22 ஆண்டுகளைக் கடந்தும் பேசிக்கொண்டிருக்கும் மெளனம் பேசியதே! அமீரின் அற்புதமான படைப்பு!
- இயக்குநர் அமீரின் முதல் படமான மெளனம் பேசியதே திரைப்படம் வெளியாகி இன்றோடு 22 ஆண்டுகளைக் கடந்துள்ளது. இத்திரைப்படத்தில் தான் த்ரிஷாவும் கதாநாயகியாக அறிமுகமாகி இருந்தார்.
- இயக்குநர் அமீரின் முதல் படமான மெளனம் பேசியதே திரைப்படம் வெளியாகி இன்றோடு 22 ஆண்டுகளைக் கடந்துள்ளது. இத்திரைப்படத்தில் தான் த்ரிஷாவும் கதாநாயகியாக அறிமுகமாகி இருந்தார்.
(1 / 7)
நடிகர் சூர்யா மற்றும் த்ரிஷாவின் அற்புதமான நடிப்பில் 2002 ஆம் ஆண்டு வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட் ஆனது. அன்றைய காலக்கட்டத்தில் வெளியாகி இளசுகளின் மனசை இம்சை செய்த கனவு கன்னியாக த்ரிஷா மாறுவதற்கு மெளனம் பேசியதே படம் ஒரு முக்கிய தொடக்கமாகும்.
(2 / 7)
இயக்குநர் அமீரின் முதல் படமான மெளனம் பேசியதே பட்டித் தொட்டி எங்கும் பெரும் அளவில் வெற்றி பெற்றது. இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றி வந்தார் அமீர். மதுரையைச் சேர்ந்த அமீரின் படைப்புகளில் அதிக அளவில் மதுரை குறித்து பேசப்பட்டிருக்கும். சூர்யாவின் திரை உலகில் மெளனம் பேசியதே சிறந்த ஒரு படமாகும். மேலும் நடிகர் கார்த்தியின் முதல் படமான பருத்தி வீரன் எனும் தமிழ் சினிமாவின் மாபெரும் படைப்புகளில் ஒன்றையும் அமீர் தான் இயக்கியுள்ளார்.
(3 / 7)
சூர்யா இப்படத்தில் நடித்துள்ள கெளதம் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி இருப்பார். வீட்டை விட்டு ஓடும் பெண்ணிடம் அட்வைஸ் செய்வது, சாலையில் உரசி நடக்கும் ஜோடிகளை கண்டிப்பது என அவருக்கு காதல் மீதான அத்தனை வெறுப்பையும் சரியாக வெளிப்படுத்தி இருப்பார்.
(4 / 7)
காதலே பிடிக்காத கதாநாயகன் கெளதம் நண்பனின் முறைப்பெண்ணான சந்தியா(த்ரிஷா) தன்னை காதலிப்பதாக நினைத்து கற்பனை செய்து கொள்கிறான். பின்னாளில் சந்தியாவை மிகவும் தீவிரமாக காதலிக்கிறார். இருப்பினும் சந்தியா வேறு ஒருவரை காதலிப்பதை தெரிந்து மனம் நொந்து போகிறார்.
(5 / 7)
காதலினால் காயம் அடைந்த கெளதமிற்கு மருந்து போடும் கல்லூரி கால தோழியாக வந்தவர் லைலா, பல ஆண்டுகளாக கெளதமிற்காகவே காத்திருந்து இவரை காதலித்து வருகிறார். படத்தின் க்ளைமாக்ஸில் இருவரும் சேர்ந்து விடுவார்கள். இந்த முக்கோண காதல் கதைக்கே படம் பெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
(6 / 7)
மெளனம் பேசியதே படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். மேலும் இவரது பாடல்கள் அனைத்தும் இன்று வரை பலரது பேவரைட் பிளே லிஸ்ட்டில் இருக்கிறது. காதல் செய்தால் பாவம் பாடலுக்கு முன்னால் யுவனின் ஹம்மிங் நம்மை மெய் மறக்க செய்து விடும்.
மற்ற கேலரிக்கள்