WorldShortestBodyBuilder: உலகின் குள்ளமான கின்னஸ் ஆணழகனுக்கு டும்டும்டும்!
தமது திருமண நிகழ்வு குறித்த காணொளியையும் இவர் தமது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
உலகின் மிகவும் குள்ளமான ஆணழகன் பிரதிக் விட்டலுக்கு திருமணம் நடந்துள்ளது. இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர் மகிழ்ச்சியுடன் தனது இஸ்டாகிராம் பதிவில் வெளியிட்டுள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்
உலகின் மிகவும் குள்ளமான ஆணழகன் ( Body builder) என்ற கின்னஸ் சாதனைக்குச் சொந்தக்காரரான பிரதிக் விட்டல் மொகித்தே, 28, திருமண வாழ்வில் அடியெடுத்து வைத்துள்ளார். இவர் மூன்று அடி நான்கு அங்குல உயரம் கொண்டவர். இந்நிலையில் 22 வயதான ஜெயாவைக் திருமணம் செய்துள்ளார். ஜெயாவும் பிரதிக்கைப்போல் குள்ளமானவர்தான்.
ஆணழகனாக விரும்பிய பிரதிக் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர். கடந்த 2012ஆம் ஆண்டில் அதற்கான பயிற்சிகளைத் தொடங்கினார். தமது உயரம் காரணமாக தொடக்கத்தில் இவர் உடற்பயிற்சிகளைச் செய்ய பெரும் சிரமப்பட்டார். ஆனாலும், மனந்தளராமல் விடாமுயற்சியுடன் தனது பயிற்சிகளை மேற்கொண்டார்.
உயரம் மிகவும் குறைவு என்பதன் காரணமாக தொடக்கத்தில் இவர் உடற்பயிற்சிகளைச் செய்ய கடும் சிரமப்பட்டார். ஆனால் தொடர்ச்சியாக, மனம் தளராமல் விடாமுயற்சியுடன் தன் இலக்கை நோக்கி பயணித்தார்.
கடந்த 2016ஆம் ஆண்டு முதன்முதலாக உடற்கட்டழகுப் போட்டியில் பிரதிக் கலந்துகொண்டார். இதையடுத்து அடுத்த 5 ஆண்டுகளுக்கு பிறகு 2021ம் ஆண்டு உலகின் ஆகக் குள்ளமான உடற்கட்டழகராக கின்னஸ் சாதனை அமைப்பு இவரை அங்கீகரித்தது. அப்போது அவர் ,
“கின்னஸ் சாதனை படைக்க வேண்டும் என்பது என் கனவாக இருந்தது. அதனைச் சாதித்ததே என் வாழ்க்கையில் ஆகப் பெரிய விஷயம்,” என்றார் பிரதிக். தம் மனைவி ஜெயாவை முதன்முதலில் பார்த்ததுமே தமக்குப் பிடித்துப்போனதாக இவர் குறிப்பிட்டார்.
மேலும் பிரதிக் விட்டலின் அனைத்து முயற்சிகளக்கும் அவரது குடும்பத்தினர் மிகவும் ஆதரவளித்துள்ளனர்.
சென்ற வாரம் நடந்த தமது திருமண நிகழ்வு குறித்த காணொளியையும் இவர் தமது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். இந்த வீடியோக்கள் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. பிரதிக் இன்ஸ்டாகிராமில் அதிக செல்வாக்கு பெற்றவர். இவரது உடற்பயிற்சி வீடியோக்களை சுமார் 2 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர். இந்நிலையில் தற்போது இவரது திருமண சடங்குகள் குறித்த வீடியோக்களை இவரது ரசிகர்கள் தொடர்ந்து ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்.
மேலும் வீடியோவை பார்த்த பலரும் பிரதிக் விட்டலுக்கும் அவரது மனைவி ஜெயாவிற்கும் தங்களது வாழ்த்துகளை பகிர்ந்த வண்ணம் உள்ளனர்
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.