Horoscope Luck: உப ஜெய ஸ்தானத்தில் ராகு.. ஓடி வரும் குரு.. ஜாக்பாட் யோகம் யாருக்கு?
உப ஜெய ஸ்தானத்தில் ராகு பகவான் இருக்கிறார். 3,6,11, 12 ஆகிய இடங்களில் ராகுபகவான் வரும் பொழுது, அதீத யோகமானது வந்து சேரும்.
(1 / 6)
ஏழரை சனியில் இருக்கும் மகரராசிக்கு வரும் காலத்தில் என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்பதை ஜோதிடர் சுபாஷ் பாலகிருஷ்ணன் இங்கு பார்க்கலாம்.
அவர் பேசும் போது, “மகர ராசி ஏழரை சனியின் கடைசி காலகட்டத்தில் இருக்கிறது. கிட்டத்தட்ட உயிர் மட்டும்தான் மிச்சம் என்ற நிலைதான். அந்தளவுக்கு கடுமையான சோதனைகளை மகரராசிக்காரர்கள் எதிர்கொண்டு இருக்கிறார்கள். உயிர் நண்பர்கள் மகர ராசிக்காரர்களுக்கு அவ்வளவு பெரிய துரோகத்தை இழைத்திருக்கிறார்கள்.
(2 / 6)
சில மகர ராசி வீடுகளில் மரணம் நிகழ்ந்திருக்கும். சில வீடுகளில் கணவன், மனைவி பிரிந்து இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி இருக்கும். பணத் தொல்லைகள் கடனாக மாறி, அவமானத்தை கொண்டு வந்து சேர்த்திருக்கும்.
(3 / 6)
உப ஜெய ஸ்தானத்தில் ராகு பகவான் இருக்கிறார். 3,6,11, 12 ஆகிய இடங்களில் ராகுபகவான் வரும் பொழுது, அதீத யோகமானது வந்து சேரும்.
(4 / 6)
ஆமாம், நீங்கள் ஒரு அடி எடுத்து வைத்தால் ராகு பகவான் உங்களை ஐந்து அடி தாண்டி கொண்டு சென்று நிறுத்துவார். அந்த அளவுக்கு வரும் காலமானது யோக காலமாக அமைய இருக்கிறது. ஆனால் நீங்கள் முயற்சி செய்ய வேண்டும்.
(5 / 6)
ஏப்ரல் 30ஆம் தேதி பஞ்சமஸ்தானத்தில் வரக்கூடிய குருவானவர், ஒன்பதாம் பார்வையாக ராசியை பார்க்க இருக்கிறார். ஆகையால் படிக்க ஆசைப்படுகிற மாணவர்களுக்கு அவர்கள் நினைத்தது போலவே படிப்பானது அமையும்.
மற்ற கேலரிக்கள்