World Population Day 2023 : ஆண்-பெண் சமத்துவம் வளர்ப்போம் – இந்தாண்டு உலக மக்கள்தொகை கருப்பொருள்
World Population day 2023 : எதிர்கால மக்களுக்கு நம்பிக்கை, வாய்ப்புகள், சாத்தியங்களை உருவாக்கி தருவதற்காக இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது. அனைவருக்கும் நிலையான ஒரு எதிர்காலத்தை உருவாக்கி தருவதில் கவனம் செலுத்துகிறது. 2030க்குள் அனைவருக்கும் நிலையான எதிர்காலம் என்பதே இதன் நோக்கம்.
மக்கள்தொகை பெருக பெருக உலக மக்கள்தொகை நொடிக்கு நொடி அதிகரித்து வருகிறது. அதுதொடர்பாக ஏற்படும் பிரச்னைகளும் பெருகி வருகிறது. ஏழ்மையில் இருந்து பொருளாதாரத்தில் இருந்து மன ஆரோக்கியம் வரை உலக மக்கள் தொகை பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி நிறைய விஷயங்களில் மாற்றம், உழைப்பு தேவை என்றும் சுட்டிக்காட்டுகிறது. இந்த உலக மக்கள்தொகை தினம் அதை நமக்கு நினைவூட்டுகிறது. இந்த பூமிபந்தில் வாழும் ஒவ்வொரு உயிரினத்துக்கும் சிறந்த வாழ்க்கை உருவாக்கி தர வேண்டும் என்ற எண்ணத்தையும் அது விதைக்கிறது.
உலக மக்கள்தொகை தினம் ஒவ்வொரு ஆண்டும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக கொண்டாடப்படுகிறது. மக்கள்தொகை அதிகரிப்பால் ஏற்படும் பிரச்னைகள் மற்றும் அதை நாம் எவ்வாறு கையாள வேண்டும் என்பதுதான் அந்த விழிப்புணர்வு.
உலக மக்கள்தினத்தை நாம் கடைபிடிக்கும் இந்த நேரத்தில் நாம் மனதில்கொள்ள வேண்டிய சில விஷயங்கள்.
ஒவ்வொரு ஆண்டும் ஜீலை 11ம் தேதி உலக மக்கள்தொகை தினம் ஜீலை 11ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு உலக மக்கள்தொகை தினத்திற்காக ஐ.நாவின் கருப்பொருள், ஆண்,பெண் சமம் என்பதன் சக்தியை உணர்வது, உலகின் எல்லையற்ற சாத்தியக்கூறுகளை திறக்க பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் குரலை மேலோங்கச் செய்வது என்பதாகும்.
இந்த சிறப்பான நாளை 1989ம் ஆண்டு ஜீலை 11ம் தேதி, ஐநாவால் தோற்றுவிக்கப்பட்டது. 1987ம் ஆண்டு உலக மக்கள்தொகை 5 பில்லியனை எட்டியது. அதுவே உலக மக்கள்தொகை தினம் கடைபிடிக்கப்படவேண்டும் என அறிவுறுத்தியது. இந்த தினத்தை முன்மொழிந்தவர் டாக்டர் கே.சி.ஷசாரியா.
உலக மக்கள்தொகை அதிகரிப்பால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை சுட்டிக்காட்டுவதில் உலக மக்கள்தொகை தினம் கவனம் செலுத்துகிறது. உலகின் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள், பொருளாதார பிரச்னைகள், ஏழ்மை என அனைத்தும் குறித்து நினைவூட்டுவது உலக மக்கள்தொகை தினத்தின் வேலை. அவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதும், அதற்கான மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக தொடர் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டுகிறது. எதிர்கால மக்களுக்கு நம்பிக்கை, வாய்ப்புகள், சாத்தியங்களை உருவாக்கி தருவதற்காக இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது. அனைவருக்கும் நிலையான ஒரு எதிர்காலத்தை உருவாக்கி தருவதில் கவனம் செலுத்துகிறது. 2030க்குள் அனைவருக்கும் நிலையான எதிர்காலம் என்பதே இதன் நோக்கம்.
இந்தாண்டு பெண்களின் உரிமையை பேசுகிறது. பெண்களுக்கு மறுக்கப்படும் கல்வி, வேலைவாய்ப்புகள், தலைமை நிலைகள், தங்களின் உடல் ஆரேக்கியம், குழந்தைபெறும் உரிமை, உடலுறவு கொள்ளும் உரிமை என அனைத்திலும் பெண்களுக்கே உரிமை இல்லாத நிலை ஏற்படுத்தி, அவர்களை வன்முறைக்கு ஆளாக்கி, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து, குழந்தை பெறுவதிலும், கர்ப்பத்திலும் 2 நிமிடத்துக்கு ஒரு உயிரிழப்பு என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே அதற்காக ஆண்-பெண் சமத்துவத்தை உருவாக்க வேண்டும் என்பது இந்தாண்டின் கருப்பொருள் ஆகும்.
டாபிக்ஸ்