கம் ஏற்படும். கையில் சேமிப்பு அதிகரிக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் இருந்த கருத்துவேறுபாடுகள் குறையும். அதேநேரத்தில் மற்றவர்களின் வாழ்வில் தலையிடாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள்.

(3 / 6)

மீன ராசியில் சனி மற்றும் சுக்கிரன் சேர்க்கையால் நன்மைபெறும் ராசிகள்:-

மீனம்:

மீன ராசியில் முதல் வீட்டில், சனி மற்றும் சுக்கிர பகவானின் கலவையானது மற்றவர்கள் மீதான உங்கள் மரியாதையை அதிகரிக்கும். வியாபாரத்தில் இருந்த பிரச்னைகள் அனைத்தும் மீன ராசியினருக்குக் குறையும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

கூட்டுத் தொழில், மீன ராசியினருக்கு நல்ல லாபம் தரும். திடீரென பணப்புழக்கம் ஏற்படும். கையில் சேமிப்பு அதிகரிக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் இருந்த கருத்துவேறுபாடுகள் குறையும். அதேநேரத்தில் மற்றவர்களின் வாழ்வில் தலையிடாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள்.

மகரம்:மகர ராசியின் மூன்றாவது வீடான மீன ராசியில், சனி மற்றும் சுக்கிரனின் சேர்க்கை நடைபெறுகிறது. இது மகர ராசியினருக்கு, நோய் நொடிகளில் இருந்து நீங்கி, ஆரோக்கியத்தை மேம்படுத்தும். உறவினர்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.நீங்கள் எடுக்கும் முடிவுகள் நல்லப் பலன்களைத் தரும். உங்களிடம் கடன் பெற்றவர்கள், சரியாக பணத்தை இக்கால கட்டத்தில் திருப்பித் தந்துவிடுவர். இதனால், நிதி நிலைமை மேம்படும். நீங்கள் தொழில் செய்யும் போது கிடைக்காத பணமும் உங்கள் கைக்கு வரவாக வந்து சேரும். தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

(4 / 6)

மகரம்:

மகர ராசியின் மூன்றாவது வீடான மீன ராசியில், சனி மற்றும் சுக்கிரனின் சேர்க்கை நடைபெறுகிறது. இது மகர ராசியினருக்கு, நோய் நொடிகளில் இருந்து நீங்கி, ஆரோக்கியத்தை மேம்படுத்தும். உறவினர்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

நீங்கள் எடுக்கும் முடிவுகள் நல்லப் பலன்களைத் தரும். உங்களிடம் கடன் பெற்றவர்கள், சரியாக பணத்தை இக்கால கட்டத்தில் திருப்பித் தந்துவிடுவர். இதனால், நிதி நிலைமை மேம்படும். நீங்கள் தொழில் செய்யும் போது கிடைக்காத பணமும் உங்கள் கைக்கு வரவாக வந்து சேரும். தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

ரிஷபம்:ரிஷபத்தில் இருந்து சனியும் சுக்கிரனும் இணைகின்றனர். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ரிஷப ராசியினருக்கு, புதிய தொழில் தொடங்கும் யோகம் உண்டாகும். வருமானத்தில் நல்ல உயர்வு இருக்கும்.பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும். வெளிநாட்டுப் பயணங்களால் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பொருளாதார ஆதாயங்களைப் பெற ரிஷப ராசியினருக்கு வாய்ப்பு உள்ளது. திருமணம், காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். குடும்ப வாழ்க்கையில் உள்ள அனைத்துப் பிரச்னைகளும் குறையும். வாழ்க்கையில் சுபிட்சமான வாழ்க்கை உண்டாகும்.

(5 / 6)

ரிஷபம்:

ரிஷபத்தில் இருந்து சனியும் சுக்கிரனும் இணைகின்றனர். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ரிஷப ராசியினருக்கு, புதிய தொழில் தொடங்கும் யோகம் உண்டாகும். வருமானத்தில் நல்ல உயர்வு இருக்கும்.

பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும். வெளிநாட்டுப் பயணங்களால் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பொருளாதார ஆதாயங்களைப் பெற ரிஷப ராசியினருக்கு வாய்ப்பு உள்ளது. திருமணம், காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். குடும்ப வாழ்க்கையில் உள்ள அனைத்துப் பிரச்னைகளும் குறையும். வாழ்க்கையில் சுபிட்சமான வாழ்க்கை உண்டாகும்.

பொறுப்பு துறப்பு:-இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கண்க்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.

(6 / 6)

பொறுப்பு துறப்பு:-

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கண்க்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.

Marimuthu M

TwittereMail
ம.மாரிமுத்து, சீஃப் கன்டென்ட் எடிட்டராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். அச்சு, காட்சி மற்றும் டிஜிட்டல் ஊடகம் என 11+ ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, சினிமா, ஜோதிடம், லைஃப்ஸ்டைல், தேசம்-உலகம், கிரிக்கெட் உள்ளிட்டப் பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் கட்டுரைகளை எழுதி வருகிறார். சிவகங்கையிலுள்ள பண்ணை பொறியியல் கல்லூரியில் எம்.இ- ஸ்ட்ரக்சுரல் இன்ஜினியரிங் மற்றும் தென்காசி - புளியங்குடியிலுள்ள எஸ்.வி.சி.பொறியியல் கல்லூரியில் பி.இ - சிவில் இன்ஜினியரிங்கும் படித்திருக்கிறார். விகடன், மின்னம்பலம்,காவேரி நியூஸ் டிவி, நியூஸ்ஜே டிவி, ஈடிவி பாரத் ஆகிய ஊடகங்களைத் தொடர்ந்து 2023 ஆகஸ்ட் முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். விகடனின் தலைசிறந்த மாணவப்பத்திரிகையாளர் 2014-15ஆக விருதுபெற்றவர். இவரது சொந்த ஊர் வடுகபட்டி, தேனி மாவட்டம் ஆகும்.

மற்ற கேலரிக்கள்