2024 Guru Peyarchi Palan: ’குரு பெயர்ச்சியால் திடீர் திருமணம் எந்த ராசிக்கு?’ இதோ முழு விவரம்!
- ”7ஆம் வீட்டை (களத்திர ஸ்தானம்) குரு பார்வையிட்டால், திருமண வாய்ப்புகள் அதிகம் ஏற்படும். ஒருவரது தசாபுத்தியில் குரு திசை நடந்தால், திருமணம் நடக்க வாய்ப்பு உள்ளது”
- ”7ஆம் வீட்டை (களத்திர ஸ்தானம்) குரு பார்வையிட்டால், திருமண வாய்ப்புகள் அதிகம் ஏற்படும். ஒருவரது தசாபுத்தியில் குரு திசை நடந்தால், திருமணம் நடக்க வாய்ப்பு உள்ளது”
(1 / 7)
வரும் மே மாதத்தில் மேஷம் ராசியில் இருந்து ரிஷபம் ராசிக்கு குரு பெயர்ச்சி ஆகிறார். குரு பார்த்தால் கோடி நன்மைகள் கிடைக்கும் என்பது ஜோதிட விதியாக உள்ளது.
(2 / 7)
ஜோதிடத்தில், குரு பகவான் திருமணம், கல்வி, குழந்தைகள், செல்வம், ஞானம் போன்ற விஷயங்களுக்கு காரகத்துவம் பெற்றவராக உள்ளார். ஒருவரது ஜாதகத்தில் குரு பலமாக இருந்தால், திருமண யோகம் விரைவில் அமையும்.
(3 / 7)
7ஆம் வீட்டை (களத்திர ஸ்தானம்) குரு பார்வையிட்டால், திருமண வாய்ப்புகள் அதிகம் ஏற்படும். ஒருவரது தசாபுத்தியில் குரு திசை நடந்தால், திருமணம் நடக்க வாய்ப்பு உள்ளது.
(4 / 7)
ரிஷபம் ராசி, ரிஷபம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு இந்த ஆண்டில் திருமண யோகத்தை குரு பகவான் தருகிறார். ரிஷப ராசியில் இருந்து திருமண ஸ்தானமான 7ஆம் வீட்டில் குரு பார்வை படுவதால் மே மாதத்திற்கு பிறகு திருமணத்திற்கான முயற்சிகளை செய்தால் ரிஷபம் ராசி மற்றும் ரிஷபம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு திருமணம் நிச்சயம் நடைபெறும்.
(5 / 7)
கடகம் ராசி மற்றும் கடக லக்னத்தை பொறுத்தவரை திருமணம் யோகம் உள்ளது. குரு பகவானின் 9ஆம் பார்வை கடக ராசியின் 7ஆம் வீட்டை பார்க்கிறது. இதனால் கடக ராசி மற்றும் கடக லக்னத்தினருக்கு சிறிது முயற்சி எடுத்தாலே கண்டிப்பாக வரன்கள் அமைய வாய்ப்புகள் உள்ளது.
(6 / 7)
விருச்சிக ராசி மற்றும் விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு வரும் மே மாதம் நடைபெற உள்ள குரு பெயர்ச்சிக்கு பிறகு கண்டிப்பாக திருமணம் நடைபெறுவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு. 7ஆம் இடமான களத்திர பாவத்தில் குரு பகவான் உள்ளார். பெண் வீட்டில் இருந்தே மணமகனை தேடி வரும் சூழல் ஏற்படும்.
மற்ற கேலரிக்கள்