Viral Video: ஜிம்மில் கடுமையாக உடற்பயிற்சி செய்யும் 80 வயது மூதாட்டி!-வீடியோ வைரல்
அந்த மூதாட்டியின் உடல் தகுதியை கண்டு பலரும் திகைத்து நின்றனர்.
வயது என்பது வெறும் எண் என்பதை இந்த 80 வயதான மூதாட்டி, உடற்பயிற்சி கூடத்தில் குறிப்பிடத்தக்க பலத்தை வெளிப்படுத்தி அதை நிரூபித்தார். உடற்பயிற்சி செய்யும் பெண்ணின் வீடியோவை இன்ஸ்டாகிராமில் உடற்பயிற்சி பயிற்சியாளர் லாரா சோமர்ஸ் பகிர்ந்துள்ளார். வீடியோ வெளியிடப்பட்டதில் இருந்து, பலர் அதிர்ச்சியடைந்தது மட்டுமல்லாமல், அவரது உடல் தகுதியின் ரகசியம் குறித்து ஆச்சரியப்பட்டனர்.
அந்த பெண் லெக் ரைஸ் பயிற்சியில் செய்வதை வீடியோ காட்டுகிறது. இந்தப் பதிவின் தலைப்பில், சோமர்ஸ், "அவருக்கு 80 வயது ஆகிறது. நம்பமுடியாத வலிமையானவர். அவளுடைய கதையை அறிய விரும்பினேன்.
"ஜிம்மில் அல்லது நீங்கள் எங்கு பயிற்சி செய்தாலும், சிறிது சிறிதாக தொடர்ந்து செயல்படுங்கள். அவரைப் போல் வலிமை பெறவும் எனக்கு 30 ஆண்டுகள் உள்ளன. இது ஒருபோதும் தாமதமாகாது என்பதற்கு அவர் ஒரு எடுத்துக்காட்டு" என்று சோமர்ஸ் மேலும் கூறினார்.
இந்த பதிவு சிறிது நேரத்திற்கு முன்பு இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டது. வெளியிடப்பட்டதிலிருந்து, இது ஐந்து மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. இந்த பகிர்வுக்கு ஏராளமான லைக்குகள் மற்றும் பல கருத்துகள் உள்ளன. தன்னை உடல் ரீதியாக வலுவாக வைத்திருக்கும் பெண்ணின் முயற்சியை பலர் பாராட்டினர்.
ஒரு பயனர், "எனக்கும் அவரைப் போன்று பயிற்சியில் ஈடுபட வேண்டும் என இருக்கிறது" என்றார்.
மற்றொரு பயனர், " நீங்கள் இளம் தலைமுறையினருக்கு வழிகாட்டியாக இருக்கிறீர்கள். உங்கள் ஹார்டு ஒர்க்கிற்கு வாழ்த்துக்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
டாபிக்ஸ்