10 Health Benefits of Beetroot : உங்கள் உடலில் இத்தனை உறுப்புகளுக்கு ஆரோக்கிய நன்மைகளை அள்ளித்தருகிறதா பீட்ரூட்?-10 health benefits of beetroot does beetroot provide health benefits to so many organs in your body - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  10 Health Benefits Of Beetroot : உங்கள் உடலில் இத்தனை உறுப்புகளுக்கு ஆரோக்கிய நன்மைகளை அள்ளித்தருகிறதா பீட்ரூட்?

10 Health Benefits of Beetroot : உங்கள் உடலில் இத்தனை உறுப்புகளுக்கு ஆரோக்கிய நன்மைகளை அள்ளித்தருகிறதா பீட்ரூட்?

Aug 28, 2024 08:40 AM IST Priyadarshini R
Aug 28, 2024 08:40 AM , IST

  • 10 Health Benefits of Beetroot : உங்கள் உடலில் இத்தனை உறுப்புகளுக்கு ஆரேக்கிய நன்மைகளை அள்ளித்தருகிறதா பீட்ரூட்?

ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது - ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ள உணவுகளில் பீட்ரூட்டும் ஒன்று. ஆக்ஸிடேசன் எனப்படும் சேதமடையும் செயல்பாட்டைக் குறைக்கும். இதன் வேர்கள் பர்பிள் நிறத்தில் இருக்கும். அதற்கு இதன் தாவர உட்பொருட்கள் காரணமாகும். இதில் உள்ள ஆந்தோசியானின்கள் அதிக ஆன்டி ஆக்ஸிடன்ட்கள்தான் இதில் உள்ள உயர் ஆன்டி ஆக்ஸிடன்ட் மற்றும் வீக்கத்துக்கு எதிரான குணங்களுக்கு காரணம்.

(1 / 10)

புற்றுநோய்க்கு எதிரான குணங்கள் உள்ளது - பீட்டாசியானின் என்ற கடுமையான நிறமிதான் பீட்ரூட்டுக்கு அதன் நிறத்தை தருகிறது. இது சில வகை கேன்சர்கள் ஏற்படாமல் தடுக்கிறது. அதில் வயிறு புற்றுநோயும் குறிப்பிடத்தக்கது. பீட்ரூட்டில் புற்றுநோய்க்கு எதிரான குணங்கள் உள்ளது. ஃபெரிக் அமிலம், ருயின் மற்றும் காம்ப்ஃபெரால் ஆகியவை ஆகும்.

(2 / 10)

வீக்கத்துக்கு எதிரான குணங்கள் நிறைந்தது - பீட்ரூட்டில் உள்ள பீட்டாலைன்கள், பீட்டாசியானின்கள் குடும்பத்தைச் சார்ந்தது. இழ உங்கள் உடலில் வீக்கத்தின் அறிகுறிகளை குறைக்க உதவும். இது உங்கள் மூட்டுகளில் வலிகளை குறைக்க உதவும்.

(3 / 10)

ரத்த அழுத்தத்தை குறைக்கும் - பீட்ரூட்டில் அதிகளவில் நைட்ரேட்கள் உள்ளது. இதுதான் பீட்ரூட்டை இதயத்துக்கு உற்ற நண்பனாக்குகிறது. ரத்த நாளங்களை அமைதிப்படுத்தி, ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. அதற்கு நைட்ரேட்கள்தான் உதவுகின்றன. ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. ரத்த அழுத்தம் குறைந்தாலே உங்களுக்கு இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் போன்றவை ஏற்படாது.

(4 / 10)

உடற்பயிற்சியின் ஆற்றலை அதிகரிக்கும். உடலில் ஆற்றல் அளவை அதிகரிக்கும் - விளையாட்டு வீரர்கள், பீட்ரூட் சாற்றை பருகலாம். இது அவர்களின் விளையாட்டு திறனை அதிகரிக்கும். உங்கள் பயிற்சிகள் முடிந்து ஓய்வெடுக்கும் வேளையில் பீட்ரூட்டில் உள்ள நைட்ரேட்கள், உங்கள் உடலுக்கு அதிக ஆக்ஸிஜனைக் கொண்டுவரும். தசை செல்கள் புத்துணர்ச்சி பெறும்.

(5 / 10)

செரிமான ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது - பீட்ரூட் நார்ச்சத்துக்கள் நிறைந்தது. இது உங்கள் குடல் இயக்கத்தை ஆதரிக்கும். குடலின் செயல்பாட்டை அதிகரித்து, உங்கள் குடலில் ஆரோக்கியமான சூழலை உருவாக்கும். அதனுடன், நார்ச்சத்துக்கள் உங்கள் உடலில் ஃபேட்டி ஆசிட்கள் உருவாக உதவும். இது உங்கள் குடலில் உள்ள பாக்டீரியாக்களுக்கு நன்மையைத்தரும்.

(6 / 10)

குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது - குளூட்டாமைன் அதிகம் உள்ள காய்கறிகளுள் மிகவும் முக்கியமான ஒன்று பீட்ரூட். இதில் உள்ள அமினோ அமிலங்கள் குடலுக்கு முக்கியமானவை. குடலை பாதுகாக்க மற்றும் அழுத்தத்தில் இருந்து காப்பதில் குளுட்டாமைன்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

(7 / 10)

மூளை ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது - ரத்த ஓட்டம் அதிகரித்தால், அது மூளைக்கு நல்லது. உடற்பயிற்சியுடன் உணவில் நீங்கள் பீட்ரூட்டை சேர்த்துக்கொண்டால் அது உங்கள் உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். அதுவும் மூளையின் நினைவாற்றல் மற்றும் முடிவெடுக்கும் திறன் கொண்ட பகுதிக்கு தேவையான ரத்தத்தை அனுப்பும். இதில் உள்ள அதிகப்படியான நைட்ரேட்கள் உங்கள் மோட்டார் செயல்பாடுகளை அதிகரிக்கும்.

(8 / 10)

மெனோபாஸ்க்கு பிந்தைய காலத்திற்கு பயனுள்ளது - மெனோபாஸ்க்கு பிந்தைய காலத்தில் பெண்களுக்கு ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்கள் ஏற்படும் ஆபத்துக்கள் உள்ளது. எனவே உங்கள் உணவில் நைட்ரேட்கள் அதிகம் உள்ள உணவுப்பொருட்களை சேர்த்துக்கொள்ளவேண்டும். இது ரத்த அழுத்தத்தை முறையாக பராமரிக்க உதவும். உடற்பயிற்சிக்கு முன்னர் பீட்ரூட் சாறு பருகினால், உங்கள் உடலுக்கு, மனதுக்கும் இதமாக இருக்கும்.

(9 / 10)

ரேநாய்ட் ஃபினாமினன் அறிகுறிகளைப் போக்குகிறது - ரேநாய்ட் ஃபினாமினன் என்ற நோயின் அறிகுறிகளைப்போக்கும். இந்த நோயில் கால் மற்றும் கைகளின் விரல்களுக்கு ரத்தம் சரியாக பாயாமல் போகும். இதனால் வலி, குத்தல், குடைச்சல், மரத்துப்போதல் ஆகியவை ஏற்படும். அதை நீங்கள் பீட்ரூட்களை சாப்பிடுவதன் மூலம் சரிசெய்ய முடியும் என ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளது.

(10 / 10)

மற்ற கேலரிக்கள்