Tamil News  /  Nation And-world  /  Woman's Body Found In Suitcase Near Mumbai Metro Train Construction Site

Crime: சூட்கேசில் இளம்பெண்ணின் சடலம்..மும்பையில் பகீர் சம்பவம்!

Karthikeyan S HT Tamil
Nov 20, 2023 11:59 AM IST

மும்பையில் கைவிடப்பட்ட சூட்கேசில் இருந்து பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் கண்டெடுக்கப்பட்ட சூட்கேஸில் இருந்து பெண் சடலமாக மீட்பு. (கோப்புபடம்)
மும்பையில் கண்டெடுக்கப்பட்ட சூட்கேஸில் இருந்து பெண் சடலமாக மீட்பு. (கோப்புபடம்)

ட்ரெண்டிங் செய்திகள்

மகாராஷ்டிர மாநிலம், மத்திய மும்பை பகுதியில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் சாந்தி நகரில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நேற்று மதியம் ஒரு சூட்கேஸ் கிடப்பதாக காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலையடுத்து உடனே அங்கு விரைந்த காவல்துறையினர் சூட்கேஸை கைப்பற்றி திறந்து பார்த்தனர். அப்போது அதில், பெண்ணின் சடலம் இருப்பதைக் கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் சடலத்தை உடற்கூராய்வுக்காக சிவில் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

சடலமாக மீட்கப்பட்ட பெண், யாரென்று இன்னும் அடையாளம் காணப்படவில்லை, ஆனால் பெண்ணின் சடலத்தைப் பார்க்கும்போது, ​​அவரது வயது 25-35 வயதிற்குள் இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அந்த பெண் டி-சர்ட் மற்றும் டிராக் பேண்ட் அணிந்திருந்தார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

மேலும், அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 302 (கொலை) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கொலையாளியைக் கண்டுபிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. பட்டப்பகலில் சூட்கேஸில் இருந்து ஒரு பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்