‘ஒருபுறம் திமுக அழைப்பு புறக்கணிப்பு.. மறுபுறம் மோடிக்கு கடிதம்’ புதிய ரூட்டில் ஜெகன் மோகன் ரெட்டி!
‘ஐயா, இந்த விஷயத்தில் உங்கள் ஆதரவை தாழ்மையுடன் கோருகிறேன். நாட்டின் சமூக மற்றும் அரசியல் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் திறன் கொண்ட பிரச்சினையின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டு, இந்த முக்கியமான கட்டத்தில் உங்கள் தலைமைத்துவமும் வழிகாட்டலும் மிகவும் முக்கியமானவை’

ஆந்திராவின் முன்னாள் முதல்வரும், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவருமான ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி, வரவிருக்கும் தொகுதி வரையறையில் மக்களவை அல்லது மாநிலங்களவையில் அதன் பிரதிநிதித்துவம் குறைவதை உறுதி செய்யும் வகையில் நடத்தப்படுவதை உறுதி செய்யுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
திமுக அழைப்பை புறக்கணித்த ஜெகன் மோகன் ரெட்டி
சென்னையில் நடக்கும் தொகுதி வரையறையை முன்னெடுக்கும் குழு கூட்டத்திற்கு, ஆந்திரா முன்னாள் முதல்வரும், ஒய்எஸ்ஆர் கட்சியின் தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டிக்கு திமுக சார்பில் நேரில் அழைப்பு விடுக்கப்பட்டது. கூட்டத்தை புறக்கணித்த ஜெகன்மோகன் ரெட்டி, தொகுதி வரையறை தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதே போல ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டியின் அறிவுறுத்தலின்படி, ஒய்.எஸ்.ஆர்.சி.பி நாடாளுமன்றத் தலைவர் ஒய்.வி.சுப்பா ரெட்டியும் அதே கடிதத்தை திமுக கட்சித் தலைவர்களுக்கு அனுப்பியுள்ளார். தொகுதி வரையறை செயல்பாட்டில் நியாயமான மற்றும் சீரான அணுகுமுறையின் அவசியத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்.