தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Wipro Executives Cannot Join These 10 Rival Firms For 12 Months After Exit

Wipro: Resign செய்திருந்தாலும் விப்ரோ ஊழியர்களுக்கு நிறுவனம் வைத்த ஆப்பு! இந்த கம்பேனிகளில் சேர்ந்தால் நடவடிக்கை தான்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 06, 2024 04:30 PM IST

விப்ரோ நிறுவனத்துக்கான ஒப்பந்தத்தில் தங்களது போட்டி நிறுவனங்களை குறிப்பிட்டு, ஊழியர்கள் பணியிலிருந்து விலகிய பன்னர் ஒரு வருட காலம் வரை அதில் சேரக்கூடாது என கூறப்பட்டுள்ளது. இதை மீறுவோர் மீது நடவடிக்கை பாயும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

விப்ரோ நிறுவனம் (கோப்புப்படம்)
விப்ரோ நிறுவனம் (கோப்புப்படம்)

ட்ரெண்டிங் செய்திகள்

பெங்களுருவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் விப்ரோ நிறுவனத்தில் பணிபுரிந்த முன்னாள் சிஎஃப்ஓ ஜதின் தலால் என்பவர், விப்ரோவின் போட்டி நிறுவனமான காக்னிசன்டில் பணிக்கு சேர்ந்த நிலையில், அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தங்களது நிறுவனத்துக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளுக்கு ரூ. 25. 15 கோடி (முழு பணமும் செலுத்தும் வரை ஆண்டுக்கு 18 சதவீதம் வரை வட்டியும் செலுத்த வேண்டும்) அளிக்க வேண்டும் என சட்டபூர்வாக கோரப்பட்டுள்ளது.

அத்துடன் சீனியர் நிர்வாகிகள் 12 மாதம் வரை பணியில் சேர்வதற்கு தடை செய்யப்பட்டிருக்கும் நிறுவனங்களாக அக்சென்ச்சர், கேப்ஜெமினி, காக்னிசன்ட், டெலாய்ட், டிஎக்ஸ்சி டெக்னாலஜி, எச்சிஎல், ஐபிஎம், இன்போசிஸ், டிசிஎஸ், டெக் மகேந்திரா ஆகியவை உள்ளன.

நஷ்டஈடு செலுத்துமாறு கோரப்பட்டிருக்கும் ஜதின் தலால் கடந்த செப்டம்பரில் விப்ரோ போட்டி நிறுவனமான காக்னிசன்ட் நிறுவனத்தில் பணிபுரிய சேர்ந்தார். முன்னதாக, விப்ரோவில் அவரது ஒப்பந்தத்தில் இதுதொடர்பாக தெளிவாக குறிப்பிட்டிருந்தபோதிலும், அவர் ஒப்பந்தத்தை மீறி செயல்பட்டுள்ளார்.

கடந்த 2002இல் விப்ரோவில் பணிபுரிய தொடங்கிய ஜலால், 2015இல் சிஎஃப்ஓ ஆனார். 2019இல் அவருக்கு கூடுதல் பொறுப்பாக தலைவர் பதவியும் வழங்கப்பட்டது. முக்கிய பொறுப்புகளில் பதவி வகித்த போதிலும், நிறுவனத்தின் மூலோபாயம் மற்றும் வணிகம் தொடர்பான ரகசியத் தகவலை மீறியுள்ளதாக சட்ட நடவடிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்