13 Years Of Nanban: பார்த்திபன் இயக்க இருந்த படம்! ஷங்கர் கைக்கு போனது எப்படி? 13 வருடங்களை கடந்த நண்பன்!
- நண்பன் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 13 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி அப்படத்தை குறித்த ஓர் அலசல்.
- நண்பன் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 13 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி அப்படத்தை குறித்த ஓர் அலசல்.
(1 / 7)
பாலிவுட் இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி இயக்கி அமீர்கான் நடிப்பில் வெளிவந்த "3 இடியட்ஸ்" திரைப்படத்தின் தமிழாக்க உரிமையை ஜெமினி சர்க்யூட் நிறுவனம் கைப்பற்றியிருந்தது. தமிழில் இப்படத்தை இயக்க மற்றும் நடிக்க பல பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வந்தன. அதனைக் குறித்தும் நண்பன் படத்தை குறித்தும் என்று காண்போம்.
(2 / 7)
விஜய்க்கும் சூர்யாவுக்கும் போட்டியா ?
அமீர்கான் கதாபாத்திரத்தில் நடிக்க விஜய்க்கும் சூர்யாவுக்கும் மியூசிக்கல் சேர் போட்டியே நடந்தது என்று கூறலாம். முதலில் திரைப்படத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது விஜய் தான் என்றும் பின்பு கால்ஷீட் பிரச்சனையால் அவர் விலகியதாகவும் சூர்யா இப்படத்திற்குள் வந்து விலகி பின்பு விஜய் ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
சுறா திரைப்படத்தின் இசை வெளியீட்டு போதும் "3 இடியட்ஸ் படத்தில் நடிங்க" என்று ரசிகர்கள் கூக்குரலிட அதற்கு விஜய் மேடையிலேயே "பார்க்கலாம்" என்று பதிலளித்து இருப்பார்.
(3 / 7)
எப்படி வந்தார் இயக்குநர் ஷங்கர் ?
"3 இடியட்ஸ் தமிழாக்கத்தை நீங்க எடுத்தா நல்லா இருக்கும்" என்று விஜய் அவர்களே விரும்புவதாக இயக்குனர் பார்த்திபன் அவர்கள் பல நேர்காணலில் கூறியிருப்பார். அப்படியிருக்க இயக்குனர் சங்கர் எப்படி இதில் ஒப்பந்தம் ஆனார் என்று பார்த்தால் இயக்குனரும் விஜய்யின் தந்தையுமான S.A சந்திரசேகர் அவர்கள் தலையிட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
(4 / 7)
பிற நடிகர்கள் :
நண்பன் திரைப்படத்தின் மற்ற முன்னணி கதாபாத்திரத்தில் ஜீவாவும் ஸ்ரீகாந்தம் நடித்திருப்பார்கள். ஹிந்தி வெர்ஷனில் சர்மன் ஜோசியும் மாதவனும் முறையே நடித்திருப்பார்கள். இந்தியில் கதாநாயகியாக கரீனா கப்பூரும் தமிழில் இலியானாவும் நடித்திருப்பார்கள்.
(5 / 7)
சத்யராஜ் ஒத்துக்கொண்டது எப்படி ?
நண்பன் திரைப்படத்தின் இசை வெளியீட்டடில் இயக்குனர் ஷங்கர் அவர்கள் கூறும்போது "சிவாஜி படத்தில் நடிக்க கூப்பிட்டேன்.. மாட்டேன்னு சொல்லிட்டாரு ! இந்த படத்துல அவரு ஒத்துக்கிட்டதுக்கு காரணம்... இந்தப் படத்தோட கதை " என்று சற்று இடைவெளி விட்டுப்பேச அதற்குள் ரசிகர்கள் ஆர்ப்பரிக்க அவர்களை ஆஃப் செய்திருப்பார் ஷங்கர்.
(6 / 7)
புரமோஷன் நிகழ்வுகள் :
நண்பன் படத்தின் புரமோஷன் நிகழ்வுகள் சுவாரசியமானதாக இருக்கும். இதுவரை நாம் பார்த்திராத ஜாலியான விஜய் நாம் காணலாம். இவை தற்போதும் விஜய் டிவி பக்கத்திலும் சன் டிவி சோசியல் மீடியா சேனல்களிலும் கிடைக்கிறது.
(7 / 7)
விஜய்யின் கரியர் பெஸ்ட் மூவியா நண்பன் ?
தொடர்ந்து ஒரே மாதிரி கதாபாத்திரத்தில் நடித்து வந்த விஜய்க்கு முற்றுப்புள்ளி வைத்து மீண்டும் வெற்றிப் பாதையில் அழைத்துச் சென்றது '' திரைப்படம் என்றால் அவரை வெவ்வேறு கதை அம்சம் கொண்ட திரைப்படங்களில் நடிக்க ஆயத்தப்படுத்தியது நண்பன் என்றே கூறலாம். இன்றும் நாம் அவரை ஒரு கல்லூரி மாணவன் கதாபாத்திரத்தில் நினைத்துப் பார்த்தாலும் அதில் பொருந்தக் கூடியவராகவே இருப்பார் விஜய்.
மற்ற கேலரிக்கள்